வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (15/03/2017)

கடைசி தொடர்பு:20:04 (15/03/2017)

தமிழனாக இருந்தால் இந்த எக்ஸாமை எழுதவும்! #VikatanFun

பசங்க எல்லாரும் பப்ளிக் எக்ஸாம் எழுதிட்டு இருக்காங்க. நீங்க மட்டும் சும்மா இருந்தா எப்படி? அதனாலதான் உங்களுக்கும் ஒரு கொஸ்டீன் பேப்பர் கொடுத்திருக்கோம். எக்ஸாமுக்கு நீங்க ரெடியா மக்களே..?

 

                                                                                                       கொஸ்டீன்

                                                                                                                                                                                       மொத்த மதிப்பெண்கள் : 100

                                                                                                                                                                                       நேரம் :  நல்ல நேரம்      

5*2= 10 மதிப்பெண்கள்:

I) சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக:

1. ம.தி.மு.க.விலிருந்து விலகி  எத்தனைபேர் ஓ.பி.எஸ் அணியில் இணைந்தனர்?

அ) மூவாயிரம்  ஆ) இரண்டாயிரம்  இ) ஆயிரம்  ஈ) பிம்பிலிக்கா பிலாக்கி


2. தீபா தொடங்கிய பேரவையின் பெயர் என்ன?

அ) ஜெயலலிதா- அம்மா- வேதா பேரவை     ஆ) எம்.ஜி.ஆர்- அம்மா -தீபா பேரவை  இ) எம்.ஜி.ஆர்- அம்மா- சத்யா பேரவை  ஈ) தீபா -அம்மா-    விஜயலக்ஷ்மி பேரவை


3. இவர்களில் யாரை தனக்கு யார் என்றே தெரியாது என்றார் தம்பிதுரை?

அ) தீபக்    ஆ) தீபா      இ) நடராஜன்      ஈ) தமிழக மக்கள்

 

4. இவற்றில் எந்தப்படம் 2017-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது?

அ) இங்க்லீஷ் புக்      ஆ) ஃபேஸ்புக்     இ) நோட்புக்      ஈ) ஜங்கிள் புக்

 

5. பின்வருபவற்றுள்  சட்டசபையில் நிகழ்ந்த சட்டை கிழிப்புக்கு காரணமாக விளங்கியது?

அ) ஸ்டாலின்    ஆ) அவைக்காவலர்கள்   இ) ஆளும்கட்சி    ஈ) சட்டை


                              கொஸ்டீன்

6*2 =12 மதிப்பெண்கள்:

II) பொருத்துக

1.சிங்கம்                                   - ஐ.பி.எல்

2.பொதுச்செயலாளர்             - சூர்யா

3.மிக்சர் -                                  - விஷால்

4.நடராஜன் -                             - நாட்டாமை

5.அ.தி.மு.க -                            - கறிவேப்பிலை

6.சரத்குமார்    -                        - ஓ.பி.எஸ்

                                                    - சசிகலா


4*2= 8 மதிப்பெண்கள்:

III) கோடிட்ட இடங்களை நிரப்புக

1. சிரிப்பது____ இயல்பு என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

2. ஒரு அளவுக்கு___தான் பொறுமையாக இருக்க முடியும் என்றார் சசிகலா.

3. போலீஸ்காரன் ஒதுங்குறான்னா____ அர்த்தம்___னா பாயப்போறான்னு அர்த்தம்.

4. தமிழகத்தில் ___ இல்லாத ஆட்சி வரவேண்டும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.


5*2 = 10 மதிப்பெண்கள்:

IV) பின் வருவனவற்றுள் பொருத்தமில்லாததை எடுத்து எழுதுக:

1.எடப்பாடி,கூவத்தூர், மன்னார்குடி, தேனி, பெங்களூரூ

2.கமல்ஹாசன், சுப்ரமணியன்சுவாமி,சீமான், ஷேவாக்.

3.கையெழுத்து, முதல்வர், பழனிச்சாமி, அன்புமணி

4.மாஃபா பாண்டியராஜன்,தம்பிதுரை, நத்தம் விஸ்வநாதன், செம்மலை

5. ராயப்பேட்டை, கூவத்தூர் ,மன்னை, தென்னை


 

                                                                                                                                                              2கொஸ்டீன்

2*20 = 40 மதிப்பெண்கள்

V)அனைத்திற்கும் விடையளி:

1.ம.தி.மு.கவிலிருந்து ஓ.பி.எஸ் அணியில் இணைந்தவர்களுக்கும் தே.மு.தி.கவிலிருந்து ஓ.பி.எஸ் அணியில் இணைந்தவர்களுக்குமான வேற்றுமைகளையும், ஒற்றுமைகளையும் விளக்குக.

2.உங்கள் ஊர் எம்.எல்.ஏக்கள் சென்றுவந்த இன்பச்சுற்றுலா குறித்து நீங்கள் ஒரு பக்கத்துக்கு கட்டுரை வரைக: 


2*10 = 20 மதிப்பெண்கள்:

VI) விரிவான விடையளி:

 1.கூவத்தூர் கோல்டன் ரிசார்ட்டின் படம் வரைந்து அதன் லொகேஷன்களை குறிப்பிடுக:

                             (அல்லது)

  சசிகலா டூ பழனிச்சாமி, லாலாலேண்ட் டூ மூன்லைட்: 'வடைபோன' சுவாரஸ்ய நிகழ்வுகளை வரைக:


2. அ. 'பிரேக்கிங் நியூஸ்' படுத்திய பாடுகள் பற்றி முந்நூறு வார்த்தைகளுக்கு மேல் மீறினாலும் அதை எழுதுக: 

                         (அல்லது)

    ஆ.  தலைவர், செயல்தலைவர் இரண்டுக்குமான வேற்றுமைகள் உண்மையிலேயே ஏதாவது இருந்தால் அதை எழுதுக:


கற்பனை: - ஜெ.வி.பிரவீன்குமார்.


டிரெண்டிங் @ விகடன்