வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (03/03/2017)

கடைசி தொடர்பு:14:01 (06/03/2017)

நாங்க எல்லாம் எக்ஸாம் எழுதுன காலத்துல... - பரீட்சை ஹால் அட்ராசிட்டீஸ்!

ன் டென்ஷனாகிற..? அட... ஏன் டென்ஷன் ஆகிறேன்னு நம்மளைக் கேட்டுக் கேட்டு, பெத்தவங்களும்  டீச்சர்ஸும் டென்ஷன் ஆகிற திருவிழாவுக்குப் பேருதான், பப்ளிக் எக்ஸாம். பரீட்சை இதோ ஆரம்பிச்சாச்சு. பரீட்சை சீஸன் அட்ராசிட்டீஸ் சில...

பரீட்சை

* இதைச் சாப்பிட்டா தூக்கம் வரும்; இதைச் சாப்பிட்டா தூக்கம் வராதுனு பக்கத்து வீட்டு ஆன்ட்டிகூட ஆராய்ச்சி பண்ணி எதையாவது சமைச்சித் தர்றது... இல்லை நான் தெரியாமத்தான் கேட்கிறேன்... ஒரு மனுஷன் பரீட்சைனு பேப்பரோட போராடிக்கிட்டு இருக்கும்போது எப்படித் தூக்கம் வரும்கிறேன்?

* 'சாமி கும்பிட்டுட்டுப் போ...' 'தாத்தா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டுப்போ'னு எங்கேயோ போர்க்களத்துக்குப் போற மாதிரி பில்டப்களை ஏத்திவிடுறது... ஏன் இப்படி? மூணு மாசமா ரிவிஷன்கிற பேர்ல திரும்பத் திரும்ப எழுதியதையேதானே எழுதப்போறேன். எதுக்கு இந்த வெத்து சீனு?

* ஒரு வருஷமா படிக்காததை கடைசி ஒருமணி நேரத்துல படிச்சுடலாம்னு நினைக்கிற அந்த மனசு இருக்கே... அதான் சார் கடவுள். படிப்பானுக படிப்பானுக படிப்பானுக பாருங்க. பஸ்ல போகும்போது... ஆட்டோல போகும்போது... ஸ்கூல் மரத்தடில... எக்சாம் ஹால் வராண்டாவுல, சாப்பிட்டுக்கிட்டே...பேசிக்கிட்டே...வேடிக்கை பார்த்துக்கிட்டே... அட அட அட... இப்படி வருஷம் ஃபுல்லா படிச்சிருந்தா, இப்ப படிக்க ஒரு லைன்கூட மிஞ்சிருக்காதேடா..? சோ சேட்..!

* அதெல்லாம்கூட பரவால்லை. எக்சாம் ஹாலுக்கு உள்ள போற பெல் அடிச்சதும் படிக்க ஆரம்பிப்பாய்ங்க பாருங்க... அதெல்லாம் வேற லெவல். 'போதும், உள்ள வாங்க லேட்டாச்சு'னு சொன்னதும் புக்கை வெளியே வெச்சிட்டு உள்ள போற நிலைமை இருக்கே... உடலைப் பிரியும் உயிரின் வலிக்கு ஒப்பானது.

* உள்ள போனதும் தண்ணீர், ஃபேன்லாம் இருக்கானு பார்க்கிறவன் மனுஷன். ஜன்னல் இருக்கானு பார்க்கிறவன் பெரிய மனுஷன். ஜன்னலுக்குப் பக்கத்துல உட்கார இடம் கிடைச்சவன் அதிர்ஷ்டசாலியாகவும் முதல் பெஞ்சில் உட்கார இடம் கிடைச்சவன் படு துரதிர்ஷ்டசாலியாகவும் பார்க்கப்படுவான். கடைசி பெஞ்சில் இடம் கிடைச்சவன், தன்னை ராஜா போல நினைச்சுக்குவான். ஆனா, ஒற்றர் (சூப்பர்வைசர்) ராஜா பக்கத்திலயேதான் நிற்பார். விதி வலியது!

