“அது என் பிரச்னை அல்ல - குட்டிக்கதையுடன் மிஸ்டர் K! #MondayMotivation | "Its not My Problem" - Here came Mister K with a moral story to motivate us

வெளியிடப்பட்ட நேரம்: 07:51 (06/03/2017)

கடைசி தொடர்பு:19:39 (06/03/2017)

“அது என் பிரச்னை அல்ல - குட்டிக்கதையுடன் மிஸ்டர் K! #MondayMotivation

அடுத்ததா, அதோட கண்ல பட்டது.. அந்த வீட்ல இருந்த ஆடு. அதுவும் ரொம்ப அசால்டா,  “அது என் பிரச்னை அல்ல. உன் பிரச்னை”ன்னு சொல்லிட்டுப் போய்டுச்சு. அடுத்ததா, அதோட கண்ல பட்டது.. அந்த வீட்ல இருந்த ஆடு. அதுவும் ரொம்ப அசால்டா,  “அது என் பிரச்னை அல்ல. உன் பிரச்னை”ன்னு சொல்லிட்டுப் போய்டுச்சு. அடுத்ததா, அதோட கண்ல பட்டது.. அந்த வீட்ல இருந்த ஆடு. அதுவும் ரொம்ப அசால்டா,  “அது என் பிரச்னை அல்ல. உன் பிரச்னை”ன்னு சொல்லிட்டுப் போய்டுச்சு.


மிஸ்டர் K-யிடம் நான் மிக மதிக்கும் விஷயம், பிரச்னைகளை அவன் கையாளும் விதம். யாருடைய பிரச்னையையும் அவன் கேட்டு, ’இது என் பிரச்னை அல்லவே” என்று ஒதுங்கிக்கொண்டதில்லை.

மிஸ்டர் K

அலுவலகத்தில், வீட்டில், நண்பர்களிடத்தில் பொதுவெளியில் என்று சின்னதும் பெரியதுமாகப் பல பிரச்னைகளை நாம் சந்தித்தபடி கடந்துகொண்டுதான் இருக்கிறோம். நமக்கு மட்டும் அல்ல. நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொருத்தருக்கும் அவரவர் அளவிலான பிரச்னைகள் இருக்கும். 

மிஸ்டர் K , எங்கே என்ன பிரச்னை என்றாலும் அவனால் முடிந்ததைச் செய்வான். எதுவுமே செய்ய முடியாவிட்டாலும், ஒரு விஷயத்தைச் செய்வான். அது, அந்தப் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்பது.

Listening

“Listening. இதுவே பாதி பிரச்னைகளைத் தீர்த்துவிடும். நாம் சொல்வதைக் காதுகொடுத்து ஒருத்தர் கேட்கிறார் என்பதே, சம்பந்தப்பட்டவர்களுக்கு பெரிய ஆறுதலாக இருக்கும். ஆனால், அவங்க பிரச்னையைப் புரிஞ்சுக்கிறதுக்காக கேட்கணுமே தவிர, அவங்களுக்குப் பதில் சொல்றதுக்குன்னே கேட்கக்கூடாது” - என்பான். பிரச்னைகளைக் கையாள, அவன் சொன்ன  சில யோசனைகள்:

1. கூலாக இருங்கள்!   

எந்த ஒரு பிரச்னையையும் இலகுவான மனநிலையில் எதிர்கொண்டாலே, அதை எதிர்கொள்ளும் பக்குவம் வந்துவிடும். புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமென்றால், இன்னொருவருக்கு பிரச்னை என்றால், அதற்கு நாம் கருத்து சொல்ல முடிகிறது. நமக்கு என்றால்? அடுத்தவருக்கு ஈஸியாக அட்வைஸ் சொல்ல நம்மால் எப்படி முடிகிறது?  நம் மனது லேசாக இருப்பதால்.

