வெளியிடப்பட்ட நேரம்: 16:01 (13/02/2017)

கடைசி தொடர்பு:09:21 (14/02/2017)

ஆபரேஷன் ஒரகடம், ஆபரேஷன் கூவத்தூர்...! - சசிகலாவிற்கு சில 'கபீம் குபீம்' ஐடியாக்கள்

எந்த நேரத்துல தன்னோட ஆதரவாளர்கள்லாம் எகிறிக் குதிச்சு ஓடுவாங்கன்னு தெரியாத நிலைமையில இருக்கிறார் சிங்கம் சசிகலா. தாவி ஓடவிடாம அவங்களை எல்லாம் தக்கவச்சுக்க, மக்கள்கிட்ட நல்லபேர் வாங்க என்னவெல்லாம் பண்ணலாம்னு சின்னதா சில ஐடியாஸ்..

சசிகலா

ஆபரேஷன் GPS:

எம்.எல்.ஏக்கள் எல்லாருடைய செல்போன்களையும் வாங்கி olx ல் விற்றுவிட்டு புது செல்போன்களை வாங்கி, அதுல  ரெண்டாயிரம் ரூபாய் நோட்டுல பொருத்த வச்சிருந்த(!) 'சிப்'பை எல்லாம் சீப்பான விலைக்கு வாங்கி செட் பண்ணி விடலாம். அப்புறம் என்ன... ட்ரேஸ் பண்ணினால் எம்.எல்.ஏக்கள்  எஸ்கேப் ஆகி எதிர்முகாமுக்குத் தாவுறதைத் தடுத்து ஓ.பி.எஸ்ஸை ஜி.பி.எஸ்ஸால் வெல்லலாம்!

ஆபரேஷன் பாஸ்போர்ட்:

பிரச்னைனு வந்த உடனேயே உஷாராக அத்தனை சிங்கங்களையும்  பஸ்ஸில் அள்ளிப்போட்டுக் கதறக்கதற  கூவத்தூர்  டூர்  போனது போல அவசர நிலையோ, கையறு நிலையோ வந்துவிட்டால்  அம்புட்டுப்பேரையும் கொத்தாக ஃப்ளைட்டில் அள்ளிப்போட்டு கட்சி அலுவலாகச் செல்வதுபோல ஏதோ ஒரு  வெளிநாட்டு கூவத்தூருக்குக் கொண்டு சென்றுவிடலாம். பாஸ்போர்ட்டை சசிகலா வெச்சிக்கிட்டா யாரும் வீடு திரும்ப முடியாது!

ஆபரேஷன் டிகிரி: 

அதிரடி முடிவுகள் கைகொடுக்காதபோது இந்த ஆபரேசன் Kயானது உதவி செய்யும். `ஆமாம், இனிமேல் உங்களைக் குனியச் சொல்லமாட்டேன். குப்புறவிழுந்து கும்பிடவெல்லாம் சொல்லமாட்டேன்'னு சாஃப்டாகவும் சொல்லிப்பார்க்கலாம். குனிஞ்சே அலுத்துப்போன கட்சிக்காரங்களுக்கு அது ஒரு புத்துணர்ச்சி முகாமுக்கு போயிட்டு வந்த யானையைப்போல இல்லல்ல... சிங்கத்தைப்போன்ற ஃபீலைக்கொடுத்து அவர்களை  ஃபுல் ஃபார்மில் கட்சிக்காக இயங்க வைக்கும்.

ஆபரேஷன் ஒரகடம்:

அதுவும் கை கொடுக்கவில்லை என்றால் கண்டிப்பாக இந்த ஆபரேசன் ஒரகடமானது நிச்சயம் வேலை செய்யும். ஆமாம் மக்களே, எஸ்கேப் ஆகி ஓடுகிற எம்.எல். ஏக்களை எல்லாம் அலேக்காகத் தூக்கிக் கொண்டு வந்து திரும்பவும் கட்சியிலேயே அட்மிட் செய்கிற பொதுமக்களுக்கு ஒரகடத்திலே ஒரு  ட்ரிப்ள் பெட்ரூம் வீடும், தகவல் மட்டும்  சொல்பவர்களுக்கு ஊர்ப்பக்கம் ஒரு  உரக்கடையும் வைத்துத்தரப்படும் என பரிசுகள் அறிவித்துப் பறக்க விடலாம். 

ஆபரேஷன் விஜயகாந்த்:

தனியா விட்டாத்தானே எஸ்கேப் ஆவாங்க அதனால் எல்லாரையும் ஒரே இடத்தில் வரிசையாக தூங்கவச்சு வானத்தைப்போல அண்ணன் விஜயகாந்த் மாதிரி இரவெல்லாம் தூங்காமல் கண்விழிச்சுக்  காவல் காக்கலாம். ஆத்தி இது  விஜயகாந்தை ஞாபகப்படுத்துதேன்னு ஃபீல் ஆகி தே.மு.தி.க வில் போய்ச்சேரும் வாய்ப்பிருந்தாலும், அ.தி.மு.க என்றாலே அலர்ஜி என்றும், உட்கட்சி விவகாரத்திலே தலையிட முடியாது மக்கழே...னு விஜயகாந்தே சொல்லும் வாய்ப்பிருப்பதனாலும் அதை நினைத்து சசிகலா பயப்படத்தேவையில்லை.

ஆபரேஷன் கூவத்தூர்:

எம் எல் ஏ ஆபீஸ் இங்கே இருக்கும்போது என்னத்துக்கு கூவத்தூர்ல போயி  டேரா போட்டிருக்கீங்க என்கிற மிஸ்டர் பொதுஜனத்தின் கேள்வியைச் சமாளிக்கவும், இனிமேல் கேள்வி எழுப்பாமல் இருக்கவும்  கூவத்தூரிலேயே எம் எல் ஏக்களுக்கு  தங்கும் விடுதிகளைக்கட்டிக் கொடுத்து எதிராளிகளை கதறவிடலாம். மண் பரிசோதனை செய்வதற்காகவே அவர்களை அள்ளிப்போட்டு சென்றேன் எனவும் அறிக்கைவிடலாம்.

ஆபரேஷன் செல்ஃபி:

அடிக்கடி கட்சிக் கூட்டத்தைக்கூட்டி  அதை  ஃபேஸ்புக் லைவில் செல்பி வித் சிங்கம்ஸ் என்ற ஹேஸ்டேக்குடன் பதியலாம். மக்களுக்கு நம்பிக்கையைகொடுக்குதோ இல்லையோ எத்தனை பேர் எஸ்கேப் ஆகிருக்காங்க எவ்வளவு பேர் இருக்குறாங்க என ஈசியாக கணக்கெடுத்துக்கொள்ளலாம்.

ஆபரேஷன் அப்பீட்: 

இதையெல்லாம் மீறியும் எம்.எல்.ஏ-க்கள் வேற எங்கேயாவது போயிட்டாங்கன்னா வேற என்ன அவங்க எங்கே போயிருக்காங்களோ அங்கே இவர் போய் சேர்ந்துடவேண்டியதுதான். இதை எல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா பாஸூ..?

- ஜெ.வி.பிரவீன்குமார் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்