Published:Updated:

ஏர்போர்ட் அதிகாரிகளை ஏமாற்றிய மாணவன்!

Vikatan Correspondent
ஏர்போர்ட் அதிகாரிகளை ஏமாற்றிய மாணவன்!
ஏர்போர்ட் அதிகாரிகளை ஏமாற்றிய மாணவன்!

புனே விமானநிலையத்தில், சி.ஏ படிக்கும் மாணவர் ஒருவர், அங்குள்ள அதிகாரிகளை ஏமாற்றியுள்ளார். கோவாவுக்குச் செல்லும் தனது கேர்ள் ஃப்ரெண்டை வழியனுப்ப வந்த அவர், அதற்கு விமான நிலைய நுழைவுக் கட்டணமான ரூ.45-ஐ செலுத்த அவர் விரும்பவில்லை. பயணத்துக்கான டிக்கெட் இல்லாதவர்கள், நுழைவுக் கட்டணத்தைச் செலுத்திதான் விமான நிலையத்துக்குள் செல்ல வேண்டும்.

ஏர்போர்ட் அதிகாரிகளை ஏமாற்றிய மாணவன்!

இதற்காக, போலியான டிக்கெட்டைத் தயாரித்து, விமான நிலையத்துக்குள் நுழைந்துள்ளார். அதன்படி, இண்டிகோ விமானத்தின் பழைய டிக்கெட்டை எடிட் செய்து, அந்த போலி டிக்கெட்டைக் காண்பித்து அவர் விமானநிலையத்துக்குள் சென்றுவிட்டார். ஆனால், விமானநிலையத்தில் இருந்து வெளியில் வரும்போது, மத்திய தொழில் பாதுகாப்புப்படை அதிகாரிகளிடம் சிக்கினார்.

விமானநிலைய விதிகளின்படி, பயணம் செய்பவர்கள், விமானநிலையத்தின் அனுமதி இல்லாமல் வெளியில் செல்ல முடியாது. இதனால் அந்த மாணவர் சிக்கியுள்ளார்.