சரி... இலகுவான மனநிலையில் எப்படி இருக்க முடியும்? கஷ்டம்தான். ஆனால் “வருந்தும் அளவுக்கு இது ஒரு பிரச்னையா” என்று உட்கார்ந்து யோசித்தால், பாதிக்கு மேலான பிரச்னைகள் ‘அடப்போடா’ என்று தோன்றும். 

2. சம்பந்தமில்லாததை விலக்குங்கள்

பிரச்னைக்கு என்னென்ன கண்ணிகள் இருக்கிறது என்று ஐந்து நிமிடம் உட்கார்ந்து யோசியுங்கள். ஒரு காகிதத்தில் எழுதுங்கள். கிளை கிளையாய் பல பிரச்னைகள் ஓடும். சம்பந்தமில்லாதவற்றை ஒவ்வொன்றாய் விலக்குங்கள் அல்லது தீருங்கள். இப்போது பூதாகரமாக இருக்கும் பிரச்னை, பூச்சி சைஸுக்கு ஆகிவிடும்.

3. நகைச்சுவை முக்கியம்! 

‘என்னடா இது.. சம்பந்தமில்லாம’ என்று  நினைக்காதீர்கள்  “ பிரச்னைகளைப் பேசறப்பக்கூட ரொம்ப ஜாலியா, ஹ்யூமர் சென்ஸோட பேசுறவங்க அதை ஈஸியா கையாள்வாங்க’ என்பது அறிஞர்கள் வாக்கு. ஆகவே, எந்தச் சந்தர்ப்பத்திலும் ஹ்யூமர் சென்ஸைக் கைவிடாதீர்கள். 

4. விளைவுகளைப் பட்டியலிடுங்கள்

தீர்வுகாணவேண்டிய பிரச்னைக்கான விளைவுகளைப் பட்டியலிடுங்கள். உதாரணமாக, ‘இன்னைக்கு ஆஃபீஸ் போகணுமா? என்று முடிவெடுக்கவேண்டியதுதான் பிரச்னை’ என்றால், என்னென்ன பின்விளைவுகள் என்று மனதுக்குள் பட்டியலிட்டாலே, “அப்ப போயிடலாம்” என்றோ “அவ்வளவுதானே... லீவு போட்டுக்கலாம்” என்றோ சட்டென்று ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம். அதைவிடுத்து, என்னென்ன நடக்குமோ என்று சிந்தனையை வளர்த்துக்கொண்டே இருந்தால், ஒன்றும் ஆகப்போவதில்லை.

 

 

மிஸ்டர் K

”எல்லாவற்றையும் விட முக்கியமானது... பிறர் பிரச்னையை நம் பிரச்னையாக நினைத்து அவர்களுக்கு யோசனை சொல்வது அல்லது உதவியாய் இருப்பதும். எல்லா சூழலிலும் இது நமக்கும் பெரிய படிப்பினையாக இருக்கும். அல்லது நாம் பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது அவர்கள் உதவி, நம் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பார்கள்” என்றான் பக்கத்தில் இருந்த மிஸ்டர் K. 

 “’எனக்கே ஆயிரம் ப்ராப்ளம்ஸ்பா. இதுல அடுத்தவன் பிரச்னையை ஏன் நான் என் பிரச்னையா நினைக்கணும்?’ -இதுதான் படிப்பவர்கள் மனதில் ஓடும் மிஸ்டர் K. அதுக்கேதும் ‘எல்லாருக்கும் தெரிஞ்ச’ குட்டிக்கதை வெச்சிருப்பியே?”

“சொல்றேன். ஒரு வீட்டில் எலி ஒண்ணு இருந்துச்சு. ஒருநாள், அந்த வீட்டு அம்மணி ஒரு பெரிய பெட்டியைக் கொண்டு வந்து, எலி சுத்துற அறைக்குள்ள வெச்சாங்க.  எலி, அதோட தலை உள்ள போற அளவுக்கு லைட்டா ஒரு துளை போட்டு எட்டிப்பார்த்துச்சு.

பார்த்தா.. அதுக்கு பெரிய அதிர்ச்சி. உள்ள இருந்தது ஒரு எலிப்பொறி.

