வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (09/02/2017)

கடைசி தொடர்பு:10:20 (09/02/2017)

பஞ்சபூதங்கள் மிரட்டும் உலகின் அதிக ஆபத்து நிறைந்த இடங்கள் இவைதான்..!

லையில் இருந்து கடல் வரை இயற்கை மிகவும் அழகானது. அதற்கு இணையாக ஆபத்தும் நிறைந்தது. உலகின் அதி ஆபத்தான, இயற்கை சீறும் இடங்கள்தான் இவை..! 

தண்ணீர்:

2012ம் ஆண்டில் மட்டும் கடலில் 1051 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக சர்வதேச கடல் அமைப்பு தெரிவித்துள்ளது. சுனாமிகள் பெரும்பாலும் பசிஃபிக் பெருங்கடலில்தான் ஏற்படுகின்றன. கிட்டத்தட்ட 71%. நார்வேயில் அமைந்துள்ள 'சால்ட்ஸ்ட்ராமென் ஸ்ட்ரெய்ட்' கடல்தான் உலகத்திலேயே மிக அதிகமான மற்றும் வேகமான நீரோட்டத்தைக் கொண்ட கடல். இங்கு உருவாகும் நீர்சுழற்சி அதீத வேகத்திலும், மிகுந்த ஆழத்திலும் உருவாவதால் இது மிகவும் ஆபத்தான இடமாகக் கருதப்படுகிறது. நிறைய ஆராய்ச்சிகளுக்குப் பின் ஓரளவுக்கு கடலின் நீரோட்டத்தை கணித்து, நீரில் மூழ்காத படகில் பயணம் செய்ய மட்டும் இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீறினால், கடல் மாதாவுக்கு உயிர் அர்ப்பணம்தான். 

சால்ட்ஸ்ட்ராமென் ஸ்ட்ரெய்ட் கடல் ஆபத்து

இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் மாலத்தீவுகள் அழிந்துவரும் இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 'The emphemeral isles', அதாவது குறுகிய காலமே இருக்கக்கூடிய தீவு என்று பொருள். மாலத்தீவுகள் இந்த நிலையை எட்ட, மாறிவரும் தட்ப வெப்ப நிலைகளே காரணம். 

வானம்:

”மின்னல் ஒரே இடத்தில் மின்னாது” என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதையெல்லாம் நம்பாதீங்க. வெனிஸுலாவில் இருக்கும் மாரகைபோ (maracaibo) ஏரிதான் உலகிலே வெளிச்சமான இரவை காண்கிறது. 9 மணி நேரம் வரை தொடர்ந்து மின்னல்கள் மின்னிய வரலாறு இதற்குண்டு. இந்த இடம்தான் உலகின் “லைட்னிங் கேப்பிட்டல்” என்கிறார்கள். “மின்னல்கள் கூத்தாடும்” பாடலை இங்கே படமாக்கியிருக்கலாம்.

மாரகைபோ மின்னல்

காற்று:

ஆப்பிரிக்காவில் நிறைய அபாயகரமான நதிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. 'லிம்னிக் எரப்ஷன்' எனப்படும் புவிமாற்றத்தால் ஏற்படக்கூடிய நதிகளான இவை, மிகவும் ஆபத்தானவை. அதாவது நதியின் அடியில் இருந்து புகைமண்டலம் வெளிப்படும் அதில் கார்பன் டை ஆக்ஸைடு இருக்கும். நையோஸ் நதி மற்றும் கிவு நதி இந்த லிம்னிக் எரப்ஷனால் பாதிக்கபட்டிருக்கின்றன. 980-களில் ஏற்பட்ட இந்த எரப்ஷனால் 3,500 கால்நடைகள் உள்ளிட்ட பல ஆயிரம் உயிரினங்கள் பறிபோயிருக்கின்றன. இங்கு வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடை குழாய்கள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுருந்தாலும், இன்றளவும் அங்கு பாதிப்புகள் அதிகமாகவே காணப்படுகிறன. கிவு நதியில் கார்பன் டை ஆக்ஸைடுடன் மீத்தேன் வாயுவும் வெளிகுயாவதால் இந்த வாயுவை உறிஞ்சி அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க உள்ளனர்.

புயல், சூறாவளி இரண்டும் காற்றின் அடிப்படையில் ஏற்படும் இயற்கை பேரிடர்கள். பொதுவாக மிகவும் வேகமாக சுழன்று வரும் புயலோ அல்லது சூறாவளியோ அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் சுழன்று வருகயில் அதன் வேகம் தணிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும். எனினும் புயல்களின் வீரியத்தை எப்போதும் 100% சரியாகக் கணித்துவிட முடியாது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதுபோன்ற புயல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது, கரீபியன் தீவுகள். இதனால் அங்குள்ள மரங்கள், காடுகள், அதில் வாழும் உயிரினங்கள் அனைத்துமே பாதிக்கபட்டுள்ளன.

2016ம் ஆண்டில் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக வாண்டாவ் அறிவிக்கபட்டுள்ளது. புயல், எரிமலைச்சீற்றம், பூகம்பம் என அனைத்து பேரிடர்களாலும் இந்த நகரம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பூமி:

நிலநடுக்கம், மற்ற பேரிடர்களைவிட சற்றே அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. பூமியிம் மேல் ஓடு, நகரும் தட்டுகளால் ஆனது. இந்த தட்டுகள் ஒன்றுக்கு ஒன்று எதிரான திசையில் நகரும் போது நில அதிர்வலைகள் ஏற்பட்டு நிலநடுக்கம் ஏற்படும். ஃபிலிப்பைன்ஸ் நகரில் 10ல் 8 நகரங்கள் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

1556ல் சைனாவில் உள்ள ஷான்சி நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 80,0000 மக்கள் உயிரிழந்துள்ளார்கள். வட அமெரிக்காவில் இருக்கும் சான் ஆன்டிரியாஸ் நகரமும் இந்த டேஞ்சரஸ் பட்டியலில் அடங்கும்.

நெருப்பு:

தனாகி எரிமலை

மலையின் அடியில் இருக்கும் தட்டுகள் எதிர் திசையில் திரும்புவதால் மாக்மா வெளிப்படுகிறது. கடந்த 400 வருடங்களில் சுமார் 2,00,000 மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தியோப்பியாவில் உள்ள தனாகி நகரம்தான் உலகத்திலேயே எரிமலையால் அதிகம் பாதிக்கப்பட்ட, அதிக ஆபத்து நிறைந்த இடம். உலகத்தின் மிக வெப்பமான இடமாக கருதப்படும் இந்த நகரம், எரிமலை சீற்றத்தால் நீர்வளம் குறைந்து உப்பரித்து காணப்படுகிறது. இப்போது இங்கு யாரும் வசிக்கவில்லை. 1815-ம் ஆண்டு சம்பாவா தீவுகளில் உள்ள தம்போரா எரிமலை சீற்றத்தால் 70,000 மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலே சொன்ன இடங்களில் ஏதாவது ஒன்றில் நாம் பிறந்திருந்தால்..?! சிக்னலில் நிற்பதற்கே 'ச்சே ஊரா இது?' என்று சலிப்பவர்கள், இப்போது உங்கள் ஊரை ஒருமுறை நினைத்துப் பாருங்கள்... 'தப்பிச்சோம் சாமி' என்று பெருமூச்சு வரும்! 

- எஸ். எம். கோமதி (மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க