வெளியிடப்பட்ட நேரம்: 11:13 (07/03/2017)

கடைசி தொடர்பு:11:13 (07/03/2017)

பா.ஜ.க இல்லாத தமிழ்நாடு எப்படி இருக்கும் தெரியுமா?

அடிக்கடி பிரஸ் மீட், அதில் தெறிக்கும் அகாதுகா கருத்துகள், சமூக வலைதளங்களுக்கு கன்டென்ட் கொடுக்கும் பெரிய மனசு, வேஷ்டி கிழியாமல் போடும் கோஷ்டி சண்டை - இவ்வளவு சொன்ன பிறகும் தெரியவில்லையா இது தமிழக பா.ஜ.க. பற்றிய கட்டுரை என்று. இப்படி சதா சர்வகாலமும் நமக்கு என்டர்டெயின்மென்டை வாரி வழங்கும் பா.ஜ.க இல்லாத தமிழகம் (இப்போ மட்டும் இருக்காக்கும்னு நீங்க கேட்டா எங்களுக்கு பதில் சொல்லத் தெரியாது... ஆமா) எவ்வளவு போரடிக்கும் தெரியுமா? எப்படி எல்லாம் நம்மை அவர்கள் சிரிக்க வைக்கிறார்கள் என நன்றியோடு நினைவுகூறும் பதிவு இது.

பாஜக

ஆளாளுக்கு ஆளவந்தான் :

ஒரு ஆளவந்தானுக்கே தாணு படாத பாடுபட்டார். ஆளாளுக்கு ஆளவந்தான் மாதிரி குண்டக்க மண்டக்க பேசித் திரிந்தால் நீங்கள் தமிழக பா.ஜ.க. அலுவலகத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அடிக்கடி எதையாவது சொல்லி பற்றவைப்பது பா.ஜ.க. தலைவர்கள் ஸ்டைல். அது கொழுந்து விட்டெரியும்போது இன்னொருவர் வந்து, 'அதெப்படி அவர் அப்படி சொல்லலாம்? நான் சொல்றேன். அது அப்படித்தான்' என நெய் ஊற்றுவார். மொத்தமாய் வந்து தமிழிசை தலையில் விடிய, 'நாங்க எப்பவுமே இப்படித்தான் விளையாடிக்குவோம். போங்க பாஸ்' என சிரித்து சமாளிப்பார். 

சந்து பொந்து சண்டை :

பொதுமக்களை சரமாரியாய் விமர்சிப்பதில் பா.ஜ.க. தலைவர்களுக்கு நிகர் அவர்களேதான். ஆனால் எல்லாமே டி.வி ஷோவிலும் ட்விட்டரிலும்தான். இதில் எல்லோருக்கும் குருசாமி சுப்பிரமணியன் சுவாமி. சிலம்பாட்டம், வர்மக்கலை, கராத்தே, குங்ஃபூ என ட்விட்டரிலேயே எல்லா மார்ஷியல் ஆர்ட்ஸையும் பழகுவார். எல்லோரிடமும் அட்ரஸ் கேட்டு இந்நேரம் எல்லோ பேஜஸ் புக் போட்டிருப்பார். அவருக்கு அடுத்த இடம் ஹெச்.ராஜாவுக்கு. ஏதாவது கருத்து சொல்ல, கீழே கமென்ட் செக்‌ஷனில் குருஷேத்திரப் போரே நடக்கும்.

பன்ச் தாதா :

கோலிவுட், டோலிவுட்டை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் பன்ச் டயலாக்குகளை எல்லாம் நீங்கள் தமிழக பா.ஜ.க-வில் கேட்கலாம். மிகச் சமீபத்திய உதாரணம் தமிழிசை செளந்தரராஜன். 'மற்றவர்கள் அரசியலுக்கு வந்துதான் டாக்டராவார்கள், நான் டாக்டரான பின் அரசியலுக்கு வந்தவள்' - இதுதான் சமீபத்தில் அவர் பேசிய பன்ச். (நம்புங்க பாஸ், இது பன்ச்தான்) நீட் தேர்வுக்கு ஆதரவாக அவர் பேசிய டயலாக் இது. ஆனால் பன்ச்சுக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம் என கடந்த 48 மணி நேரமாய் யோசித்தும் பிடிபடவில்லை. தட் இஸ் பா.ஜ.க. பவர்!

பிரஸ் மீட் :

பத்திரிகையாளர்களை தமிழகம் முழுக்க ரவுண்ட்ஸில் விட்டு வேலை வாங்குவது பா.ஜ.க-வினரின் ஸ்டைல். டெல்லியில் உட்கார்ந்துகொண்டு சுப்பிரமணியன் சுவாமி கருத்து சொல்வார். சிவகங்கையில் ஹெ.ச் ராஜா, மீனம்பாக்க ஏர்போர்ட்டில் பொன்.ராதாகிருஷ்ணன், தி.நகர் அலுவலகத்தில் தமிழிசை என வளைத்து வளைத்து பத்திரிகையாளர்களைச் சந்திப்பார்கள். இதற்கு நடுவில் திடீரென 'மிஸ் மீ?' என ஆஜராவார் இல.கணேசன். இந்த பிரஸ்மீட்களைப் பார்த்தாலே பத்துவகையான ஸ்ட்ரெஸ் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

பொதுக்கூட்டம் :

பாஜக

பா.ஜ.க-வின் கடைசி ஆனால் பெஸ்ட் பொழுதுபோக்கு அம்சம் இதுதான். அடிக்கடி 'மாபெரும்' பொதுக்கூட்டத்தை நடத்துவார்கள். சமீபத்தில் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், 'தமிழகத்தில் பி.ஜே.பி. காலூன்ற முடியாது எனக் கூறும் காங்கிரஸ் கட்சி முதலில் இங்கே காலூன்றட்டும். ஜெயலலிதா படுக்கையில் விழுந்தபோதே புறவாசல் வழியாக வந்திருக்க முடியும். ஆனால் நாங்கள் நேரடியாகத்தான் வருவோம்' என தமிழிசை பேசப் பேச முதல் இரண்டு வரிசைகளில் எழுந்த ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. அப்போ அதுக்கடுத்த வரிசைகள் எல்லாம்? அட, ஆளு இருந்தாதானே பாஸ் சத்தம் வரும். இப்படி நடக்கும் மாபெரும் பொதுக்கூட்டங்களைக் காண ஐ தெளசண்ட் வேண்டும் ஐயா! இந்த மாதிரியான விஷயங்களுக்காவது பா.ஜ.க இங்கே வேணும் ப்ரோ!

-நித்திஷ்


டிரெண்டிங் @ விகடன்