Published:Updated:

மஜித் மஜிதி படத்தில் வங்காள இயக்குநர்!

மஜித் மஜிதி படத்தில் வங்காள இயக்குநர்!
மஜித் மஜிதி படத்தில் வங்காள இயக்குநர்!
மஜித் மஜிதி படத்தில் வங்காள இயக்குநர்!

உலகப் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் அடுத்த திரைப்படத்தில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இயக்குநர் மற்றும் நடிகர் கௌதம் கோசே நடிக்கவிருக்கிறார்.

மஜித் மஜிதி, 'பியாண்ட் த கிளவுட்ஸ்' (Beyond The Clouds) என்ற திரைப்படத்தை எடுக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தின் கதை, இந்தியாவைப் பின்புலமாகக்கொண்டு அமைக்கப்பட்டு உள்ளதாம். மேலும், சீ ஸ்டூடியோஸ் (Zee Studios) மற்றும் ஐகேண்டி ஃபிலிம்ஸ் (Eyecandy Films) நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

திரைக்கதை எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், நடிகர் என்று பன்முகங்களைக்கொண்ட கௌதம் கோசே, தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 'ஆமாம், கௌதம் கோசே இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர், இதில் இணைந்திருப்பதை அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர். அவர் இந்தக் குழுவுடன் இணைந்து வேலை செய்வதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்' என்று தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பு கூறியுள்ளது.