வெளியிடப்பட்ட நேரம்: 14:08 (13/02/2017)

கடைசி தொடர்பு:14:28 (13/02/2017)

ஓரளவுக்குத்தான் பொறுமை! - இது வேற வேற வெர்ஷன்!

'ஓரளவுக்குத்தான் பொறுமை'ன்னு 'சின்னம்மா' சொன்னாலும் சொன்னாங்க. 'நாங்க மட்டும் என்ன தக்காளித் தொக்கா... இந்தா போறேன் சொசைட்டிக்கு...' னு நம்மாளுக எல்லோரும் ஒட்டுமொத்தமா கிளம்பி, செய்யவேண்டியதைச் செய்வோம்னு மிரட்டினா இப்படித்தான் ஆகும். 

ஓரளவுக்குத்தான் பொறுமை

* காதலர் தினம் வரப்போற நேரத்துல அதையும் நிம்மதியா கொண்டாடவிடாம முதல்வர் பஞ்சாயத்து நடத்திக்கிட்டு இருக்கீங்களே... 'ஓரளவுக்குத்தான் பொறுமை' இதுக்கு மேல காத்திருக்க முடியாது. நாளைக்கு நாங்க செய்யவேண்டியதைச் செய்வோம். - இளசுகள்

* ஒரு டி.வி சீரியலைக் கூட உருப்படியா பார்க்கவிடாம, பி.ஜி.எம் போட்டு ப்ரேக்கிங் ப்ரேக்கிங்னு ஹாரன் அடிச்சிக்கிட்டே இருக்கீங்களே... 'ஓரளவுக்குத்தான் பொறுமை'. இதுக்கு மேல கூவுனா நியூஸ் சேனல்களை ப்ளாக் பண்ணிட்டு, டப்பிங் சீரியல் பார்க்கிறதைத் தவிர வேற வழியே இல்லை. - குடும்ப ஸ்திரிகள்

* மெஜாரிட்டி எம்.எல்.ஏ க்களை ஜெயிக்க வெச்சும் ஒரு முதல்வரைத் தேர்ந்தெடுக்குறதுக்கு இம்புட்டு அக்கப்போரா..? 'ஓரளவுக்குத்தான் பொறுமை'. ஆட்சியைக் கலைக்க வெச்சுட்டு அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமாகிருவோம். - தி.மு.க தொண்டர்கள்

* இப்பவே கொலப்பசியா இருக்கு. இன்னும் இட்லிச் சட்டியில மாவையே ஊத்தலை. 'ஓரளவுக்குத்தான் பொறுமை'. இன்னும் லேட் ஆச்சுனா தெருமுக்குல இருக்கிற ஹோட்டல்ல போய் தோசை சாப்பிடப் போயிடுவேன். - வீடுகளில் மகன்கள். 

* இருவத்தி எட்டு வயசாகியும் பெத்த புள்ளைக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு தோணுதா உங்களுக்கு? 'ஓரளவுக்குத்தான் பொறுமை' இனியும் இதுக்கு ஒரு முடிவு எடுக்கலைன்னா நானே பொண்ணுப் பார்க்கக் கிளம்புறதைத் தவிர வேற வழியே இல்லை. - எட்டுப்பட்டி ராசாக்கள்.

* இன்பாக்ஸ் கதவை 'டம்டம்'னு தட்டியும் ஒரு ரிப்ளை கூட இன்னும் வரலை உங்கிட்டே இருந்து. இப்படியே போனா உன்னோட பப்ளிக் போஸ்ட்லயே வந்து கமெண்ட் பண்ணுவேன் பார்த்துக்க... 'ஓரளவுக்குத்தான் பொறுமை' - மெசேஜில் போராளி. 

ஓரளவுக்குதான் பொறுமை

* காத்து வாங்கக்கூட வெளியில் போகவிடாம ரூமுக்குள்ள அடைச்சு வெச்சு செக்யூரிட்டி போட்டுட்டு, 'சுய விருப்பத்தோடதான் இங்கே இருக்கோம்'னு வேற மண்டையில தட்டிச் சொல்ல வைக்கிறீங்க. 'ஓரளவுக்குத்தான் பொறுமை' இப்படியே போனா வாட்ஸ்-அப் வீடியோவுல வாக்குமூலம் கொடுப்போம். - ரிசார்ட்டில் எம்.எல்.ஏ க்கள். 

* தமிழ்நாட்டுல உள்கட்சிப் பஞ்சாயத்துல ஆளாளுக்கு என்னைக் குறுக்க இழுத்துப்போட்டு விளையாடுறது நல்லா இல்லை. 'ஓரளவுக்குத்தான் பொறுமை' இப்படியே போனா செய்யவேண்டியதைச் செஞ்சு கவர்னர் ஆட்சியை அமல்படுத்திடுவேன். - கவர்னர் வித்யாசாகர் ராவ்.

* ஒவ்வொருத்தரா விலகுறதும், எதிரணியில் சேர்ந்ததும் அறிக்கை விடுறதுமா இருந்தா, எம்புட்டு செய்திகளைத்தான் நாங்க கவர் பண்றது? 'ஓரளவுக்குத்தான் பொறுமை' ஒழுங்கா எல்லோரும் கூடிப்பேசி, மொத்தமா சேர்ந்து பேட்டி கொடுங்க. - பத்திரிகையாளர்கள். 

* என்னமோ உலகத்தில இல்லாத பாட்டுக்கு மியூசிக் போட்டமாதிரி, பாட்டை ரிலீஸ் பண்ணியும், இசையமைப்பாளர் பெயரை 'மிஸ்டர்.எக்ஸ்'னு இன்னும் மறைச்சுவெச்சு பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருக்கிற கௌதம் மேனனுக்கு, 'ஓரளவுக்குத்தான் பொறுமை' இன்னிக்கும் யாருனு சொல்லலைன்னா எஸ்.ஏ.ராஜ்குமார் னு கிளப்பி விட்டுட்டுப் போய்க்கிட்டே இருப்போம். - ரசிகர்கள்.

- விக்கி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்