வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (14/03/2017)

கடைசி தொடர்பு:20:55 (14/03/2017)

கோழி கூவுதோ இல்லையோ குட்மார்னிங் வரணும்! - காதல் கசக்குதய்யா!

பொதுவாகக் காதல் என்றாலே நம் அனைவரின் முகத்திலும் புன்னகை தொற்றிக்கொள்ளும். அப்படி புன்னகை ததும்பும் காதலர்களுக்குள்ளே பல்வேறு கசப்புகளும் மொக்கைகளும் இருக்கின்றன. அந்தக் கசப்பும், புளிப்பும் கலந்த பொறுப்புகள் என்னவென்று பார்ப்போமா...

காதல்

* காலையில கோழி கூவுதோ இல்லையோ நம்ம மொபைல்லே இருந்து குட்மார்னிங்னு மெசேஜ் வந்துடணும். அது மட்டும் வரலைன்னா கோழிக் குழம்பு மாதிரி ரெண்டு பேருல ஒருத்தர் கொதிக்க வேண்டி இருக்கும்.

* காலையில இருந்து ராத்திரி வரைக்கும் நாம என்னென்ன பண்றோம்னு நம்ம டைரியில குறிச்சு வைக்கிறோமோ இல்லையோ அவங்களோட வாட்ஸ்அப் மெசேஜ் டைரியில மறக்காம குறிச்சு வைக்கணும்.

* ஒருநாள் பூராவும் நம்ம நெட் யூஸ் பண்ணாலும், பண்ணலைன்னாலும் அது பிரச்னையே இல்லை. ஆனா ஆன்லைன்ல இருந்துக்கிட்டு நமக்கு மட்டும் மெசேஜ் பண்ணலைனா அதுக்காக நடக்கிற போருக்கு முடிவே இல்லாமப் போய்க்கிட்டு இருக்கும்.

* எல்லா விஷயங்களிலும் முதல் அனுபவத்தை நம்ம லைஃப்ல எப்பவுமே மறக்க முடியாது.  முதன்முதலில் சந்திச்ச நாள், இடமெல்லாம் திடீர்னு கேட்கும்போது மறந்துட்டா அவ்வளவுதான். நம்மகிட்டே அன்னம் தண்ணி புழங்கக் கூடாதுனு ஒதுக்கி வெச்சுடுவாங்க.

* 'ஆப்பி பர்த் டே டூ யூ'ன்னு பிறந்தநாள் பாட்டு பாடலைனாலும் பரவாயில்லை. பிறந்தநாளை ஞாபகம் வெச்சி விஷ் பண்ணதோட நின்னுடாம அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி கிஃப்ட் கொடுக்கலைனா முடிஞ்சுது. நல்ல நாளும் அதுவுமா நமக்கு ஏன் அந்த வில்லங்கம்? 

* போன் யூஸ் பண்றதே பேசுறதுக்குதான். அப்படி இருக்கிற போன்ல எப்பயாச்சும் கால் பண்ணும்போது மொபைல் வெய்ட்டிங்ல போச்சுனா அவ்வளவுதான். நம்மளோட லைஃபே முடிஞ்சு போனதாதான் அர்த்தம். ஆனா இதுக்கு இம்புட்டு... இம்புட்டு ஆகாது ராசா...

* இருவிழிப் பார்வைகள் நமக்குள் இருந்தே ஆகணும்னு அக்ரிமென்ட் போட்டுத்தான் லவ் பண்ண ஆரம்பிப்போம். அதனால வாரத்துக்கு ஒருநாள் கண்டிப்பா பார்த்தே ஆகணும். பார்க்க வரலைன்னா என்னை விட உனக்கு வேற ஒண்ணு முக்கியமா இருக்குலனு அடிச்சாகூட பரவாயில்லை... அதுக்கு பதிலா அழ ஆரம்பிச்சா அவ்வளவுதான். அதைக் குடம் குடமா பிடிச்சு நிரப்பலாம்.

காதல்

* 'உன்ன விட.... ஒசந்தது உலகத்தில் ஒண்ணும் இல்ல'ன்னு விதவிதமா பாட்டுப் பாடி இம்ப்ரெஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும். எனக்கு எந்தப் பாட்டு பிடிக்குமோ அது உனக்குப் பிடிச்சே ஆகணும்னு ரெக்கார்டு பண்ணி அதை அனுப்பி இப்பவே கேளுன்னு உயிரை வாங்கியே ஆகணும்னுலாம் எதுவும் விதி இருக்கா தெரியலையே... ஐயஹோ.

* தினமும் எந்த டிரெஸ் போட்டுட்டுப் போறேன்னு நான் பார்க்கணும்னு சொல்லி ஃப்ரீயா கிடைச்ச சிம்ல வீடியோ கால் பண்ணி நம்மளை டார்ச்சர் பண்றதும் இல்லாம பக்கத்துல இருக்கிறவனை வெறுப்பேத்துறதெல்லாம் என்ன பழக்கம்ப்பா?

* செலெக்‌ஷனே பண்ணத் தெரியாதவங்களைக் கூப்பிட்டுட்டு விதவிதமா செலெக்ட் பண்ணச் சொல்லிக் கொடுமைப்படுத்துறது... தலையணைல இருந்து செருப்பு வரைக்கும் வாங்கித் தரச் சொல்லி பில்லைப் போடுறது... ச்சை. ஒரே கஷ்டமப்பா.

* ஏதாச்சும் முக்கியமான விஷயம் பேச வரும்போது வேலை இருக்குனு சொல்லிக் கடுப்பாக்குறது, ஹேட் யூ சொல்லி காண்டாக்குறதெல்லாம் என்ன பண்பாடோ? போங்கய்யா.

* விதவிதமான எண்ணங்கள் இருந்தாலும் ரெண்டு பேரும் ஒத்துப்போக போராடுறது ரொம்பவே கொடூரமான விஷயம். இப்படி எக்கச்சக்க வேறுபாடுகள் இருந்தாலும் இரு மனம் ஒன்றி இணைய இருக்கும் காதலர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லி முடிச்சு வைப்போம். 

 

- வெ.வித்யா காயத்ரி

(மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்