வெளியிடப்பட்ட நேரம்: 09:57 (26/02/2017)

கடைசி தொடர்பு:09:54 (26/02/2017)

சூப்பர்வைசர், சாய்ஸ், பிட் - பரீட்சை ஹால் பரவச நிலைகள்

ள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் பரீட்சை எழுதப்போற பயபுள்ளைகள்ல, படிச்சவங்க எல்லாம் கல்யாணத்துக்கு ரெடியாகுற மாப்பிள்ளை மாதிரி மலர்ச்சியாவும், படிக்காதவன் 'என்னமோ போடா மாதவா..'னு கேசுவலாகவும்னு ஆளுக்காளு தினுசுதினுசாத் திரிவாய்ங்க. ஆனா, உள்ளே போனதுக்கு அப்புறம் கிட்டத்தட்ட எல்லோருமே கிடாவெட்டுக்கு ரெடியாகிற ஆடு மாதிரிதான் மூஞ்சியை வெச்சுக்குவாய்ங்க.

பரீட்சை

* உள்ளே போகும்போது மைனர் கணக்கா பக்கத்து ஹால் சூப்பர்வைசரை எல்லாம் குசலம் விசாரிச்சுட்டு போறவன்லாம் கொஸ்டின் பேப்பரைப் பார்த்ததுக்கு அப்புறம் பெட்டிப் பாம்பா அடங்கிப் பிட் அடிக்கிறதுக்கு சின்னதா கேப் கிடைக்குமானு திருட்டு முழி முழிச்சிக்கிட்டு உட்கார்ந்திருப்பாய்ங்க. 

* ஒவ்வொரு பாடத்திலேயும் ஒவ்வொரு கொஸ்டினை சாய்ஸ்ல விட்டுட்டுப் பெரிய விஞ்ஞானி மாதிரி கால்குலேஷன்லாம் போட்டுப் படிச்சு வெச்சுருப்போம். ஆனா, கேட்டிருக்கிறதுல பாதிக் கேள்வி நாம சாய்ஸ்லவிட்டதாத்தான் இருக்கும். சயின்டிஸ்ட் மாதிரி பிளானெல்லாம் போட்டாலும் சம்பவம் பண்ணிடுறாய்ங்களே பரமா..!

* விதி நம்மளோட அரியர் ஹிஸ்டரியில் விளையாடணும்னு முடிவு பண்ணிட்டா அதை யாராலேயும் தடுக்க முடியாது. தமிழ் பரீட்சையில் கேட்குற ரெண்டு மார்க் திருக்குறள் கூட நம்மைத் திக்கித் திணற வைக்கும். மூணாவதுல படிச்ச குறள் எல்லாம் நேரம்காலம் தெரியாம ஞாபகத்துக்கு வரும். ஆனா, முந்தாநாள் படிச்ச குறள் மட்டும் மண்டைக்குள்ளே வந்து தொலையாது. கெரகத்த!

* சூப்பர்வைஸரா வந்திருக்கிற வாத்தியார் என்ன மாதிரி ஆளுனு தெரியலைன்னா கஷ்டம். திரும்பிப் பார்த்தாலே திட்டுறவரா இருந்தா இன்னும் ரொம்பக் கஷ்டம். உங்களை எல்லாம் நம்பி நானும் பரீட்சை எழுத வந்தேன் பாருங்கய்யானு தலையில் அடிச்சிக்கிட்டு நேரத்தை ஓட்டணும். அதிலேயும் கிட்டே வரும்போது, நம்ம பேப்பரையே உத்துப் பார்க்குற வாத்தியார்லாம் என்ன கேட்டகிரியோ? கோலம்தான் போடுறேன். பாருங்க சாரே..!

* கணக்குப் பரீட்சைக்குப் போய் ஒண்ணும் தெரியாம விட்டத்தைப் பார்த்துக்கிட்டே உட்கார்ந்திருக்கிறவிங்கதான் இங்கே கொள்ளைப்பேர் இருப்பாய்ங்க. மற்ற பாடங்களைபோல 'அதாவது.., ஏனென்றால்...'னு எதையாவது போட்டு ஆரம்பிச்சுப் பக்கம் பக்கமா கதை எழுதமுடியாது. இருக்கிற பத்து நம்பரை மாத்திமாத்திப் போட்டு எழுதினாலும் போரடிக்கும். அதுவும் இல்லாம, உளவியல் ரீதியாகவே கணக்கு வாத்தியார் மேல இருக்கிற கடுப்பு நாம எழுதுற பேப்பர்லேயும் எதிரொலிக்கும்.

பரீட்சை

* நமக்கு என்ன கொடுமை நடந்தாலும் சரி... ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் நமக்கு பீமபுஷ்டி அல்வா சாப்பிட்ட உத்வேகத்தைக் கொடுக்கும். அதுதான், நம்மளை மாதிரியே அதே ஹாலில் எப்படா மணி அடிக்கும்? பேப்பரைக் கொடுத்துட்டு வெளியில் போகலாம்னு வாசலையே பார்த்துக்கிட்டு இருக்கிற இன்னும் நாலைஞ்சு பேர். அப்பப்போ அவங்களைப் பார்த்துக்கிட்டாலே பயம் நீங்கிப் பரவச நிலைக்குப் போயிடுவோம். 

 *அடுத்த வரியில் என்ன எழுதுறதுனு தெரியாம முழிக்கிற ஒவ்வொரு மொமென்ட்லேயும், அடுத்த செமஸ்டருக்காவது ஒழுங்காப் படிச்சிட்டு வந்து உட்காரணும் தெய்வமேனு தோணும். ஆனா, அதெல்லாம் பரீட்சை முடியுற வரைக்கும்தான். எக்ஸாம் ஹால் சபதம் வாசலைத் தாண்டினாலே போச்சு!

- விக்கி 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்