ஜியோ ப்ரைம் சேவை, இலவச வாய்ஸ்கால்...தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்! #RelianceJio | 10 things to know about Mukesh Ambani's today speech #RelianceJio

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (21/02/2017)

கடைசி தொடர்பு:20:41 (21/02/2017)

ஜியோ ப்ரைம் சேவை, இலவச வாய்ஸ்கால்...தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்! #RelianceJio

முகேஷ் அம்பானி பேச்சு

ரிலையன்ஸ் ஜியோ 4G சேவையானது கடந்த வருடம் செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது. அதன் இலவச அறிவிப்புகள் மற்றும் சலுகைகளால் மற்ற நிறுவனங்களை விடவும் வெகுவேகமாக வாடிக்கையாளர்களைச் சம்பாதித்தது ஜியோ. முதலில் டிசம்பர் 31-ம் தேதி வரை மட்டுமே, அளிக்கப்பட்ட இந்த இலவச சேவைகள் பின்பு 'ஹேப்பி நியூ இயர்' ஆஃபர் என்ற பெயரில் இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. அதற்கு பின்பும் ஜியோ சேவைகள் இலவசமாக வழங்கப்படுமா என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அதற்குப் பதில் அளிக்கும்படி இருந்தது இன்று பேசிய முகேஷ் அம்பானியின் பேச்சு. அதில் முக்கியமான 10 விஷயங்கள் இங்கே...

1. 'ஜியோ சேவையைத் துவங்கி வெறும் 170 நாட்களில், 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற எல்லையைத் தாண்டியுள்ளது. கடந்த 170 நாட்களாக, ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 7 புதிய வாடிக்கையாளர்களை ஜியோ பெற்றுள்ளது. இதற்கு காரணமான ஜியோவின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் நன்றி'

100 மில்லியன்களைத் தொட்ட ஜியோ சேவை

2. 'அறிமுகமாகி சில மாதங்களிலேயே ஜியோ பல சாதனைகளைப் படைத்துவருகிறது. ஜியோ வருவதற்கு முன்பு இந்தியாவானது பிராட்பேண்ட் பயன்பாட்டில் 150-வது இடத்தில் இருந்தது. தற்போது இந்தியா மொபைல் இன்டர்நெட் பயன்பாட்டில் உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது. வெறும் 6 மாதத்திலேயே இந்தியாவும், இந்தியர்களும் எங்களால் வளர்ந்த நாடுகள் அளவுக்கு டேட்டாவைப் பயன்படுத்த முடியும் என நிரூபித்துள்ளனர்' 

3. '2017-ம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் 99% மக்களை நாங்கள் சென்றடைவோம். ஆதார் வழியாக செய்யப்படும் மொபைல் நம்பர் போட்டபிலிட்டி மிகவும் எளிதாக இருப்பதால், பல லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்'

4. 'ஜியோவின் புகழ்பெற்ற 'ஹேப்பி நியூ இயர்' ஆஃபர் வரும் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜியோ, தனது கட்டணச் சலுகைகளைத் துவங்கவிருக்கிறது. எங்களது எல்லா திட்டங்களிலுமே, உள்நாட்டு அழைப்புகள் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் முற்றிலும் இலவசமே! ரோமிங் கட்டணம், மறைமுகக் கட்டணம் போன்றவை எல்லாம் இதில் கிடையாது'

5. 'எங்களின் முதல் 100 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும், எங்கள் மனதில் சிறப்பான இடம் உண்டு. நீங்கள்தான் எங்கள் அடித்தளம்.நீங்கள்தான் எங்கள் தூதுவர்கள். இன்று நான் உங்களுக்கு எனது நன்றி செலுத்த வேண்டிய நாளாகும்'

6. 'எனவே உங்களுக்காக ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் என்னும் பிரத்யேகத் திட்டத்தினை இன்று நான் அறிவிக்கிறேன். இது தற்போதைய ஜியோ வாடிக்கையாளர்களுக்கும், வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் ஜியோவில் இணைபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு சில ஆச்சர்யமான பலன்கள் இருக்கின்றன'

ஜியோ எதிர்காலத் திட்டங்கள்

7. 'ஜியோ ப்ரைம் வாடிக்கையாளராகப் பதிவு செய்ய, வரும் மார்ச் 1-ம் தேதி முதல் மை ஜியோ ஆப் மூலமாகவோ, ஜியோ இணையதளம் மூலமாகவோ பதிவு செய்துகொள்ளலாம். மார்ச் 31-ம் தேதி வரை இதில் பதிவு செய்துகொள்ள முடியும் . ஒருமுறை மட்டும் இதில் பதிவு செய்வதற்காக 99 ரூபாயை செலுத்தினால் போதும்'

8. 'ப்ரைம் வாடிக்கையாளர்கள் தாங்கள் அனுபவித்த 'ஹேப்பி நியூ இயர்' ஆஃபரின் பலன்களை மார்ச்  31, 2018 வரை அனுபவிக்கலாம். ஜியோவின் மற்ற மீடியா சேவைகளையும் அடுத்த ஒரு வருடத்துக்கு ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம். இதற்காக அடுத்த ஒரு வருடத்திற்கு, மாதம் ரூ 303-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். இதுதவிர ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர்களுக்காக பல பிரத்யேக சலுகைகளும் அறிவிக்கப்படும்'

9. 'ஜியோ ப்ரைமில் பதிவு செய்து கொள்வது என்பது மிகவும் எளிமையான ஒன்று. உங்களது மை ஜியோ ஆப், ஜியோ இணையதளம் அல்லது ஜியோ ஸ்டோர்கள் மூலமாகப் பதிவு செய்துகொள்ளலாம்'

10. 'இந்த சலுகைகள் எங்களுடைய தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. அதுதவிர விரைவில் ஜியோ ப்ரைம் உறுப்பினராக பதிவு செய்துகொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். நன்றி'

- ஞா.சுதாகர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்