முகம் மட்டுமல்ல... குரலும் எங்களுடையதுதான்... நடிகைகள் பாடிய பாடல்கள்! | Famous songs sang by actresses

வெளியிடப்பட்ட நேரம்: 08:17 (21/02/2017)

கடைசி தொடர்பு:08:16 (21/02/2017)

முகம் மட்டுமல்ல... குரலும் எங்களுடையதுதான்... நடிகைகள் பாடிய பாடல்கள்!

நடிகை

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடிகைகள் முத்திரை பதித்து வருகின்றனர். சிறந்த நடிப்பு, நடனம், வசனம், இயக்கம் எனப் பல பிரிவுகளில் நடிகைகள், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிடுகின்றனர்.

பாடல்கள் பாடுவதிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர் நடிகைகள். பழம்பெரும் நடிகை பானுமதி தொடங்கி இன்றைக்கு ஆண்ட்ரியா வரை நடிப்பதோடு, பாடல்களைப் பாடுவதிலும் ஜொலிக்கின்றனர். அவற்றில் சிலரின் பாடல்கள் இதோ!

பானுமதி:

'அன்னை' திரைப்படம் 1962 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தை கிருஷ்ணன் - பஞ்சு இயக்கினர். இந்தப் படத்தில் நடிகை பானுமதி பாடிய 'பூவாகி காயாகி கனிந்த மரம்' என்ற பாடல் ரசிகர்களைக் கவர்ந்த பாடல்:

 

 

ஜெயலலிதா:

கே.சங்கர் இயக்கி, 1969 ஆம் ஆண்டு வெளியான படம் அடிமைப் பெண். இதில் ஜெயலலிதா பாடிய 'அம்மா என்றால் அன்பு' எனும் பாடல் இன்றுவரை ரசிகர்களால் விரும்பி கேட்கப்படும் பாடல்.

 

 

மனோரமா:

பழம்பெரும் நடிகையான மனோரமா பல பாடல்களைப் பாடியுள்ளார். பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மே மாதம் திரைப்படத்தில் இவர் பாடிய 'மெட்ராஸைச் சுத்திப் பார்க்கப் போறேன்' பாடலைச் சிறப்பாக பாடியிருப்பார்.

 

 

ஷாலினி:

சின்ன வயதிலேயே திரைத் துறையில் நுழைந்தவர் ஷாலினி. பேபி ஷாலினியாக எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர். பின்னர், ஷாலினி கதாநாயகியாக நடித்த அமர்க்களம் பெரும் வெற்றிப் பெற்றது. அதில் 'சொந்தக் குரலில் பாட' எனும் பாடலைப் பாடினார். இதுவே அந்தப் படத்தில் இவரின் அறிமுகக் காட்சிப் பாடலாக அமைந்திருந்தது.

 

 

ஆன்ட்ரியா:

நடிப்பிலும் பாடல் பாடுவதில் அசத்தி வருபவர் ஆன்ட்ரியா. தான் நடிக்கும் படங்களில் மட்டுமல்லாமல் மற்ற படங்களிலும் பாடிவருகிறார். 'கோவா' படத்தில் 'இதுவரை இல்லாத' எனும் பாடல் பலரின் ஃபேவரைட். இவர் கதாநாயகியாக நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் பாடிய இந்தப் பாடலும் ஹிட்.

 

 

ஸ்ருதி ஹாசன்:

இசையில் தனி கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பாடியுள்ளார். தேவர் மகனில் 'போற்றி பாடடி பெண்ணே' பாடல் பாடியபோது இவருக்கு வயது 6. விஜயுடன் சேர்ந்து நடித்த 'புலி' பாடத்தில் அவரோடு இணைந்து பாடிய இந்தப் பாடல் செம ஹிட்.

 

 

- வி.எஸ்.சரவணன்


டிரெண்டிங் @ விகடன்