* பேப்பரைக் கொடுத்துட்டுப் பதிவு எண்ணை (ரிஜிஸ்டர் நம்பர்) கரெக்டா எழுதுங்க. வேற நம்பரை எழுதிடாதீங்க.. பேரும் இருக்காது. அப்புறம் அவ்ளோதான்னு சூப்பர்வைசர் கொடுக்கிற அலர்ட்லயே பதறிடும். கொஞ்சநேரம் வாயை மூடுங்க ஆபீஸர். இதை மட்டும்னாலும் கரெக்டா எழுதிக்கிறேன்... ப்ளீஸ்... மனசுக்குள்ள பேசாம நம்ம ஃப்ரெண்ட் நம்பரைப் போட்டுவிடலாமானுகூட தோணும். ஆனா, மாட்டிக்கிட்டா நம்பர்கூட ஒழுங்கா போடத் தெரியாதானு கேட்டு அவமானமா போய்டும் வேணாம்.. வேணாம்.

பரீட்சை

* கொஸ்டீன் பேப்பர் கைக்கு வந்ததும், அதைப் படிச்சுட்டு ஒரு சிரிப்பு வரும் பாருங்க... தெய்வீகச் சிரிப்பு. எல்லா கொஸ்டீனுக்கும் பதில் தெரிஞ்சாலும் சிரிப்பு வரும். எதுக்குமே பதில் தெரியலைனாலும் ஒரு சிரிப்பு வரும். குறை குடம்தான் பாவம் போராடிக்கிட்டு இருக்கும்.

* ஏதாவது கொஸ்டீனுக்குப் பதில், அருவி மாதிரி கொட்டிக்கிட்டு இருக்கும்போது, சூப்பர்வைசர் பக்கத்துல வந்து நிற்பார். அவர் வந்து நின்னதும், அந்த வார்த்தை வரவே வராது... அங்கிட்டுப் போயா... அப்பதான் மானே தேனேலாம் போட்டு எழுத முடியும். கிட்டவே நின்னுக்கிட்டுருந்தா போங்கா எழுதிட்டிருக்க எனக்கு ஷையா இருக்காது? டோன்ட் டிஸ்டர்ப் மீ..!

* என்ன எழுதுறதுனு தெரியாம போர் அடிக்குதேனு பேப்பரை டெக்கரேஷன் பண்ணிட்டுருக்கும்போதுதான் சுத்தி இருக்கிறவய்ங்கலாம் வெறித்தனமா எழுதிட்டு இருப்பாய்ங்க. இதெல்லாம் பார்க்கும்போது, மனசு ஹர்ட் ஆகுமா இல்லையா? நாம் கோடு கிழிக்கும்போது அவங்க எழுதுறதும், அவங்க எழுதும்போது நாம் கோடு கிழிக்கிறதும் ஒரே கூத்தா இருக்கும். இதுல அடிஷனல் பேப்பர் வேற. ஓடாத வண்டிக்கு எதுக்குயா பெட்ரோலு..?

* நம்ம வெட்டியா இருக்கிறப்போ, சூப்பர்வைசரும் வெட்டியாதான் இருப்பார். ஆனா, அப்போலாம் வராம நமக்கு ஒரு க்ளு கிடைச்சு ஒரு ஃப்ளோவுல பதில் எழுதிட்டு இருக்கிறப்போதான் சைன் போடணும்னு வந்து அடம்பிடிப்பாரு. ஆல்ரெடி ஐ ஹேவ் நோ டைம்.. சீக்கிரம் போட்டுட்டுப் போயானு நம்ம நேரத்தைத் தியாகம் பண்ற பெருந்தன்மை இருக்கே. அடடா.

* ஒருத்தன், தான் படிச்ச, நல்லா தெரிஞ்ச ஒரு கேள்விக்கு பதில் ஞாபகம் வராம மூளையைக் கசக்கிட்டு இருக்கிறப்போ, அவன் முன்னாடி டீயும் வடையும் சாப்பிடுறதெல்லாம் எவ்ளோ பெரிய பாவம் தெரியுமா..? டீயும் வடையும் பிடிக்காதவங்களுக்குக்கூட பரீட்சை எழுதிட்டு இருக்கும்போது, அது தேவாமிர்தமா தெரியும். அதைக் கொடுக்காம திங்கிற சூப்பர்வைசருக்குக் கண்டிப்பா கும்பிபாகம்தான்..!

 

- ரூபிணி தேன்மொழி

நீங்க எப்படி பீல் பண்றீங்க