டாடாவுடன் இணைகிறது ஃபோக்ஸ்வாகன்

கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வாகன், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நீண்ட காலத்துக்கு இரண்டு நிறுவனங்களும் இணைந்து கார் தயாரிப்பில் ஈடுபடும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஜெனிவா நாட்டில் நடைபெற்று வரும் மோட்டார் கண்காட்சியின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் டாடா மோட்டார்ஸின் தலைமைச் செயல் அதிகாரி குயின்டென் பட்ஸ்செக், ஃபோக்ஸ்வாகன் தலைமைச் செயல் அதிகாரி மாத்தியஸ் முயெல்லர் மற்றும் ஸ்கோடா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பெர்ஹர்டு மெய்ர் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஏற்கெனவே ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்துடன் ஸ்கோடா கார் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது டாடா மோட்டார்ஸூம் இணைகிறது. இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான கொள்கைகள் மற்றும் திட்டப் பணிகள் இரண்டு மாதத்தில் வரையறுக்கப்படவுள்ளது. 2019ம் ஆண்டில் இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து தயாரிக்கும் கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!