வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (01/03/2017)

கடைசி தொடர்பு:15:10 (01/03/2017)

வொயராசனம், பென்சிலாசனம்... - யோகாசனம் பல வகைப்படும்!

ந்திய மக்கள் எல்லோரும் யோகா செய்யணும்னு ஆரம்பிச்சு அப்படியே கேன்சர் குணமாகணும்னா யோகா பண்ணுங்கனு சொன்னாலும் சொல்லுவாய்ங்க. அதுக்குள்ள சிலபல யோகா வகைகளைக் கத்து வெச்சுக்கிறது நல்லது. இவையெல்லாம் கோடம்பாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட யோகாசனங்கள். 

யோகா

'நடராசாசனம்':

இந்த வகை யோகாவில் உடம்பு குலுங்காமல் சில மைல் தூரத்திற்கு தினமும் நடக்க வேண்டும். யாராவது கூப்பிட்டால்கூட ஸ்லோமோஷனில்தான் திரும்பிப் பார்க்கணும். இந்த நடராசாசனம் செய்வதால் பெரும் பேரும் புகழும் கிட்டும். கோட் போட்டுக்கொண்டு நடராசாசனம் செய்வது இன்னும் சிறப்பு. 

ஜிம்மாசனம் :

ஒவ்வொரு ஆறு மாசத்திற்கும் வெவ்வேறு தோற்றங்களில் காணப்படுவதற்காக அல்லும்பகலும் ஜிம்மே கதியாய்க் கிடக்க வேண்டும். ரெண்டு நாள் சோறு தண்ணி இல்லாமக் கிடந்து கண்ணுமுழி வெளிய வர்ற அளவுக்குக் கடுமையா உழைக்கணும். சில நேரங்களில், ஜிம் மாஸ்டருக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு உடலை வருத்தி யோகா பண்ணணும்.

ஜம்ப்பாசனம் :

சென்னை போன்ற பெருநகரங்களில் செய்வதற்கு ஏற்ற ஆசனம் இது. அருகருகே இருக்கும் மாடி வீடுகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தாவித்தாவிப் பயிற்சி செய்ய வேண்டும். இந்த ஆசனங்களைத் தொடர்ந்து செய்வதால், உங்களை வேறு கண்டத்தில் விட்டால்கூட ஸ்விம்மைங்கைப் போட்டே சொந்த ஊருக்கு வரும் ஆற்றலையும் பெறுவீர்கள். 

வொயராசனம் :

என்ன வேலை செய்தாலும் நமக்குப் பக்கத்திலேயே வொயரை சுருட்டி வைத்துக்கொண்டு, அவ்வப்போது 'என்ன இது கையில வந்து மாட்டுது..?' எனச்  சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். சிறுவயதில் விளையாடிய டியூப்-லைட் ரவுண்ட் விளையாட்டை பட்டி டிங்கரிங் செய்து, எந்தக் கேள்வி கேட்டாலும் சம்பந்தமில்லாமல் பேசி எதிரில் இருப்பவர்களை டயர்டாக்க வேண்டும். இந்த ஆசனம் செய்பவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவராகும் எதிர்காலம் உண்டு. 

யோகா

கத்தாசனம் :

காலையில் கண்ணு முழிச்சதுமே செய்ய ஆரம்பிக்கிற இந்த ஆசனத்தைத் தூங்குற வரைக்கும் தொடரணும். 'சோத்துல உப்பு இல்லேம்மா...'னு நாம சொன்னதைக் கேட்டு பக்கத்துத் தெருவின் கடைசி வீட்டுல குடியிருக்கிறவங்க 'என்னம்மா அங்க சத்தம்'னு ஓடிவர்ற அளவுக்குக் கத்தனும். 'வீட்டை விட்டு வெளியில் போகும்போது, வரும்போதெல்லாம் கதவை ஓங்கி அடிச்சுக் குழந்தைகளைப் பயமுறுத்தணும். 

பென்சிலாசனம் :

'இவனெல்லாம் சாப்பிடுவானா மாட்டானா..?'னு நம்மைப் பார்க்கிற எல்லோருக்கும் தோணுற மாதிரி எப்போவுமே சைஸ் ஸீரோவிலேயே உடம்பை மெயின்டெயின் பண்ணணும். பாடி சொங்கியா இருந்தாலும் பாடி-லாங்வேஜ்லேயே எல்லா மைனஸையும் கவர் பண்ணும் வித்தையைக் கத்து வெச்சுருக்கணும். திடீர்னு சான்ஸ் கிடைச்சு டாப் கியர்ல போகவும் வாய்ப்பு இருக்கு. 

புலியாசனம் :

பெருசா கஷ்டப்பட்டு ஒண்ணுமே பண்ணத் தேவையில்லை. 'புலி வருது... புலி வருது...'னு ஓர் ஊர்ல புரளியைக் கிளப்பி விட்டுக்கிட்டே இருந்தாங்களாம். அங்கே இருக்கிற மக்கள் பயந்துபோய் ராத்திரியெல்லாம் தூங்காம முழிச்சிக்கிட்டு இருப்பாய்ங்களாம். அப்புறம் அப்படியே அதற்குப்பிறகு 'புலி வருது...'னு சொன்னாலே யாரும் நம்பலையாம். ஒரு நாள் நிஜமாவே புலி வந்திடுச்சாம். இந்தக் கதை தெரியும்தானே மக்களே... இதே மாதிரி 'இந்தா யோகா பண்ணப்போறோம்...' னு அப்பப்போ யாரையாவது விட்டுச் சொல்லச் சொன்னா மட்டும் போதும். புலியாசனம் ஓவர்!

- விக்கி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்