ஹாஹா லைக், கல்யாண டார்ச்சர் - பொண்ணுங்களுக்கு எவ்ளோ கஷ்டங்கள்? | Irritating moments in a girl's life

வெளியிடப்பட்ட நேரம்: 08:51 (06/03/2017)

கடைசி தொடர்பு:08:50 (06/03/2017)

ஹாஹா லைக், கல்யாண டார்ச்சர் - பொண்ணுங்களுக்கு எவ்ளோ கஷ்டங்கள்?

ங்கே, எந்தப் பஞ்சாயத்து நடந்தாலும் பொண்ணுங்களைக் குத்தம் சொல்றது, தெரியலைனு ஏதாவது கேட்டா 'பொம்பளப் புள்ளை... பேசாம இரு'னு தட்டிக் கழிக்கிறது, ஏமாத்திட்டானு திட்டித் திட்டிப் பாட்டு எழுதுறது, பொண்ணுங்களுக்கு எல்லாம் கஷ்டமே இல்லாத மாதிரி கேலி கிண்டல் பண்றது... பாவம்... பொண்ணுங்க தினம் தினம் கண்விழிக்கும்போதே எம்புட்டுக் கஷ்டங்கள் பூதாகரமாகக் கிளம்பி கண்முன்னாடி வந்து நிக்கிது தெரியுமா..?

பொண்ணுங்க

காலையில் எந்திரிச்சதும் பல் துலக்கிட்டுக் காபி குடிக்கிறோமோ இல்லையோ டேட்டாவை ஆன் பண்ணி வாட்ஸ்அப், ஹைக், மெஸஞ்சர், டி.எம் னு எல்லாத்திலேயும் வந்திருக்கிற மெசேஜ்களுக்கு ஒண்ணு விடாம ரிப்ளை போடணும். இல்லேன்னா 'அந்தப் பொண்ணு ரொம்பத் திமிர் பிடிச்சவ...' னு நாக்கு மேல பல்லைப் போட்டுப் புரளியைக் கிளப்பி விட்டுடுவாய்ங்க. 

டைம்லைன் வாசல்ல தவம் கிடக்கிற பசங்களுக்காக கை விரலை நீட்டியோ, கண்ணுமுழியை உருட்டியோ, முடியைக் கலைச்சு முன்னாடி பின்னாடி விட்டோ ஒரு போட்டோவைப் போட்டு ஆயிரத்திச் சொச்சம் லைக்ஸை அள்ளணும். 'அவ்வளவு முடியாதுப்பே...'னு ஃபீல் பண்ணினா 'எங்க வீட்டுல உப்புமா..!'னு தட்டுல ஒரு ஓரமா உப்புமாவைக் கொட்டி போட்டோவை அப்லோடு பண்ணிட்டு ரெண்டாவது தட்டை உள்ளே தள்ளணும். 

சோஷியல் மீடியாவில் அப்லோடு பண்ணின போட்டோவுக்கு ஒழுங்கா லைக்கைப் போட்டுட்டுக் கிளம்புவாய்ங்களானு பார்த்தா அதுவும் இல்லை. அதுல பாதிப்பேரு 'ஹாஹா' ரியாக்‌ஷன் போட்டு விளையாடியிருப்பான். இன்னும் கொஞ்சப்பேரு 'ப்ப்பா..!'னு விஜய் சேதுபதி போட்டோ கமென்ட்டையே காலங்காலமா போட்டுக் கடிப்பாய்ங்க. அதையெல்லாம் வேற அசராமத் தாங்கணும். 

இத்தனைக்கும் மத்தியில வேலைபார்க்க ஆபிஸ் போகும்போதும், படிக்க காலேஜ் போகும்போதும் பொண்ணுங்க முகத்தில் தூசி படாம இருக்கிறதுக்காக ஒரு எக்ஸ்ட்ரா துப்பட்டா வெச்சு முகத்தைக் கவர் பண்ணினால் கூட, 'முகமூடிக் கொள்ளைக்காரி'னு சொல்லிக் கேலி பண்ணிக் கடுப்பேத்துறதையெல்லாம் காதுலேயே விழாதமாதிரி கடந்து போகணும். 

இந்த அக்கப்போர்களுக்கு இடையில் லவ் பண்றேன்னு பின்னாடியே பல வருசமா சுத்துற பசங்களோட மனசு காயப்படாம அவங்க மனசை மாத்தணும். 'கல்யாணம் பண்ணிக்கோமா... என் ஃப்ரெண்டோட தூரத்து சொந்தக்காரங்க பையன். அமெரிக்காவுல சாஃப்ட்வேர் என்ஜினீயரா இருக்கானாம். நீ என்ன சொல்றே...'னு கேட்டு அப்பப்போ கடுப்பேத்துற பேரன்ட்ஸை சமாதானப்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமா நம்ம வழிக்குக் கொண்டுவரணும். 

பொண்ணுங்க பாவம் பொல்லாதது

பாரபட்சமே பார்க்காம வேலை, மீட்டிங், ப்ராஜெக்ட், ஆன்சைட், அப்ரைஸல்னு வருசம் பூராம் வேலை பார்க்கிற கம்பெனிக்குப் பேயா உழைச்சாலும் மாசத்துல ஒரே ஒரு எக்ஸ்ட்ரா லீவ் போட்டா குரைக்கிற டேமேஜர்கள் வந்து வாய்ப்பாய்ங்க. அவங்களை எல்லாம் சமாளிச்சு புரொமோஷனுக்கும், ட்ரான்ஸ்ஃபருக்கும் காத்திருக்கணும். 

அதுபோக, லவ் ஃபெயிலியர் ஆகிட்டா கூட பசங்க மாதிரி தாடி வளர்த்துக்கிட்டும், மாசக்கணக்கா சரக்கடிச்சு ஃபீல் பண்ணிக்கிட்டும் இருக்கமுடியாது. கலங்குற கண்ணைக் துடைச்சிக்கிட்டே அடுத்த வேலைகளைப் பார்க்கக் கிளம்பிடணும். அப்போவும் வந்து 'உன் மனசு என்ன கல்லா..?'னு கேட்டு நெஞ்சாக்கூட்டையே சுக்குநூறாக்குவாங்க பசங்க. அட... இத்தனையையும் தாங்கிக்கிட்டு... மெய்யாலுமே ரொம்பப் பாவம்ங்க!

- விக்கி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்