Published:Updated:

“அந்த 10 லைக்ஸ்தான் நேஷனல் ஜியோகிராபி விருது கொடுத்துச்சு!" - ‘கானுயிர்’ வருண் ஆதித்யா #VikatanExclusive

“அந்த 10 லைக்ஸ்தான் நேஷனல் ஜியோகிராபி விருது கொடுத்துச்சு!"  - ‘கானுயிர்’ வருண் ஆதித்யா #VikatanExclusive
“அந்த 10 லைக்ஸ்தான் நேஷனல் ஜியோகிராபி விருது கொடுத்துச்சு!" - ‘கானுயிர்’ வருண் ஆதித்யா #VikatanExclusive

“அந்த 10 லைக்ஸ்தான் நேஷனல் ஜியோகிராபி விருது கொடுத்துச்சு!" - ‘கானுயிர்’ வருண் ஆதித்யா #VikatanExclusive

வருண் ஆதித்யா... 25 வயதிலேயே 'நேஷனல் ஜியாகிராபி' விருது பெற்ற இளம் புகைப்படக் கலைஞர். கோவையை சேர்ந்தவர். கடந்த ஆண்டு இவர் எடுத்த 'பச்சை பாம்பு' புகைப்படத்திற்கு நேஷனல் ஜியாகிராபியின் சிறந்த கானுயிர் புகைப்படத்திற்கான விருது கிடைத்தது. வருண் ஆதித்யாவிடம் புகைப்பட அனுபங்கள் பற்றி பேசினோம்... தனது அனுபவங்களை உற்சாகமாக நம்மிடையே பகிர்ந்து கொண்டார். 

''சின்ன வயசுல இருந்தே இயற்கை மீது காதல். நான் படிச்ச பள்ளியில் படிக்கறதைத் தவிர வேறு எதையும் சொல்லித் தரவில்லை. மாணவர்களிடம் இருந்து மற்ற எந்தத் திறைமையையும் அந்த பள்ளி எதிர்பார்த்ததே இல்லை. எப்போ பாரு படிப்பு படிப்புதான். என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் படிப்புல கெட்டி. எங்க குரூப்லேயே நான்தான்  சராசரி.  எப்போதும் டீச்சர்ஸ் ஏதாவது குறைச் சொல்லி திட்டிக்கிட்டே இருப்பாங்க. அது எனக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிச்சு. படிப்புல நாட்டம் குறைஞ்சு போச்சு. ஆனாலும் எப்படியோ படிச்சு பாஸாகிட்டேன். 

அப்பா, அம்மாவுக்கு வங்கி ஒன்றில் பணி. அதனால, வருடத்துக்கு ஒரு முறை குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வசதி இருந்தது. சிறு வயது முதலே பெற்றோருடன் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். தேக்கடி போன்ற அழகான இடங்களைப் பார்த்த போது இயற்கையின் வசீகரம் என்னை இழுத்தது. வனங்களை நேசிக்க வைத்தது. கோவையில் டிகிரி முடிச்ச பிறகு, லண்டனில் எம்.பி.ஏ பண்ணினேன். லண்டன் ஒரு அழகான நகரம். எங்கு பார்த்தாலும் பூங்காக்கள் தான். பூங்காக்கள், பறவைகளை சும்மா விளையாட்டுக்கு செல்போனில் 'கிளிக்' செய்ய ஆரம்பித்தேன். அதனை நண்பர்களுடன் ஷேர் செய்து கொண்டிருப்பேன். இப்படித்தான் தொடங்கியது  எனது போட்டோகிராபி வாழ்க்கை'' எனக் கூறும், வருணுக்கு ஃபேஸ்புக்தான் க்ரியா ஊக்கி. 

ஃபேஸ்புக்கில் நாம் போடும் ஸ்டேட்டசுக்கு 'லைக்' வந்தால் மனசு கொஞ்சம் துள்ளும்... அதுமாதிரிதான் வருணும் விளையாட்டுக்காக ஃபேஸ்புக்கில் ஒரு படத்தை ஷேர் செய்துள்ளார்.முதலில் 10 லைக்ஸ் கிடைத்துள்ளது. தினமும் 10 பேராவது, வருண் படத்துக்கு லைக்ஸ் போட்டு, அவர்களை அறியாமலேயே பிற்காலத்தில் விருது பெறும் அளவுக்கு அவரைத் தயார் செய்துள்ளனர். ஃபேஸ்புக் தந்த ஊக்கம் வருண் ஆதித்யாவை லண்டன் முழுக்க சுற்றி சுற்றி கிளிக் செய்ய வைத்துள்ளது. 