உடனே தவ்விக்குதிச்சு வெளில ஓடிச்சு. முதல்ல அதோட கண்ல பட்டது, வீட்ல இருந்த கோழி அதுகிட்ட ‘கொக்க்கொக்க்கொ’ன்னு சிரிச்சுட்டே சொல்லிச்சு. “எலிப்பொறி எதுக்கு வைப்பாங்க? உன்னைப் பிடிக்கத்தான். எனக்கென்ன? அது என் பிரச்னை அல்ல!” - சொல்லிட்டுப் போய்டுச்சு.

பக்கத்துல நின்னுட்டிருந்த வெள்ளைப் பன்றியும் அதையே சொல்லிச்சு. “அது உன் பிரச்னை”


அடுத்ததா, அதோட கண்ல பட்டது, அந்த வீட்ல இருந்த ஆடு. அதுவும் ரொம்ப அசால்டா,  “அது என் பிரச்னை அல்ல. உன் பிரச்னை”ன்னு சொல்லிட்டுப் போய்டுச்சு.

எலிக்கு ரொம்ப சோகமா போச்சு. ‘அவ்ளோதான் நாம’ன்னு பயந்துட்டிருந்தது.

இதுக்கு நடுவுல என்ன ஆச்சுன்னா,  எலிப்பொறி இருந்த பெட்டிக்குள்ள எலி எட்டிப்பார்க்க லைட்டா ஒரு துளை போட்டுச்சுல்ல... அது வழியா ஒரு பாம்பு உள்ள போய், அதோட வால், எலிப்பொறில டபார்ன்னு அடிச்சு மாட்டிகிச்சு!   

சத்தம்கேட்ட அந்த வீட்டம்மா, ‘எலி மாட்டிகிச்சு’ன்னு நெனைச்சு பெட்டியத் திறக்கவும், பாம்பு கொத்தவும் சரியா இருந்தது. ஓடி வந்த கணவன், வைத்தியரைக் கூப்டான்.

வந்து பார்த்த வைத்தியர், விஷ முறிவுக்கு மருந்து கொடுத்துட்டு, “ஒண்ணும் சொல்ல முடியாது. எதுக்கும் நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். நல்ல கறிச்சோறா போடுங்க”ன்னுட்டுப் போய்ட்டார். மொதல்ல பலியானது கோழி. அதை சமைச்சு சிக்கன் செஞ்சு குடுத்தாச்சு. ம்ஹும். படுத்த படுக்கைதான்.

நோய்வாய்ப்பட்ட அந்தம்மாவைப் பார்க்க சொந்தக்காரங்க வரவே, எல்லாருக்கும்  சாப்பிட ரெடியாச்சு, ஃபோர்க்  பிரியாணி. ஆக,   'அது உன் பிரச்னை’ன்னு தட்டிக்கழிச்ச பன்றிக்கும் உயிர் போச்சு.  “நல்லா குணமானா, உனக்கு கெடா வெட்டுறேன் தாயி”ன்னு அவங்க கணவன்  வேண்டிக்கிட்டான். அந்தம்மாவும் குணமாச்சு. ஆடும் அவுட்டு!

எல்லாத்தையும் பார்த்துட்டிருந்த எலிக்கு என்னடா இதுன்னு தோணிச்சு. “என் பிரச்னைன்னு உங்ககிட்ட வந்தேன். ஆனா அது இப்ப உங்க எல்லார் பிரச்னையாவும் மாறிடுச்சே”ன்னு வருத்தமும் பட்டுகிச்சு. 
அதுனால....”


மிஸ்டர் K தொடரும் முன் சொன்னேன்: ”யாராவது பிரச்னைன்னு நம்மகிட்ட வந்து சொன்னா, அதை நம்ம பிரச்னையா நினைச்சு, அக்கறையா பதில் சொல்லணும்”

"ரைட்டு!” என்று டாட்டா காட்டினான் மிஸ்டர் K. 

-பரிசல் கிருஷ்ணா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close