வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (12/02/2017)

கடைசி தொடர்பு:17:54 (13/02/2017)

பயணங்கள் - செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை... சில டிப்ஸ்! #TravelTips

பயணங்கள்

ம் வாழ்வில் முக்கியமான பங்கை வகிப்பது பயணங்கள் தான். இந்தியாவிற்குள் பயணித்தாலும் சரி, வெளி நாட்டிற்கு பயணித்தாலும் சரி, ஒவ்வொரு பயணமும் வாழ்க்கைக்கு தேவையான ஏதோ ஒன்றை நமக்கு கற்று கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றன. பயணத்தின் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க சில விஷயங்களை செய்ய வேண்டும், முக்கியமாக சில விஷயங்களை செய்யாமல் இருக்க வேண்டும். அவை என்னவென்ற தொகுப்பே இது.

ஹோட்டல் :

ஹோட்டல்
 

நாம் எந்த ஹோட்டலில் இருக்க போகிறோம் என்பது நம் பயணத்தின் ஒட்டுமொத்த அனுபவத்தையும் மேம்படுத்தலாம் அல்லது கெடுத்து விடலாம். எனவே, நாம் எந்த ஊருக்கு செல்கிறோமோ அந்த ஊரின் சுற்று வட்டாரங்களில் விசாரித்து சரியான ஹோட்டலை தேர்வு செய்ய வேண்டும். அந்த ஊரின் தன்மையை புரிந்து கொள்ள ஹோட்டல் நிர்வாகி உதவியாக இருப்பார்.

மொழி :

ஒவ்வொரு ஊரிலும் பேசப்படும் மொழியை முழுமையாக கற்று கொள்வது இயலாதது. எனினும் ‘ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா’ என்று தவறாக ஓரிரு வார்த்தைகளை பேசினாலும் அது நகைச்சுவையான அனுபவமாக அமையும். சில நேரங்களில் அடியையும் வாங்கி தரும். எனவே சரியான நபரிடம் தேவையான வார்த்தைகளை கேட்டறிந்து பேசுங்கள்.

உடை :

உடை

பயணத்தின் போது செல்லும் நாட்டிற்க்கு ஏற்ப உடை அணிவது அவசியம். சென்ற ஊரின் உடை மிக அந்நியமாக இருந்தாலும், அதை அணிந்து நடக்க தெரியாமல் நடந்து அதில் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று பயணத்தை முழுமையாக ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். சுவிட்சர்லாந்து சென்று வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்வதில் என்ன இருக்கிறது?  

நடத்தை:

ஒரு திரைப்படத்தில் விவேக் சிங்கப்பூர் சென்று இந்தியாவில் செய்வது போல் கோவில் சுவரில் கிறுக்குவார். அதற்காக அவருக்கு காவலரிடமிருநது அடி கிடைக்கும். உங்கள் ஊரின் சட்டத்தை போலவே அனைத்து ஊர்களிலும் இருக்காது. எனவே, உள்ளூர் மக்களின் வாழ்க்கைக்கு எந்த இடையூறும் விளைவிக்காமல் பயணம் செய்வது நல்லது.

உள்ளூர் பொருட்கள்:

ஒவ்வொரு பயணத்திலும் நினைவாக அவ்வூரின் பொருட்கள் ஏதாவது வாங்கி வாருங்கள். வீட்டை அலங்கரிக்கும் பொருளோ, அல்லது அவ்வூரின் உணவு பொருளோ. பயணத்தின் நினைவிற்கு மனதில் ஒரு நீங்காத இடத்தை அது பெற்றுத்தரும்.

பயணங்கள்

உள்ளூர் வழிகாட்டி:

நீங்கள் செல்லும் ஊரில் ஓர் உள்ளூர் வழிகாட்டியை உடன் அழைத்து செல்லுங்கள். சுற்றுலாத் தலங்களை பார்ப்பது மட்டுமன்றி அந்த தலத்தின் வரலாறை அவர் கூறுவார். அப்படியா? என்று ஆச்சரியப்பட்டு வாயை பிளக்க, ஊரின் வரலாற்றை தெரிந்த ஒரு வழிகாட்டி அவசியம். பெரும்பாலும் கோயில்களில் கைடு இருப்பார்கள். ஊர் சுற்ற என்றால் அந்த ஊரைப் பற்றித் தெரிந்த ஒரு நண்பனை அழைத்துக் கொண்டு சுற்றுவது நலம்.

இயற்கை :

இது உங்கள் பயணத்தின் அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் மற்றவர்களின் அனுபவத்தையும் மேம்படுத்த மிக முக்கியம். இயற்கைக்கு தீங்கு விளைவிக்காமல் பயணம் செய்யுங்கள். பிளாஸ்டிக் பொருட்களை தூக்கி எறிவது போன்றவற்றை செய்ய வேண்டாம். சுற்றுலா தளத்தின் பெருமையை பாதுகாப்பது பயணிகளின் கடமை.

’பயணத்திற்காக தான் புகைப்படம், புகைப்படத்திற்காக பயணமல்ல’

புகைப்படம்

உங்கள் பயணத்தின் நினைவாக சில புகைப்படங்கள் தேவை தான் என்றாலும், புகைப்படங்கள் எடுப்பதையே பயணம் முழுவதும் செய்யாதீர்கள். அது சரியான பயணமாக இருக்காது. பயணத்தை அனுபவிப்பதற்கு இடையிடையே ஓரிரு படங்கள் எடுத்துக்கொள்வது தவறில்லை. ஆனால் படம் எடுப்பதற்காகவே சில அரிய நிகழ்வுகள், காட்சிகளை தவற விட்டுவிடாதீர்கள்.

- ம. சக்கர ராஜன்

மாணவ பத்திரிகையாளர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்