'உண்மைதான் சார். 'பேஸ்புக்கில் கிடைத்த அந்த 10 லைக்சுக்கு ஆசைப்பட்டுத்தான் போட்டோக்களை எடுத்துத் தள்ளினேன்.டிஎஸ்எல்ஆர் கேமரா ஒன்றும் வாங்கிக் கொண்டேன். லண்டனில் கண்ணில் பட்டதெல்லாம் எனக்கு போட்டோதான். யூடியுப், கூகுளும்தான் எனக்கு புகைப்பட ஆசான்கள். காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை பார்க்கும் பணியில் எப்போதுமே எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. அப்போதே இனி போட்டோகிராபிதான் வாழ்க்கை என முடிவு செய்திருந்தேன். ஒரு கட்டத்தில் ‘நேஷனல் ஜியாகிராபி' போட்டோகிராபர்களை ஃபேஸ்புக்கில் பின் தொடர ஆரம்பித்தேன்.

லண்டனில் ஆங்காங்கே 'கேங்ஸ்டர்ஸ்' மோதிக் கொள்வார்கள். என் கண் முன்னே  அப்படி ஒரு மோதல் நடந்தது. அதனைப் பார்த்து ஆக்ஷன் படங்கள் எடுக்கும் ஆர்வம் உருவானது. பறக்கும் பறவைகள் புகைப்படங்களை அப்படித்தான் எடுக்க ஆரம்பித்தேன். பறவைகளை புகைப்படம் எடுப்பதில்தான் ஒரு போட்டோகிராபருக்கு சவாலே இருக்கிறது. 2013ம் ஆண்டு மறக்கவே முடியாத அந்த நிகழ்வு நடந்தது. 'நேஷனல் ஜியோகிராபி' இதழ் நடத்திய போட்டி ஒன்றில் முதல் பரிசு கிடைத்தது. அந்த வெற்றி என்னை கோஸ்டாரிகா வரை செல்ல வைத்தது. நேஷனல் ஜியாகிராபியில் புகழ்பெற்ற போட்டோகிராபர் மிக்கேல் மெல்ஃபோர்டுடன்  இணைந்து பணி புரியவும் வைத்தது. அவரிடம் இருந்து  நான் நிறைய கற்றுக் கொண்டேன். 

போட்டோகிராபி ஒரு விலை உயர்ந்த 'ஹாபி'. எனது பெற்றோர் மிகுந்த ஊக்கமளித்தனர். கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்து கேமரா, லென்சுகளை வாங்கித் தந்தனர். 'நேஷனல் ஜியாகிராபி' விருது பெற்றதில் இருந்தே நான் தொடர்ந்து டிராவல் செய்ய ஆரம்பித்து விட்டேன். மாதத்திற்கு இரு முறை என்று பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்வேன். ஒவ்வொரு பயணமுமே சவால்களும்  செலவு மிகுந்ததாகவும் இருக்கும். ஆனால், நாம் எதிர்பார்ப்பது போல புகைப்படங்கள் அமைந்து விட்டால் நாம் சந்தித்த கஷ்டங்களை எல்லாம் மறந்து விடுவோம்'' என வருண் ஆதித்யா சொல்லும் போதே நாம் மிரண்டு போனோம். மேலும் அவர் ஒரு போட்டோகிராபருக்கான குணாதிசயங்களை பட்டியலிட்ட போது மேலும் மிரண்டோம். 

''புகைப்படக் கலைஞன் என்பவன் நல்ல படம் அமையும் வரை திருப்தி அடைந்து விடக் கூடாது. திரும்ப திரும்ப முயற்சிக்க வேண்டும். எந்த ஒரு புகைப்படத்திலும் வித்தியாசத்தைக் காட்ட முயற்சி செய்யணும் . வித்தியாசமானக் கோணத்தில் சிந்திக்கணும். திருப்திபா என மனசு சொன்னால்தான் மூட்டையை கட்ட வேண்டும்' 'என்கிறார்.  

-எம்.குமரேசன்

அடுத்த கட்டுரைக்கு