Published:Updated:

ஜெயலலிதா என்னை ஒதுங்கியிருக்கச் சொன்னார்! டி.டி.வி.தினகரன் பேட்டி

ஜெயலலிதா என்னை ஒதுங்கியிருக்கச் சொன்னார்! டி.டி.வி.தினகரன் பேட்டி
ஜெயலலிதா என்னை ஒதுங்கியிருக்கச் சொன்னார்! டி.டி.வி.தினகரன் பேட்டி

ஜெயலலிதா என்னை ஒதுங்கியிருக்கச் சொன்னார்! டி.டி.வி.தினகரன் பேட்டி

ஜெயலலிதா என்னை ஒதுங்கியிருக்கச் சொன்னார்! டி.டி.வி.தினகரன் பேட்டி

'நான் திடீரென்று வந்திருக்கிறேன் என்று சிலர் சொல்கிறார்கள். ஜெயலலிதா என்னைச் சில காலம் ஒதுங்கியிருக்கும்படி கூறினார். அவரது கட்டளையை ஏற்று, ஒரு போர்வீரனாக இன்றைக்கும் நான் எனது பணியைச் செய்துகொண்டிருக்கிறேன்' என அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 'எம்ஜிஆர் மறைந்த காலத்திலேயே ஜெயலலிதாவால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டவன் நான். பிறகு, ஜெயலலிதாவால் 1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, ஜெயலலிதாவாலும் தொண்டர்களாலும் நான் வெற்றிபெற்றேன். நாடாளுமன்ற உறுப்பினராக 11 ஆண்டுகள் பணியாற்றியிருக்கின்றேன். அதுபோல ஜெயலலிதாவால், புரட்சித் தலைவி பேரவைச் செயலாளராகவும் பிறகு அமைப்புச் செயலாளராகவும் பொருளாளராகவும் பணியாற்றியிருக்கிறேன். அனால், நான் திடீரென்று வந்திருக்கிறேன் என்று சிலர் சொல்கிறார்கள். ஜெயலலிதா என்னை சில காலம் ஒதுங்கியிருக்கும்படி கூறினார். அவரது கட்டளையை ஏற்று ஒரு போர்வீரனாக இன்றைக்கும் நான் எனது பணியைச் செய்துகொண்டிருக்கிறேன்.

மீண்டும் சசிகலா தலைமையேற்ற பிறகு, எனது தேவை நிச்சயம் இருக்க வேண்டும் என்று கழகத்தினர் கூறினர். இக்கட்டான நிலையில் என்னைக் கட்சியில் சேர்த்து, துணைப் பொதுச்செயலாளராக நியமித்திருக்கிறார் சசிகலா. வழிதவறிச் சென்றவர்கள், மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பேரவையின் விதிகளுக்கு உட்பட்டுதான் சபாநாயகர் வாக்கெடுப்பை நடத்தினார். பேரவையில் கலவரம்செய்து ஆட்சியைக் கலைக்க மு.க.ஸ்டாலின் முயற்சிசெய்தார். டெல்லி சென்று குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலினின் திட்டம் தோல்வியடையும். பன்னீர்செல்வத்தின் செயல்பாடு, அ.தி.மு.க என்ற எஃகுக் கோட்டையைப் பாதிக்காது. எஃகுக் கோட்டையான அ.தி.மு.க.வை யாராலும், ஒன்றும் செய்துவிட முடியாது. கட்சி, ஆட்சியில் தனி நபர், குடும்ப ஆதிக்கம் இருக்காது. அ.தி.மு.க அரசு மீது மக்கள் கோபமாக உள்ளார்கள் என்பது பொய்யான பிரசாரம். 2021-ல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமையும்.

ஆர்.கே.நகர் தேர்தலில் கட்சி யாரைத் தேர்வுசெய்கிறதோ, அவர்தான் வேட்பாளர். அ.தி.மு.க சட்ட விதிப்படிதான் சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் வங்கிக் கணக்குகளை அமைச்சரான பொருளாளர் சீனிவாசன் கவனித்துவருகிறார். எங்களுக்கு கருணாநிதி, தி.மு.க.தான் எதிரி' என்று கூறினார்.
 

அடுத்த கட்டுரைக்கு