சென்னை சமஸ்கிருதக் கல்லூரி, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது. இந்நிலையில், சென்னை சமஸ்கிருதக் கல்லூரியின் 111-வது ஆண்டு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. அப்போது, ஆன்லைனில் சமஸ்கிருதம் கற்கும் திட்டத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கிவைத்தார். அந்த நிகழ்ச்சியில், இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்மூலம் அந்தக் கல்லூரியில் உள்ள அனைத்து வேதபாடங்களையும், இனி ஆன்லைனிலேயே படிக்கலாம் என்று கூறியுள்ளனர். குறிப்பாக, 'தற்போது, அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவருகின்றன. பல்வேறு மொழிகளும் டிஜிட்டல் கலாசாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சமஸ்கிருதத்தின் பாரம்பர்யத்தைக் காக்கவும், அதன் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்வதற்கும், சமஸ்கிருதக் கல்லூரி டிஜிட்டல் யுகத்துக்குள் நுழைந்துள்ளது' என கல்லூரி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.