Published:Updated:

கேரளாவிலும் கோக், பெப்சிக்கு குட் பை!

Vikatan Correspondent
கேரளாவிலும் கோக், பெப்சிக்கு குட் பை!
கேரளாவிலும் கோக், பெப்சிக்கு குட் பை!

தமிழகத்தில், பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டுக் குளிர்பானங்களை விற்க மாட்டோம் என்று வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதையடுத்து, கர்நாடகாவிலும் கோக், பெப்சி விற்பனையை, அங்குள்ள வணிகர் சங்கங்கள் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில், கேரளாவிலும், கோக், பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டுக் குளிர்பானங்களின் விற்பனையை நிறுத்த, சில்லறை வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

கேரளாவிலும் கோக், பெப்சிக்கு குட் பை!

''உடல்நலம் பாதிப்பு, நிலத்தடி நீர் குறைவது உள்ளிட்ட காரணங்களுக்காக, கோக், பெப்சி விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான இறுதி முடிவு நாளை எடுக்கப்படும். கோக், பெப்சிக்குப் பதிலாக, மாநிலத்தில் தயாரிக்கப்படும் குளிர்பானங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்'' என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.