சசிகலாவின் அந்த 3 சபதங்கள் என்னவாக இருக்கும்? - வாசகர்களின் கலகல கற்பனை #DontMiss | Vows of sasikala - survey results

வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (16/02/2017)

கடைசி தொடர்பு:17:26 (16/02/2017)

சசிகலாவின் அந்த 3 சபதங்கள் என்னவாக இருக்கும்? - வாசகர்களின் கலகல கற்பனை #DontMiss

போயஸ் கார்டனிலிருந்து பெங்களூரு சென்ற சசிகலா வழியில் ஜெ. சமாதியில் மூன்று முறை ஆக்ரோஷமாக சபதம் எடுத்துக்கொண்டார்.சசிகலா எடுத்துக்கொண்ட அந்த 3 சபதங்கள் இவை தான்.  உடனே பற்றிக்கொண்டன சமூக வலைதளங்கள். மீம்ஸ், விவாதங்கள் என அனல் பரவி வந்த வேளையில் சசிகலா எடுத்துக்கொண்ட மூன்று சபதங்கள் என்னவாக இருக்கும் என வாசகர்களிடம் கேட்டோம். வந்து குவிந்த கமென்ட்களில் சில 'அடடே' ரக கமென்ட்கள் உங்கள் பார்வைக்கு...!

சசிகலா

* அந்த மூன்று சபதங்கள் முறையே நீதி, நேர்மை, நியாயம் என ஒருவர் கமென்ட் அடித்திருக்கிறார். பாஸ் நீங்க காமெடி கீமெடி பண்ணலையே?

* இந்த வாசகர் நிறைய தெலுங்கு பாலைய்யா படங்கள் பார்ப்பார் போல. திரும்ப வருவேன், ஆட்சியை பிடிப்பேன், எதிரியை ஒழிப்பேன் ஆகியவையே அந்த மூன்று சபதங்கள் எனக் கூறியுள்ளார்.

* ஜில் ஜங் ஜக் - இது ஒரு வாசகரின் கமென்ட். நீங்க இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வர்றீங்கன்னு தெரியுது. ஆனா என்னன்னுதான் தெரியலை. 

* இந்த வாசகரின் கமென்ட் கலகல ரகம். 
   1) பன்னீர் சோடா குடிக்கமாட்டேன் 
   2) சிங்கம் 4 படம் வர்றதுக்குள்ள ரிலீஸாகிடுவேன் 
   3) பேன்ஸி டிரஸ் போட்டியில கலந்துக்கமாட்டேன்
என குபீர் கமென்ட்களை தந்துள்ளார்.

* இது கொஞ்சம் வேற மாதிரி கமென்ட். 'அந்த சபதங்கள் எதுவாக இருந்தாலும் சத்தியம் செய்தபின் கையை துடைத்துவிட்டதால் சபதங்கள் கேன்ஸலாகிவிட்டன' எனச் சொல்லியிருக்கிறார் ஒருவர். இது புது ஐட்டமா இருக்கே!

* நேற்று சமூக வலைதளங்களில் வைரலான மீம்களால் கவரப்பட்ட ஒரு வாசகர், 'அவர் ஓங்கி அடித்து 3 செய்திகளை                சொல்லியிருக்கிறார். அவை    
     1)கொசுவை எப்படி அடிப்பது 
     2)கொசு மீது அடி விழவில்லை என்றால் மீண்டும் எப்படி அடிப்பது
     3)அக்கொசு சாகும் வரை எப்படி அடிப்பது 

     இடை இடையில் கையை எப்படி துடைக்க வேண்டும் என்றும் காண்பித்தார். இந்த நுட்பத்தின் பெயர்தான் கொசுவை கொல்லும் நவீன        machine' என கமென்ட் தட்டியிருக்கிறார். 

* இதுவும் கலகல ரகம்தான். 
   சபதம் 1 - இனி வாழ்க்கையில் பன்னீரே சாப்பிடமாட்டேன். இது உங்க மேல சத்தியம்க்கா. 

   சபதம் 2 - தமிழகத்துக்கு முதல்வராக ஆகாவிட்டாலும் பரவாயில்லை. பெங்களூருக்கு முதல்வராகாமல் சென்னை வர மாட்டேன். இது     உங்க மேல சத்தியம்.
 
   சபதம் 3 - என்னை ஜெயிலுக்கு அனுப்பியவர்களைக் கூடவிட்டுடுவேன். ஆனா இந்த மீம்ஸ் பண்ணி அமர்க்களம் பண்ணவங்களை    ஒருகை பார்க்காமல் உங்களை பார்க்க வர மாட்டேன். இது சத்தியம்.
- இதுதான் இன்னொருவரின் கமென்ட்.

* 'சத்தியத்தை எல்லாம் வெளியே சொல்லமுடியாது. அப்புறம் பலிக்காது' என ஒருவர் கமென்ட் தட்டியிருக்கிறார். உங்க அப்ரோச் ரொம்ப பிரமாதம் ஜி!

* இது 'அடேங்கப்பாடியப்பா' ரக கமென்ட். 1) சி.எம் ஆகணும் 2) அப்புறம் பி.எம் ஆகணும் 3) மிச்சமிருக்கிற ஜனாதிபதி சீட்லயும் உட்காரணும். இது ஒரு வாசகரின் கமென்ட். தட் 'வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன்' மொமென்ட்.

 


             
 
             
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்