வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (07/03/2017)

கடைசி தொடர்பு:16:20 (07/03/2017)

இந்த டெக் வேலைகள்தான் இன்றைய யூத்ஸ் சாய்ஸ்..! #TechJobs

வேலை

கார்ப்ரேட் உலகின் கஞ்சூரிங் பேய்கள் மேனேஜர்ஸ் தான். "உன் வயசு என் எக்ஸ்ப்ரீயன்ஸ்” என்றபடி ஆர்டர் மட்டும் போடும் இவர்களின் தொல்லை இல்லாத வேலைகள் பற்றி தெரியுமா?. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை இப்படி ஒரு வேலை நம் நாட்டில் இல்லவே இல்லை. ஆனால் அடுத்த பத்து ஆண்டுகள் இந்த ஏரியாதான் மோஸ்ட் ஹேப்பனிங் பிளேஸ்.

1) ஆப் டெவலப்பர்ஸ்:

2007 ஆம் ஆண்டுதான் ஆப்பிள் மொபைல்கள் மார்கெட்டுக்கு வந்தன. ஆண்ட்ராய்டு அதற்கும் பிறகுதான். ஸ்மார்ட்போன்களுக்காக அன்று முதல் பல மில்லியன் ஆப்ஸ்கள் வந்துவிட்டன. இதுவரை 20 பில்லியன் டாலருக்கும் மேல் ஆப்ஸ் மூலம் மட்டுமே சம்பாதித்திருக்கிறது ஆப்பிள். நம் அன்றாட தேவைகள் எதையுமே ஆன்லைன் மூலம் செய்ய முடிகிறதா? அதை இன்னும் ஸ்பெஷலாக செய்ய ஒரு கைட்லைனை உங்களால் யூகிக்க முடிந்தால், உடனே ஆப்ஸ் டெவலப்பிங் படிங்க. அட்டகாசம் பண்ணுங்க.

2) சோஷியல் மீடியா மேனேஜர்கள்

ஒரு கம்பெனியின் ஆஃபிஸ் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால், ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் அதற்கொரு அக்கவுண்ட் இருந்தே ஆக வேண்டும். ட்ரோல் செய்வதையே குலத்தொழிலாக கொண்ட நெட்டிசன்ஸை சமாளிக்க அதற்கு சோஷியல் மீடியா மேனஜரும் தேவை. கொஞ்சம் பொறுமையும், நிறைய கிரியேட்டிவிட்டியும் உங்களுக்கு உண்டா? இந்தாங்க அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர். யூ ஆர் எ சோஷியல் மீடியா மேனேஜர்.

3) யூசர் எக்ஸ்பீரியன்ஸ் டிசைனர்:

வேலை

சூரியனை பார்த்தபடி, குருவிகள் சத்தம் கேட்டு எழுந்திருப்பது ஒரு விதம். அலாரமின் ட்ரின் ட்ரிங் இரைச்சலில் விழிப்பது இன்னொரு விதம். அலாரத்துக்குள் குருவியையும், சூரியனையும் அடைப்பதுதான் இந்த யூசர் எக்ஸ்பீரியன்ஸ் டிசைனரின் வேலை. இயற்கையை டெக்னாலஜிக்குள் சிறை வைக்கும் இந்த வேலைக்கு அல்டிமேட் கற்பனையும், டெக்னிக்கல் நாலேட்ஜும் தேவை. மனிதர்களின் வாழ்க்கைமுறையையே மாற்றி அமைப்பவங்கடா நாங்க என பயோவில் சேர்த்து தூள் கிளப்பலாம்.

4) கல்வி ஆலோசகர்கள்

எல்.கே.ஜி.யே சீக்கிரம் என்றார்கள். அடுத்து, ப்ரீ.கே.ஜி ப்ளே ஸ்கூல் வரைக்கும் வந்தாச்சு. பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பது பெற்றோர்களால் முடிவு செய்யப்படுவதில்லை. அதற்கான எக்ஸ்பெர்ட்ஸ் வந்துவிட்டார்கள். முன்பு, ஒரு வீட்டில் இப்படி ஒருவர் இருப்பார். அந்த இடத்தை ரீப்ளேஸ் செய்திருக்கிறார்கள் கல்வி ஆலோசகர்கள். வெளிநாடுகளில் என்ன படிக்கலாம், எப்படி அப்ளை செய்யலாம் என்பதை சொல்ல ஆரம்பித்தவர்கள், இப்போது இந்திய கல்வி நிலையங்களில் எங்கு சேரலாம், எப்படி சேரலாம் என்பது வரை சொல்லித் தருகிறார்கள்.

5) கிளவுட் கம்யூட்டிங் சேவைகள்

ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை நாம் எடுக்கும் எல்லா புகைப்படங்களையும் மொபைலில் தான் சேவ் செய்திருப்போம்.அதிகபட்சம் மெமரி கார்டு போட்டிருப்போம். ஆனால் இன்று... கூகுள் ஃபோட்டோஸ், டிரைவ்  என ஏகப்பட்ட கிளவுட் சேவைகள் வந்துவிட்டன. எல்லா டேட்டாவையும் எதற்கு மொபைலில் சேகரிக்க வேண்டும்? இந்த கிளவுட் சர்வீஸ் டெக் உலகில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து சாஃப்ஃட்வேர்களும் கிளவுட் அடிப்படையில் இயங்க தொடங்கிவிட்டன. இந்தத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகளும் அதிகம்... அதில் சுவாரஸ்யங்களும் அதிகம்.

-கே

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்