Published:Updated:

'வீரர்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படவில்லை' எல்லைப் பாதுகாப்புப்படை விளக்கம்!

இந்திய வீரர்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படவில்லை என, எல்லைப் பாதுகாப்புப்படை டெல்லி உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

இந்திய எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும், தேஜ் பகதூர் யாதவ் என்ற வீரர், எல்லைப் பாதுகாப்புப் படையினருக்குத் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகச் சமூக வலைதளங்களில் பேசி, பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை அடிப்படையாகக்கொண்டு, புரன் சந்த் ஆர்யா என்பவர் தொடர்ந்த வழக்கில், எல்லைப் பாதுகாப்புப் படை, சி.ஆர்.பி.எப்., சி.ஐ.எஸ்.எப். உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், எல்லைப் பாதுகாப்புப்படை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், வீரர்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படுவதில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், வீரர்களிடம் நடத்திய ஆய்வில், இதுபோன்ற புகார்கள் எதுவும் பெறப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு