Published:Updated:

சேமிப்புக் கணக்கில் 50 ஆயிரம் வரை எடுக்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சேமிப்புக் கணக்கில் 50 ஆயிரம் வரை எடுக்கலாம்!
சேமிப்புக் கணக்கில் 50 ஆயிரம் வரை எடுக்கலாம்!

சேமிப்புக் கணக்கில் 50 ஆயிரம் வரை எடுக்கலாம்!

சேமிப்புக் கணக்கில் இருந்து வாரத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. ரூபாய் நோட்டுத் தடை அறிவிக்கப்பட்டதில் இருந்து, வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கு, ரிசர்வ் வங்கி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

சேமிப்புக் கணக்கில் 50 ஆயிரம் வரை எடுக்கலாம்!

ஆரம்பத்தில், சேமிப்புக் கணக்கில் இருந்து வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாயும், ஏடிஎம் மையங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதியளித்திருந்தது. பின்னர், 4,500 ரூபாயாகவும், 10 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரித்தது. ஆனால், வங்கிக் கணக்கில் இருந்து வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு நீடித்தது. பிப்ரவரி 8-ம் தேதி, நடப்புக் கணக்கின் மீது விதித்திருந்த கட்டுப்பாடுகளை முழுமையாக ரிசர்வ் வங்கி நீக்கியது. இந்நிலையில், சேமிப்புக் கணக்கில் இருந்து வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க அனுமதியளித்துள்ளது. மார்ச் 13-ம் தேதி சேமிப்புக் கணக்கின் மீதான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என்று தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு