வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (27/02/2017)

கடைசி தொடர்பு:09:00 (27/02/2017)

மழலைக் குரலில் குழந்தைகள் கூறும் கதைகளோடு தொடங்கட்டும் இந்நாள்!

கதை

உலகிலேயே கொஞ்சமும் 'போர்' அடிக்காத விஷயம் எதுவென்றால் கதைகள் கேட்பதுதான். சின்ன வயதில் பாட்டி, தாத்தாவிடம் கதைகள் கேட்டு நச்சரித்திருப்போம். அவர்களும் தினந்தோறும் புதுப்புது கதைகளை நாம் தூங்கும் வரைச் சொல்வார்கள். அந்தக் கதையில் வரும் பேய், பூதம், ஒற்றைக் கண் அரக்கன் எல்லாம் நம் கனவில் வருவார்கள். அலறிக்கொண்டே தூக்கத்திலிருந்து எழுந்திருப்போம். குடிக்க தண்ணீர் கொடுத்து, ஆதரவாக தலைத் தடவிக்கொடுத்து மறுபடியும் தூங்க வைப்பார் அம்மா.

சரி, கதை கேட்பதெல்லாம் பழையக் காலத்தோடு முடிந்துவிட்டது. அதை இப்போது ஏன் சொல்கிறீர்கள் எனச் சிலர் நினைக்கலாம். உண்மையில் கதைக் கேட்கும் காலம் எப்போது முடிவடையாது. கதைக் கேட்கும் பழக்கம் இன்றும் குழந்தைகளுக்கு இருக்கிறது. கதை கேட்பதோடு, கதைகளை தங்கள் பாணியில் சொல்லவும் ஆசைப்படுகிறார்கள். தங்கள் மழலைக் குரலால் மிக அழகாக குழந்தைகள் கதைச் சொல்லும் வீடியோக்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அதிலும் கொஞ்சும் தமிழில் குழந்தைகள் சொல்லும் கதைகளைக் கேட்க, கேட்க அவ்வளவு பிடிக்கிறது. திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. அவற்றில் சிலவற்றைக் கேட்க நீங்கள் ரெடியா?


1.ஆத்மிகாவின் புலியும் யானையும்: ஆத்மிகா சொல்லும் கதையை விட, கை அசைவுகளும் சொல்லும் விதமும், இடையிடையே எச்சில் விழுங்குவதும் அவ்வளவு அழகு.

 

 

2. ஷாலினியின் கொத்துக் கொத்தாக இருந்தாத்தான் சிறப்பு: இது ஒரு நீதிக் கதை என்றாலும் தான் சொல்லும் விதத்தில் ஈர்க்க வைக்கிறார் ஷாலினி.

 

3. ஷாலினியின் எறும்பும் வேடனும்: இந்தக் கதை நமக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் ஷாலினி சொல்லக் கேட்பது இன்னும் அழகு!

 

4. பிரணாவின் வெங்காயம் அழுதால்.... வெங்காயத்தை உறித்தால் ஏன் அழுகை வருகிறது தெரியுமா? அதற்கு பிரணா சொல்லும் கதை அழகான பதில் ஒன்றைத் தருகிறது.

 

5. பவதாரணியின் பொறாமை தந்த அவமானம்... மற்றவரைப் பார்த்து பொறாமைக் கொண்ட ஒட்டகம் பற்றிய சூப்பரான கதை. பவதாராணி பாவனை க்யூட்!

 

6. ஷாலியின் சந்தைக்கு அண்ணன் போனாராம்.... நடிகர் வடிவேலுவை மனதில் வைத்துக்கொண்டு ஷாலினி உருவாக்கி நகைச்சுவைக் கதை! சிரிப்பை அடக்க முடியாமல் ஷாலினி சொல்லும் விதம் கவிதை!

7. பிரணாவின் எறும்பும் கரையானும்... சோம்பேறி எறும்பு கரையானிடம் கற்றுக்கொண்ட பாடத்தை அழகாக சொல்கிறார் பிரணா.

 

 

8. லித்தோனின் ஆபத்தில் உதவினா நண்பன்... மயிலுக்கும் பருந்துக்கும் நடக்கும் உரையாடலை அழகான கதையாக்கியிருக்கிறார் லித்தோன்.

9. லித்தோனின் பண்ணையாரும் பெருமாளும்.. இது ஒரு நகைச்சுவைக் கதை. பேரை மாற்றிக்கொள்ளச் சொல்லும் பண்ணையாருக்கு பெருமாள் கொடுக்கும் ஷாக்தான் ட்விஸ்ட்.

10. பிருத்திகாவின் கள்ளர் தொல்லை... தெனாலி ராமன் கதையை பிருத்திகாவின் இனியக் குரலில் கேட்க, கேட்க அவ்வளவு ஆசையாக இருக்கிறது.

 

குழந்தைகள் பற்றிய கவிதைகள் அழகு என்றால், குழந்தைகளே கவிதையாவது அவர்களே கதை சொல்லும்போதுதான். அந்த அனுபவம் இனிமையானது. இந்த கதை ஏற்பாட்டை முன்னெடுத்த கதை ஒளி குழுவுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும். கதை ஒளியின் அழகான இந்தப் பயணம் இன்னும் நீளட்டும். குழந்தைகளின் அழகான கதைகள் தொடர்ந்து வரட்டும்.

- வி.எஸ்.சரவணன்.  

 


டிரெண்டிங் @ விகடன்