வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (27/02/2017)

கடைசி தொடர்பு:12:53 (27/02/2017)

சக்ஸஸ் மீட்... பிரேக்கிங் நியூஸ்.. அ.தி.மு.க. - முடியலை குருநாதா மொமென்ட்ஸ்..! #VikatanFun

ஜம்மு-காஷ்மீரில், கல்யாணத்துக்கு இவ்வளவுதான் சமைக்கணும், இவ்வளவு பேர்தான் கல்யாணத்துக்கே வரணும்னுலாம் சட்டமாகவே போட்டிருக்காங்களாம். நம்ம ஊருல அப்படியே இன்னும் சில சட்டங்களைப் போட்டா 'முடியலையே குருநாதா..'னு இருக்குற சில மொமென்ட்ஸ்ல இருந்து மக்களைக் காப்பாத்த ரொம்ப உதவியா இருக்குமேனு நினைக்கத்தோணுது. அந்த லிஸ்ட்தான் இது.

 

திருமணம்

நாக்கைத்துருத்தி செல்ஃபி போடுற ட்ரெண்டெல்லாம் செத்து, நாக்கைத்துருத்தி பல வருஷம் ஆச்சு. இன்னமும் அதை ட்ரெண்டுனு நினைச்சு அப்லோடாதீங்க ஃப்ரெண்ட்ஸ்னு...னு இந்த அரைமணிநேரத்துக்கு அஞ்சு புரொஃபைல் பிக்சர் மாத்துற க்ரூப்கள்கிட்டே ஸ்ட்ரிக்டா ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போனீங்கன்னா ரொம்ப புண்ணியமா போகும். எத்தன...

கிரைண்டர் இல்லாதப்போலாம் ஆட்டுக்கல்லுல மாவு ஆட்டிக்கிட்டு இருந்தவங்க இப்போ வீட்டுக்கு வீடு கிரைண்டர் வந்ததும் கடையில மாவு பாக்கெட் வாங்குற விஞ்ஞான உளவியலே இன்னும் புரியாம ஒரு பக்கம் இருக்கும்போது, வாங்கி வெச்ச மாவை வெச்சு.. வெச்சு.. வெச்சு செய்யுறதுக்கெல்லாம் நிரந்தரமா ஒரு தடையைப் போட்டுட்டுப் போனா நிம்மதி அடைவோமே ஃப்ரெண்ட்ஸ். அதையும் மீறிப்பண்னுனா அட்லீஸ்ட்  ஃபிரிட்ஜை தூக்கிட்டுப் போயி பிரிட்ஜுல இருந்து தள்ளிவிட்டுடுவோம்னாவது லைட்டா ஒரு ஆர்டரைப் போறபோக்குல போட்டுட்டுப்போனீங்கனா பலபேரைக் காப்பாத்தலாம்.

பிரேக்கிங் நியூஸ். என்ன சொல்ல ஏது சொல்ல. இதை எழுதிக்கிட்டு இருக்கும்போது கூட பின்னாடி பிரேக்கிங் நியூஸ்தான் ஓடிக்கிட்டு இருக்குது. போறபோக்கைப்பார்த்தா  பிரேக்கிங் நியூஸ் போடப்போறோம்ங்கிறதையே பிரேக்கிங் நியூஸா போட்டுடுவாங்க போல. ராத்திரியில இளையராஜா மியூசிக் காலையில யுவன்ஷங்கர்ராஜா மியூசிக்னு கேட்டுட்டு இருந்த மக்களெல்லாம் காலையும் மாலையும் இப்போ பிரேக்கிங் நியூஸ் மியூசிக்கை கேட்குற நிலைமை வந்துருச்சு. ஒருநாளுக்கு இத்தனை பிரேக்கிங்குகளைத்தான் போடணும்னு ஒரு சட்டத்தைப் போட்டுட்டுப் போனீங்கனா...

கல்யாணத்துக்கு இவ்வளவு ரெஸ்ட்ரிக்சன் போட்டது மாதிரி அப்படியே கல்யாணத்துக்கு இந்தப் பொண்ணுங்க போடுற ரெண்டு இஞ்ச் மேக்கப்புகளையும் கொஞ்சம் குறைச்சிட்டா அவங்களுக்கு நல்லதோ இல்லையோ மத்தவங்களுக்கு நல்லதாப் போகும். அதுலேயும்  கல்யாணப்பொண்ணைவிட கல்யாணத்துல கறி சோறு சாப்பிட வர்ற பொண்ணுங்கதான் ஏசியன் பெயின்டையே எடுத்து ஊத்துனமாதிரி மேக்கப்போட வர்றாங்க. அதுக்கும் ஏதாச்சும் லைட்டா ஒரு சட்டத்தை அமல்படுத்துனா... ஆங்க் அதேதான். (அவ்வளவு அப்பிக்கிட்டு வந்தும் இன்னைக்கு லைட் மேக்கப்லதான் வந்தேன்னு சொல்லுற மொமென்ட்டெல்லாம் இருக்குது பாருங்க.. அதுலாம் வேற ஏரியா.  கெரகத்த..)

படம் வந்த ரெண்டாவது நாளே சக்சஸ்மீட் வைக்கிறதைக்கூட தலையெழுத்துனு நினைச்சு ஏத்துக்கலாம். ஆனா இப்ப புதுசா சக்சஸ் மீட்டுகளையே வெச்சு முடிச்சிட்டுப் படத்தோட பேரை அறிவிக்கிற கொடுமையெல்லாம் இருக்குது பாருங்க. கொடுமையிலும் கொடுமையினா இதைத்தான் சொல்லணும். அதிரடியா ஒரு அறிவிப்போடு அள்ளிப்போட்டுக்கிட்டு போனீங்கனா அட்ராசிட்டீசெல்லாம் கொஞ்சம் குறையுமே பாஸ்..

அ.தி.மு.க

அப்புறம் இதைச் சொல்லியே ஆகணும். இந்த அ.தி.மு.க வுல மொத்தம்  எத்தனை அணிதான் இப்போ இருக்குது. யார் யார் எந்தெந்த அணியில இருக்குறாங்கனே தெரியலை. ஜெயலலிதாவுடைய பேரை வச்சிக்கிட்டே இன்னும் பலபேர் தனித்தனியா ஆரம்பிச்சாங்கனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.ஒருத்தரின் பேரைச்சொல்லி ஊருக்குள்ள இவ்வளவு பேருலாம் கட்சி ஆரம்பிக்காதீங்கய்யா..னு ஒரு சட்டத்தை மட்டும் போட்டீங்கன்னா இதுவரைக்கும் தனித்தனியா கட்சி நடத்திட்டு இருக்குறவங்களோட சேர்த்து, மக்களும் உங்களுக்கு இன்பாக்ஸுல வாழ்த்து சொல்வாங்க. செய்வீர்களா..?


- ஜெ.வி.பிரவீன்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க