"மீண்டும் பெண் குழந்தை!"- நெகிழ்ச்சியில் மார்க் சக்கர்பெர்க்   | Mark zuckerperg and Priscilla chan expecting second daughter

வெளியிடப்பட்ட நேரம்: 01:51 (10/03/2017)

கடைசி தொடர்பு:12:19 (10/03/2017)

"மீண்டும் பெண் குழந்தை!"- நெகிழ்ச்சியில் மார்க் சக்கர்பெர்க்  

மார்க் சக்கர்பெர்க்  

மார்க் சக்கர்பெர்க்  

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், பிரிசில்லா சான் தம்பதியினருக்கு மேக்ஸ் என்ற 15 மாத பெண்குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் இன்னொரு குழந்தை தங்களது வீட்டுக்கு வரவிருப்பதாக மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். "பிரிசில்லா மீண்டும் கர்ப்பம் தரித்திருப்பது தெரிந்ததும் நாங்கள் இருவரும் முதலில் அந்தக் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைத்தோம். அடுத்து அது பெண்குழந்தையாக தான் இருக்கும் என நம்புகிறேன். அக்கா இருப்பதைவிட பெரிய பரிசு வேறெதுவும் இல்லை. மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் மேக்ஸும் அவளும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பார்கள்."

மார்க் சக்கர்பெர்க் தனது சகோதரிகளுடன்  

"நான் மூன்று சகோதரிகளுடன் வளர்ந்தேன். புத்திக்கூர்மையும், வலிமையையும் மிக்க அவர்கள்தான் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார்கள். எனக்கு அவர்கள் சகோதரிகளாக மட்டுமல்லாமல் சிறந்த நண்பர்களாகவும் இருந்தார்கள். பிரிசில்லாவும் இரண்டு சகோதரிகளுடன் தான் வளர்ந்தார். அவர்கள்தான் தனது சகோதரிகளுடன் குடும்பம், பிறர் மீது அன்பு செலுத்துதல், கடின உழைப்பு போன்றவற்றின் முக்கியத்துவத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். சகோதரிகள், அம்மாக்கள், தோழிகள் என வலிமையான பெண்கள் நம்மைச் சுற்றி இருப்பதால்தான் நாம் சிறந்தவர்களாக இருக்கிறோம். எங்கள் செல்லக் குழந்தையை மற்றுமொரு வலிமையான பெண்ணாக வளர்த்தெடுப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறோம்." என பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார்.   

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க