Published:Updated:

சென்னை மென்பொறியாளரின் உயிரைப் பறித்த மாஞ்சா நூல்!

Vikatan Correspondent
சென்னை  மென்பொறியாளரின் உயிரைப் பறித்த மாஞ்சா நூல்!
சென்னை மென்பொறியாளரின் உயிரைப் பறித்த மாஞ்சா நூல்!
சென்னை  மென்பொறியாளரின் உயிரைப் பறித்த மாஞ்சா நூல்!

தாம்பரம்-மதுரவாயல் நெடுஞ்சாலையில், மென்பொறியாளர் சிவபிரகாஷ், அவரின் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மாஞ்சா நூல் அறுத்து சிவபிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரின் தந்தை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2015-ம் ஆண்டிலேயே சென்னை உயர்நீதிமன்றம் மாஞ்சா நூல் தயாரிப்பைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், நாடு முழுவதும் மாஞ்சா நூலைத் தடைசெய்தது. இருப்பினும், சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்துவருகின்றன.