Published:Updated:

இஸ்லாமிக் அறக்கட்டளை வழக்கு மீது இன்று விசாரணை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இஸ்லாமிக் அறக்கட்டளை வழக்கு மீது இன்று விசாரணை
இஸ்லாமிக் அறக்கட்டளை வழக்கு மீது இன்று விசாரணை

இஸ்லாமிக் அறக்கட்டளை வழக்கு மீது இன்று விசாரணை

இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளை தடை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜாகிர் நாயக் நடத்திய இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளையை நவம்பர் 15-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்தது.

இஸ்லாமிக் அறக்கட்டளை வழக்கு மீது இன்று விசாரணை

அதற்குக் காரணமாக, சட்டவிரோதமாக செயல்படுகிறது என்றும், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்றும் குற்றம்சாட்டியது. அவரது வீடு மற்றும் நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. அறக்கட்டளை தடை செய்யப்பட்டதற்கு எதிராக, ஜாகிர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பு, தடைக்கான காரணம் குறித்து மூன்று பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளது. மேலும் அமலாக்கத்துறை, ஜாகிர் மீதும் அவரது அறக்கட்டளை மீதும் பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு