வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (03/02/2017)

கடைசி தொடர்பு:13:19 (03/02/2017)

கார்பன் ஃபைபர் ராயல் என்ஃபீல்டு பார்த்திருக்கிறீர்களா? #RoyalEnfield

சிம்பு, மஞ்சிமா மோகனுடன் தள்ளிப்போகாதே என்று பாடிக்கொண்டே நெடுஞ்சாலைப் பயணம் மேற்கொண்ட பைக் ராயல் என்ஃபீல்டு. ‘ஹேய்... என் RE வந்துருச்சுடா’ என்று குதூகலிப்பார் சிம்பு. அந்த பைக்குக்காகவே சோக்காளி பாடல் வேறு படத்தில் இருக்கும். அந்த அளவுக்கு பைக்கை நேசிப்பவரா நீங்கள்.. உங்கள் பைக்கை மாடிஃபிகேஷன் செய்ய வேண்டுமென்றால் இந்தக் கட்டுரையைப் படியுங்கள். ஆனால் சிம்புவுக்கு மஞ்சிமா மோகன் போல, உங்கள் கேர்ள் ஃப்ரெண்டுடன் போக முடியாது! ஏனென்றால்..

 DC Design

DC Design... மும்பையைச் சேர்ந்த இந்த நிறுவனம், கார்களை ரீ-டிஸைன் செய்வதில் புகழ்பெற்றது. வெளிப்புற டிஸைன் மட்டும் இல்லாமல். உட்புறத்திலும் கைவண்ணத்தைக் காட்டுவதில் வல்லவர்கள். தார், ஃபார்ச்சூனர், கயென், எக்கோ ஸ்போர்ட், டஸ்ட்டர், Q7, ரேஞ்ச் ரோவர் (SUV) - இனோவா, எவாலியா, எர்டிகா, விங்கர் (MPV) - சன்னி, எலான்ட்ரா, சிட்டி, S-க்ளாஸ் (SEDAN) - ஸ்விஃப்ட், போலோ, பீட், i20 (HATCHBACK) என இவர்கள் மாற்றியமைத்த கார்களின் பட்டியல் மிக நீளமானது. சில மாதங்களுக்கு முன்பு, வாட்ஸ் அப்பில் ''அம்பாஸடர் கார் மீண்டு(ம்) வரப் போகிறது'' என்ற செய்தியுடன் வந்த படங்களில் இருந்த, மேலே படத்தில் உள்ள கார், இவர்கள் வடிவமைத்ததுதான். DC Avanti-யும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 2 சீட் ஸ்போர்ட்ஸ் கார்தான். இப்படி கார்களைத் தொடர்ச்சியாகக் கஸ்டமைஸ் செய்து வந்தவர்கள், ஏனோ இதுவரை பைக்குகளை மாடிஃபிகேஷன் செய்ததில்லை. தற்போது நீங்கள் பார்க்கும் ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350 பைக் வாயிலாக அந்த குறையையும் சரிசெய்துவிட்டார்கள்.

ராயல் என்ஃபீல்டு

DC2 Carbon Shot எனப் பெயரிடப்பட்டுள்ள இது, ரெட்ரோ மாடர்ன் பாணியிலான பாடி கிட்டைக் கொண்டுள்ளது. எனவே வழக்கமான க்ளாஸிக் பைக்குடன் ஒப்பிடும்போது, நீர்த்துளி போன்ற பெட்ரோல் டேங்க், அழகாகச் செதுக்கப்பட்ட பின்பக்க ஃபெண்டர், சிறிய சைஸில் முன்பக்க ஃபெண்டர், வட்டமான பேட்டரி பாக்ஸ் மற்றும் ஏர் ஃபில்டர் பாக்ஸ் ஆகியவை புதிதாக இடம்பெற்றுள்ளன. இதன் ஸ்பெஷல் என்னவென்றால், மேலே சொன்ன அனைத்தும் எடை குறைவான, ஆனால் விலை அதிகமான கார்பன் ஃபைபரால் செய்யப்பட்டுள்ளன என்பதுதான்!  இன்னொரு விஷயம், ‘தனியாகத்தான் போக முடியும்’ என்று முதல் பத்தியில் சொன்னதற்காக காரணம் இதுதான்.. இதில் பில்லியன் சீட்  இல்லை! ஸ்டைலான சிங்கிள் சீட்டைக் கொண்டிருக்கும் இதில் ஹெட்லைட், டெயில் லைட், இண்டிகேட்டர்கள் அனைத்தும் LED மயம்! 

ராயல் என்ஃபீல்ட்

ஆனால் ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் பைக்கின் அடிப்படை பாகங்களான Single Downtube ஃப்ரேம், கேஸ் சஸ்பென்ஷன், ஃப்ளாட் ஹேண்டில்பார், MRF டயர், Bybre டிஸ்க் பிரேக், ஸ்போக் வீல், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் ஆகியவை இதிலும் தொடர்கின்றன. இந்த மாடிஃபிகேஷன் உங்களுக்குப் பிடித்திருந்தால், அதனை உங்களது ராயல் என்ஃபீல்டு பைக்கில் செய்ய விரும்பினால், நீங்கள் செலவழிக்க வேண்டியது ஜஸ்ட் 76 ஆயிரம் ருபாய்தான் மக்களே! தற்போது கருப்பு நிறம் தவிர, சிவப்பு மற்றும் நீலம் எனும் இரண்டு புதிய நிறங்களை அறிமுகப்படுத்தியுள்ளது DC Design. கடந்த ஜனவரி 25, 2017 முதலாக இதற்கான புக்கிங் துவங்கிவிட்டதுடன், 5,000 பைக்குகள் மட்டுமே ரி-மாடிஃபிகேஷன் செய்யப்பட உள்ளன. எனவே 25,000 ரூபாயைச் செலுத்தி முதலில் பாடி கிட்டைப் புக் செய்பவருக்கே முன்னுரிமை! புக்கிங் செய்தவர்களுக்கு 5 மாதங்களில் பைக்கை மாடிஃபிகேஷன் செய்து தருகிறார்கள். ஜனவரியில் புக் செய்தவர்களுக்கு, ஜூன் 2017 மாதத்தில் இந்த DC2 Carbon Shot பைக்கின் டெலிவரி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Royal Enfield

பைக்கிலியே பயணம் செய்ய நினைப்பவர்களுக்கான சாய்ஸில் ராயல் என்ஃபீல்டு நிச்சயம் இருக்கும். ஒரே ஒரு Back Pack மட்டும் எடுத்துக்கொண்டு இதில் சுற்றலாம் என்ற ஆசை நிச்சயம் இந்நேரம் உங்களுக்கு வந்திருக்கும்! ஆல் த பெஸ்ட் ப்ரோ! 

 - ராகுல் சிவகுரு

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்