Published:Updated:

சிலை கடத்தல் வழக்கில் கைதான தீனதயாளனின் பேரன் தற்கொலை!

Vikatan Correspondent
சிலை கடத்தல் வழக்கில் கைதான தீனதயாளனின் பேரன் தற்கொலை!
சிலை கடத்தல் வழக்கில் கைதான தீனதயாளனின் பேரன் தற்கொலை!
சிலை கடத்தல் வழக்கில் கைதான தீனதயாளனின் பேரன் தற்கொலை!

சிலை கடத்தல் வழக்கில் கைதான தீனதயாளனின் பேரன் ஶ்ரீகாந்த் ஓம்கார் சென்னையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அவரது வீடு அமைந்திருக்கும் வளசரவாக்கம் ஶ்ரீதேவி நகர் பகுதிக்கு விரைந்த போலீஸார், ஶ்ரீகாந்தின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழங்கால சிலைகளைக் கடத்தி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்தது தொடர்பாக, ஶ்ரீகாந்த் ஓம்காரும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர், ஶ்ரீகாந்த் ஜாமீனில் வெளியேவந்தது குறிப்பிடத்தக்கது.