Published:Updated:

டெலினாரை வாங்கும் ஏர்டெல்!

டெலினாரை வாங்கும் ஏர்டெல்!
டெலினாரை வாங்கும் ஏர்டெல்!

டெலினாரை வாங்கும் ஏர்டெல்!

ஜியோ வருகைக்குப் பிறகு, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது இருப்பைத் தக்க வைக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்நிலையில்,டெலினார் இந்தியா நிறுவனத்தை வாங்க உள்ளதாக, ஏர்டெல் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஏர்டெல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெலினாரின் இந்தியப் பங்குகளை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

டெலினாரை வாங்கும் ஏர்டெல்!

டெலினார் நிறுவனம், இந்தியாவில் ஆந்திரா, பீகார், மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் கிழக்கு, மேற்கு மற்றும் அசாம் ஆகிய ஏழு வட்டங்களில் இயங்கிவருகிறது. இந்த ஏழு வட்டங்களில் உள்ள அதன் வணிகத்தை ஏர்டெல் வாங்க உள்ளது. இதன்மூலம் அதன் டவர்கள், ஊழியர்கள் உள்பட அனைத்தும் இனி ஏர்டெல்லின் வசம்தான். ஆனால், ஒப்பந்தம் போடப்பட்ட தொகைகுறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. 

அண்மையில், ஐடியா நிறுவனத்தை வோடபோன் வாங்க உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு