வெளியிடப்பட்ட நேரம்: 14:29 (10/03/2017)

கடைசி தொடர்பு:15:13 (10/03/2017)

இது பல வருஷ சண்டை பாஸ்! - சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துகளின் எஸ்.டி.டி!

ந்த ஒரு பஞ்சாயத்து மட்டும் எத்தனை தலைமுறை தாண்டுனாலும் ஓயாது போல. கோவில்ல உண்டக்கட்டி வாங்குறதுக்குத்தான் அடிச்சுக்குறாங்கனு பார்த்தா இதுக்கு ரொம்பவே அடிச்சுக்குறாங்க மக்களே!

இன்னுமா என்னானு தெரியலை! அட இந்த 'சூப்பர் ஸ்டார்' பஞ்சாயத்துதான் பாஸ். சூப்பர்ஸ்டார்னு சொன்னாலே தனி கெத்துதான். அதுக்கு முக்கியமான காரணம் ரஜினி. ஆனா, அவரையே ஓவர்டேக் பண்ண நினைச்சு ரொம்ப வருஷமா பஞ்சாயத்து பண்றவங்களோட எஸ்.டி.டிதான் இது. (எஸ்.டி.டின்னா வரலாறு தான)

தல தளபதி ரசிகர்கள் :

தல தளபதி ரசிகர்கள் என்று சொன்னவுடன் முதலில் ஞாபகம் வருவது அவர்களுக்குள் நடக்கும் சண்டைதான். இந்தியா - பாகிஸ்தான் சண்டை மாதிரி ரெண்டு பக்கமும் அடிச்சுகிட்டு மல்லுக்கட்டுவாங்க. (இதுல யார் இந்தியா? யார் பாகிஸ்தான்ங்கிறது தனி பஞ்சாயத்தா ஓடும்) இந்த ரெண்டு ரசிகர்களுக்கு அடிக்கடி சண்ட வர்ற பல காரணங்கள் இருந்தாலும், அடுத்த சூப்பர்ஸ்டார் யாருங்கிற கேள்விதான் முக்கியமான ஒன்று. சோஷியல் மீடியாவில் இவர்தான் அதுன்னு யாராவது ஒரு கோஷ்டி போஸ்ட் போட்டுட்டா போதும், ரணகள அதகளம்தான். தலைமுறை தலைமுறையாய் தோண்டி எடுத்து கமென்ட் செக்‌ஷனில் திட்டிக்கொள்வார்கள். இந்த ரெண்டு கோஷ்டிக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்கிற காமன்மேன் தான் ரொம்ப பாவம். 'எங்கள நிம்மதியா நியூஸ் ஃபீட் பார்க்க விடுங்கடாவ்வ்' மொமென்ட்.

லிட்டில் சூப்பர் ஸ்டார் :

தல, தளபதி ரசிகர்கள் ஒரு ட்ராக்கில் போயிட்டு இருக்காங்கன்னா இங்க ஒரு க்ரூப்பு தனி ட்ராக் போட்டு போயிட்டு இருப்பாய்ங்க. எங்க அண்ணன் சிம்புதான்டா அடுத்த சூப்பர் ஸ்டார்னு சொல்ற கோஷ்டிதான் அது. ஏன்னு சிம்பு ஃபேன்ஸ்கிட்ட காரணம் கேட்டா அதான் லிட்டில் சூப்பர் ஸ்டார்னு டைட்டிலே கொடுத்துட்டாங்கல்ல. அப்புறமென்னடானு சண்டைக்கு வருவாங்க. இந்த கொலைவெறி கும்மாங்குத்துக்குக் காரணம் சமராச சங்கீதம் படத்துல வர்ற 'ஐயம் எ லிட்டில் ஸ்டார்... ஆவேன் நா சூப்பர் ஸ்டார்' பாட்டுதான். சிம்பு அவங்க அப்பா டி.ஆர் மாதிரியே 'செம டான்ஸ்' ஆடியிருப்பார். பாஸ் அது வெறும் பாட்டுதான். அதுக்கு ஏன் ஷோல்டரை தூக்குறீங்க? 

இளைய  சூப்பர் ஸ்டார் :

மேலே இருக்கிறதெல்லாம் சமாளிச்சு பெருமூச்சு விடுறதுகுள்ள குறுக்கால இன்னொரு கோஷ்டி ஓடி வரும். 'தம்பி ஓரமா போங்க... உண்மையான சூப்பர் ஸ்டார் அவரின் மருமகன் தனுஷ்தான்' - இதுதான் அந்தக் கோஷ்டியோட கருத்து. நீங்க சண்டை போடுறது எல்லாம் சரி, இதெல்லாம் தனுஷுக்கே தோணியிருக்காதேய்யா! 

இப்படி சும்மா போறவங்களை எல்லாம் கூப்பிட்டு கூப்பிட்டு வண்டியில ஏத்திவிட்டு சண்டை போடுறது. வாட் ஆன் ஐடியா சார்ஜி!

மக்கள் சூப்பர் ஸ்டார் :

இதெல்லாம் ஒரு பக்கம் போய்கிட்டு இருந்த சமயத்துல இப்போ ரிலீஸான 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தில், படத்தோட ஆரம்பத்திலேயே ஒரு ஷாக்கிங் க்ளைமாக்ஸ். ஜல்லிக்கட்டு பிரச்னைல பயங்கர ஆக்டிவ்வா இருந்த லாரன்ஸ் மக்களின் சூப்பர்ஸ்டாராம். அவர் வேற நடுவுல 'மக்கள் ஆசைப்பட்டால் நான் அரசியலுக்கு வர்ற தயார்'னு சொல்லியிருந்தார். ஒருவேளை அதுக்கும் இந்த மக்களின் சூப்பர்ஸ்டாருக்கும் சம்பந்தம் இருக்குமோ? சோஷியல் மீடியாவுல மீம்ஸ் பறக்கவும், 'எனக்கு அப்படி எந்த ஆசையும் இல்லனு அறிக்கை விட்டுருக்கார். என்னடா இது மக்களின் சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை?

இந்த பஞ்சாயத்தை எல்லாம் முடிவுக்கு கொண்டு வர ஒரே ஒரு வழிதான் இருக்கு. ஏதாவது ஒரு டி.வி சேனல்ல 'உங்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார்'னு ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தினா டி.ஆர்.பி சும்மா பிச்சுக்கும் பாஸ். அடுத்த சூப்பர்ஸ்டார் யார்னு நீங்களும் கமென்ட்டை போட்டுவிடுங்க. லிஸ்ட் டெவலப் ஆகுதான்னு பார்ப்போம்.

-தார்மிக் லீ


டிரெண்டிங் @ விகடன்