Published:Updated:

பணத் தட்டுப்பாடு நீடிக்க இதுதான் காரணம்! ப.சிதம்பரம்

Vikatan Correspondent
பணத் தட்டுப்பாடு நீடிக்க இதுதான் காரணம்! ப.சிதம்பரம்
பணத் தட்டுப்பாடு நீடிக்க இதுதான் காரணம்! ப.சிதம்பரம்
பணத் தட்டுப்பாடு நீடிக்க இதுதான் காரணம்! ப.சிதம்பரம்

நாட்டில் பணத் தட்டுப்பாடு இன்னும் நீடிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், உத்தரப்பிரதேசத்தில் தேர்தலையொட்டி 121 கோடி ரூபாயும், பஞ்சாபில் 70 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, இவையெல்லாம் வெள்ளைப் பணமா என்று கேள்வி எழுப்பினார். நாட்டில் கருப்பு பணம் ஒழிக்க, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், நாட்டில் கருப்பு பணம் ஒழிந்ததாக எனக்குத் தெரியவில்லை என்றும் வினா எழுப்பினார். முக்கியமாக நாடு முழுவதும் உள்ள பல ஏ.டி.எம்.கள் இன்னும் செயல்படாமல் இருப்பதாகவும், நாடு முழுவகதும் இன்றுவரை பணத்தட்டுப்பாடு நீடிப்பதாகவும் குறிப்பிட்டார்.. மேலும், நாட்டில் பணதட்டுப்பாடு நீடிக்க, பாஜக அரசின் தவறான பொருளாதா கொள்கையே காரணம் என்றும ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.