Published:Updated:

'ஹபிஸ் சயீத் சர்வதேச தீவிரவாதி' - இந்தியா சாடல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'ஹபிஸ் சயீத் சர்வதேச தீவிரவாதி' - இந்தியா சாடல்
'ஹபிஸ் சயீத் சர்வதேச தீவிரவாதி' - இந்தியா சாடல்

'ஹபிஸ் சயீத் சர்வதேச தீவிரவாதி' - இந்தியா சாடல்

'ஹபிஸ் சயீத் சர்வதேச தீவிரவாதி' - இந்தியா சாடல்

'பாகிஸ்தானின் அண்டை நாடுகளில் ஏற்படும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு, ஹபிஸ் சயீத் தான் காரணம்' என இந்திய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், 'சயீத் ஒரு சர்வதேச தீவிரவாதி. அவர்தான் மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக இருந்தார்' என்றும் குற்றம் சாட்டியுள்ளது' வெளியுறவு அமைச்சகம்.

2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு சயீத் தான் காரணம் என்றும், சயீத்தை சர்வதேசத் தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்றும் நீண்ட காலமாக வலியுறுத்திவந்தது இந்தியா. இதையடுத்து, சயீத் மீது, தீவிரவாத பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்து வீட்டுச் சிறையில் வைத்தது பாகிஸ்தான் அரசு.

தற்போது, 'சயீத்தை நீதியின் முன் நிறுத்த வேண்டும்' என்றும்  வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு