Published:Updated:

Covid-19 நெருக்கடியும் முதலாளித்துவமும்: நுகர்வோர்களிடம் 8 மாற்றங்கள்!

நுகர்வோர்
நுகர்வோர்

தொழிலாளர்களுக்குத் திரும்ப வேலை கிடைத்தாலும், திடீரென்று ஏற்பட்டிருக்கும் வேலை இழப்பு மனவேதனை அளிக்கக்கூடியதாகும். அவர்கள் செலவு செய்வதிலும், சேமிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கத் தொடங்கி யிருப்பார்கள்

கோவிட்-19 நெருக்கடி முடியும்போது, முதலாளித்துவம் நிறையவே மாறியிருக்கும். அப்போது என்னென்ன மாற்றங்கள் சமூகத்திலும், நுகர்வோர்களிடமும் ஏற்பட்டிருக்கும் என்று இப்படி பட்டியலிடுகிறார் பிலிப் கோட்லர்:

1. பலவீனமான சில நிறுவனங்களும், பிராண்டுகளும் மறைந்து போகலாம். அதற்கு மாற்றாக நம்பகமான, திருப்தி அளிக்கக்கூடிய பிராண்டுகளை நுகர்வோர்கள் கண்டறிந்திருப்பார்கள்.

2. நமது உடல் ஆரோக்கியம் எந்த அளவுக்குப் பலவீனமாக இருக்கிறது என்பதை கொரோனா வைரஸ் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. கூட்டத்தில் சென்றால் ஜலதோஷம் தொற்றிக்கொள்ளும்; ஒருவருக்கொருவர் கை குலுக்குவதை நிறுத்த வேண்டும்; ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டு நுண்மிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கி இருக்கும்.

3. நமது மருத்துவ அமைப்பின் போதாமையை அதிக விலை கொடுத்து தெரிந்து கொண்டிருப்பது அதிர்ச்சியான விஷயம். மருத்துவமனைக்கு வெளியே நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் அதிகமான அளவுக்கு உருவாகியிருக்கும்.

Covid-19 நெருக்கடியும் முதலாளித்துவமும்: நுகர்வோர்களிடம் 8 மாற்றங்கள்!

4. தொழிலாளர்களுக்குத் திரும்ப வேலை கிடைத்தாலும், திடீரென்று ஏற்பட்டிருக்கும் வேலை இழப்பு மனவேதனை அளிக்கக்கூடியதாகும். அவர்கள் செலவு செய்வதிலும், சேமிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கத் தொடங்கி யிருப்பார்கள் .

5. வீட்டுக்குள்ளேயே இருப்பதால், பெரும்பாலான நுகர்வோர்கள் அவர்களுக்குத் தேவையான உணவுகளைத் தயார் செய்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். அதிகமான வீட்டுச் சமையல், காய்கறிகளை வீட்டிலேயே வளர்ப்பது என்பதுடன் வெளியே சென்று சாப்பிடுவதும் குறைவாக இருக்கும்.

6. நம்முடைய குடும்பம், நண்பர்கள், சமூகத்தின் தேவைகள்மீது நாம் அதிக மதிப்பு வைப்போம். சமூக ஊடகம் மூலம் நம் குடும்பத்தினரையும் நண்பர்களையும் நல்ல, ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடவும், தேவைப்படும் ஆடைகளையும், பொருள்களையும் மட்டுமே வாங்கும்படியும் கூறுவோம்.

7. பிராண்டுகள், அவற்றின் நோக்கங்கள், அவை ஒவ்வொன்றும் பொதுமக்களின் நன்மைக்கு எவ்வாறு சேவை செய்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ள நாம் அனைவருமே விரும்புவோம்.

Covid-19 நெருக்கடியும் முதலாளித்துவமும்: நுகர்வோர்களிடம் 8 மாற்றங்கள்!

8. நாம் வாழும் பூமியின் பலவீனம், காற்று, நீர் மாசுபாடு, நீர்ப் பற்றாக்குறை, இன்னும் சில பிரச்னைகள் குறித்து மக்கள் அதிக விழிப்புடன் இருப்பார்கள்.

'நவீன சந்தைப்படுத்தலின் தந்தை' என்று புகழப்படும் பிலிப் கோட்லர் எழுதி உலக அளவில் கவனம் ஈர்த்த கட்டுரையின் சுருக்கமான வடிவத்தை நாணயம் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > கொரோனா... நுகர்வோர்கள் எப்படி மாறுவார்கள்? - பிலிப் கோட்லரின் சிந்தனை..! https://bit.ly/2EiG8WB

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு