Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10 மீம்ஸ்... 20 ஃபார்வர்டு... 30 லைக்ஸ்... இது நெட் தமிழன் டார்கெட்..!

தமிழன்

தமிழனைத் தெரியும். நெட் தமிழன் பற்றி தெரியுமா உங்களுக்கு? ஹேஷ்டேகை டிரெண்ட் ஆக்குவான். ஓவரா பேசினால் பிளாக் செய்வான். தினம் 30 லைக் போடாமல் தூங்க மாட்டான். சாப்பிடும் முன் 10 மீம்ஸ்... சாப்பிட்ட பிறகு 10 மீம்ஸ் பார்ப்பான். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை உலக அதிசயமாக்க ஆன்லைனில் சைன் பண்ணுவான். வாட்ஸ்அப்பில் வருவதுதான் சாஸ்வதம் என நம்புவான். தினம் 10 மீம்ஸ்... 20 ஃபார்வர்டு... 30 லைக்ஸ்... தனக்கென தனி டார்கெட் வைத்திருக்கும் இந்த நெட் தமிழனை இன்னும் கொஞ்சம் டீட்டெயிலா பார்க்கலாம் வாங்க.

உணவு
உயிர்வாழ சாப்பிடுவது ஆதிகாலத்தமிழன் வழக்கு. இன்ஸ்டாகிராமில் ஃபோட்டோ போடவே சாப்பிடுவான் நெட் தமிழன். 16 கோர்ஸ் உணவு ஃப்ரென்ச்சு ஸ்டைல். 18 ஹேஷ்டேக் போட்டு வெறும் இட்லி பொடி சாப்பிடுவது நெட் தமிழன் ஸ்டைல். டைன் இன்-னோ, டேக் அவே-வோ... சாப்பிட்டு முடிச்சதும் ஒரு செல்ஃபி எடுத்தாதான் நெட் தமிழனுக்கு செரிக்கும் என்ற பரிணாம வளர்ச்சிதான் டார்ச்சர் ஆஃப் த டாவின்சி.

பெயர்கள்
நிஜப்பெயர் வைத்தாலே ப்ரிஜிமா, ரங்கிகான்னு வைப்பான். ஃபேக் ஐடிக்கா கவலைப்பட போறான் நெட் தமிழன்? ஆல் இன் ஆல் அழகுராஜாவில் தொடங்கி மோடுமுட்டி வரை அனைத்து காமெடி நாயகர்களும் ட்விட்டரில் இருக்கிறார்கள். எக்ஸ்ட்ராவாக குசும்பன், கப்பல், வட்டஜிலேபி என ஏகப்பட்ட வெரைட்டி. பிரிட்னி ஸ்பியர்ஸை உலகறியும். சட்னி ஸ்பியர்ஸ் என்ற பெயரெல்லாம் தமிழிணையம் மட்டுமே அறியும். பெயருக்கு யோசித்ததில் பத்து பர்செண்டேஜ் கூட ட்வீட் எழுதுவதற்கு யோசிக்க மாட்டான் என்பதுதான் சோகம் ஆஃப் த சொசைட்டி. 

தமிழன்

உறவுகள்
`ஐயம் இன் ரிலேஷன்ஷிப்'னு ஸ்டேட்டஸ் போடுவான். ஆனா, எந்த ரிலேஷன்ஷிப்பும் யாருனு தெரியாது. அப்பாவைத் தவிர எல்லாருமே அங்கிள்; அம்மாவைத் தவிர எல்லாருமே ஆன்ட்டி. அம்மாவின் அக்கா கணவர் தூரத்துச் சொந்தம், தாத்தாவின் தம்பி பையன் ரொம்பத் தூரத்துச் சொந்தம்... அவ்வளவுதான் உறவு. `கொழுந்தியானா என்ன உறவுமுறை?'னு நெட் தமிழன்கிட்ட கேட்டா, மூஞ்சில பூரான் வுட்ருவான். குடும்பமா உட்கார்ந்து பேச இவனுக்கு நேரமே இல்லை. அதுக்கு ஊரே வெள்ளத்துல மிதக்கணும்; கரன்ட் போகணும்; டி.வி ஆஃப் ஆகணும். 

லைக் போடாததால் கோபப்படும் பாசக்காரத் தங்கைகள், அப்பாவையே பிளாக் பண்ணும் கோபக்கார தனயன்கள் எல்லாம் நெட் தமிழன் சமூகத்தில் சர்வ சாதாரணம் என்பதுதான் சொதப்பல்ஸ் ஆஃப் சோஷியல் மீடியா.

எல்லோரையும் நம்பிடுவான்

தெருமுனையில் கிடக்கும் குப்பையை கூட்டிவிட்டு ஒரு செல்ஃபி போட்டு "நீங்களும் கூட்டுங்க... இது நம்ம ரோடுங்க.. #CleanMuttuSandhu" என்றால் கூட உணர்ச்சிவசப்பட்டுவிடுவான். கேள்வியே கேட்காமல் ஆதரவு தருவான். கொஞ்சம் பிசகினா, பதில் சொல்ல கூட விடாமல் மொத்தித் தள்ளுவான். பிறந்த நாளுக்கு நாலு பேருக்கு தெரிந்த பிரபலத்திடம் ஆசீர்வாதம் வாங்க ஆன்லைன் தவம் கிடப்பான். தப்பித்தவறி வாழ்த்து வந்துட்டா, வாழ்ந்த பலனை அப்பவே அடைஞ்சிடுவான். ஃபேக் ஐடின்னு தெரிஞ்சே தனி மெசெஜ்ல குட் மார்னிங் சொல்லிடுவான். எல்லாம் ஓகே. ஆனால், தலைவர் ஐடியில் இருந்தே தப்பா ட்வீட் வந்தாலும் "அது அட்மின்" வேலை சார்னு நம்பறதுதான் கஷ்டகாலம் ஆஃப் திஸ் கன்ட்ரி

காதல்
ஜெனிஃபர் டீச்சரைக் காதலித்தவன், இப்போது மலர் டீச்சரின் மீது பிரேமம்கொண்டு அலைகிறான். ஃபேஸ்புக் சாட்டில் ரூட் பிடித்து, வாட்ஸ்அப் சாட்டில் `டபுள் டிக்'கடித்து பவர் பேங்க் உடன் கடலை வறுக்கிறான். தமிழ் தின்று, ஆங்கிலம் கொன்று இவன் டைப் செய்யும் தமிங்கிலீஷ், எப்படித்தான் அந்தப் புள்ளைக்குப் புரியுமோ? ரெண்டு வார்த்தை டைப் செய்ய சோம்பேறித்தனம். 

எமோடிகான்ஸை வெச்சே காலம் தள்றான். `ஆர் யூ ஓ.கே பேபி?' என ஃபீலிங்கில் பிராண்டி, இரண்டாவது விண்டோவில் `ட்ரூலி மேட்லி'யில் வலை வீசுகிறான். டேட்டிங் அழைப்பில்தான் சாட்டிங்கையே தொடங்குவான். ஆனாலும் `வெர்ஜின் பசங்க சாபம் சும்மா விடாதுடி' என வாள் சுழற்றுவான். காதல் தோல்விகளை லாங் ஜம்ப் தாண்டுவான். டாஸ்மாக்கில் `இந்தப் பொண்ணுங்க ரொம்ப மோசம்' என சூப் சாங் பாடுவான். `ரீசார்ஜ்லாம் வேண்டாம். எனக்கு ஐந்நூறு எம்.பி டேட்டா ட்ரான்ஸ்ஃபர் பண்ணிவிட்ரு' என்பது சமீபத்திய காதல் சங்கீதம். காதலிக்கும்போது ஜாலியாக எடுத்துக்கொண்ட ஜாயின்ட் செல்ஃபிக்களை, பிரேக்அப்புக்குப் பிறகு பரப்பிவிடுவது புதுவகை காதல் பழிவாங்கல்!

-கார்க்கிபவா, வால்டர் ஒயிட்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close