வெளியிடப்பட்ட நேரம்: 04:04 (13/02/2017)

கடைசி தொடர்பு:10:50 (13/02/2017)

பாலுமகேந்திராவின் நினைவுதினம் இன்று..! மிஸ் யூ பாலுமகேந்திரா சார்..!

யக்குநரும் ஒளிப்பதிவாளருமான செல்லுலாய்ட் கலைஞர் 'பாலுமகேந்திராவின்' உயிர் காற்றில் கரைந்த தினம் இன்று. பாலுமகேந்திரா அவர்கள்  தமிழில் வீடு, சந்தியா ராகம், வண்ண வண்ண பூக்கள் ஆகிய படங்களை இயக்கியதற்காக மூன்றுமுறை, தேசிய விருதுகளை அள்ளி,தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தவர்.


பாலு மகேந்திரா

தவிர, கன்னடத்தில் 'கோகிலா', தமிழில் 'மூன்றாம் பிறை' ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவுக்கு என இரண்டு முறை தேசிய விருதுகளைப்பெற்றவர். தமிழில் 'உலக சினிமா' படைப்பது என்னும் நோக்கம் கொண்டிருந்த பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்துதான்,இன்றைய சினிமாவின் நட்சத்திர இயக்குநர்களான பாலா, வெற்றிமாறன், சீனு ராமசாமி ஆகியோர் உருவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய சினிமா அர்ப்பணிப்பாளரின் நினைவு தினம் இன்று.

நீங்க எப்படி பீல் பண்றீங்க