வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (15/03/2017)

கடைசி தொடர்பு:22:27 (15/03/2017)

'பிரேக்கப்'-பா..? இந்த 7 டிப்ஸை கட்டாயம் பின்பற்றுங்க! #BreakupTips

ஏதோ ஒண்ணு உங்களை விட்டு, தொலைதூரத்துக்குத் தொலைந்துபோனது போல நீங்கள் உணரலாம். வாழ்க்கையே, பீஸ் போன பல்புதான் என்று மெடுல்லா ஆப்ளங்கேட்டாவில்  பெல் அடிக்கலாம். வேகமாக நடந்தாலும் கூட, ஸ்லோ மோஷனில் சோக ஸ்டைலில் உலகம்  நகரலாம். சில சமயங்களில் கடிகாரத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கலாம். உங்க அனுமதியே இல்லாம, திடீரென கண்ணு வேர்க்கலாம். இந்த அறிகுறிக்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா....?

நீங்க காதல் தோல்வியில், மனசுக்குள்ள புரண்டு புரண்டு பொலம்பிட்டு இருக்கீங்கன்னு அர்த்தம். கவலைப்படாதீங்க பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்!  இது குணப்படுத்த முடியற விஷயம் தான். இந்தத் தருணத்தில், உங்கள் காதலி /  காதலனோடு சண்டை போட்டதெல்லாம் மறந்துபோய், அவர்களோடு இருந்த கோல்டன் மொமண்ட்ஸ் மட்டுமே உங்கள் நினைவுகளைச் சூழும். அவர்களோடு எடுத்துக்கொண்ட பழைய செல்ஃபிகளைப் பார்த்து, கொரில்லா க்ளாஸாக இருந்த உங்கள் மனசு லோக்கல் கண்ணாடியாய் உடைந்து சிதறும். உங்க ஃபீல் எனக்குப் புரியுது.. ஏன்னா... சரி விடுங்க!  எந்த மனவலியோ, கஷ்டமோ இல்லாமல், யாரையும் கடுப்படிக்காமல், சூப் பாடல்கள் கேட்காமல், பிரேக் அப் நிலையிலிருந்து மீண்டுவர சின்னதா ஏழு டிப்ஸ் மட்டும் இதோ.... !

பிரேக்கப்

Blue பெட்டில் புரண்டு புரண்டு அழுறதை முதல்ல விடுங்க. சோகத்துல என்ன பண்ணறதுனு கூடத் தெரியாம, அலுவலகத்துக்கோ,  காலேஜூக்கோ லீவ் போட்டுட்டு, நான் ஸ்டாப் தூக்கம் மட்டும் வேண்டாம். அதுவும் உங்க வீட்டுல தூங்காம நண்பர்களோட அறையில் தூங்கி விடுறது மட்டுமல்லாம, அவங்ககிட்டப் பொலம்பி டரியலாக்காதீங்க. உங்களுக்கென்று, நீங்களே ஒரு தவிர்க்கமுடியாத பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். அந்த வேலையில் அதீத கவனம் செலுத்த தொடங்குங்கள். 

Blue 'லவ் அன்ட் லவ் ஒன்லி' பாடல்களை மட்டும் இருந்த ப்ளே லிஸ்டில், சூப் பாடலாக செலக்ட் செய்து டவுன்லோட் செய்து நேரத்தை செலவழிக்க வேண்டாம். பிரேக் அப் பாடலை கேட்டுக்கொண்டே இருந்தால் பழைய நினைவுகள் மின்னல் போல வெட்டிக்கொண்டே இருக்கும். முடிந்த அளவுக்கு மெலடி பாடல்களை மட்டும் உங்க சாய்ஸாக வைத்துக்கொள்ளுங்கள். சில நேரங்களில் உங்களுக்குப் பிடித்த பாடல்களை சத்தம் போட்டுப் பாடுங்கள். பக்கத்தில் இருக்கும் நண்பன் கடுப்பானாலும் பரவாயில்லை. கொஞ்ச நேரத்தில் அவனும் உங்களோடு பாடத் தொடங்கிவிடுவான். இந்த பார்முலா #Verified ப்ரோ! 

Blue ஷாஜகான், மூன்றாம் பிறை, இதயம், வாழ்வே மாயம், குணா அப்பப்போ விடிவி, சேது, காதல் போன்ற படங்களையும் பாருங்க. இது கொஞ்சம் முட்டாள்த்தனமாக இருந்தாலும், வொர்க்அவுட் ஆகும். பிரேக் அப் படங்களாக தேடிப்பிடித்து பார்க்கும்போது, அதில் சில காட்சிகள் உங்கள் வாழ்க்கையிலும் நடந்தது போல தோன்றும். உங்க காதலை விட, டிராஜடியாக இந்தப் படங்கள் இருக்கலாம். இதனால் மனதளவில் ஓர் ஆழ்ந்த அமைதி உங்களுக்கு கிடைக்கும். இதெல்லாம் சப்ப மேட்டருன்னு தூக்கிப்போட்டுவீங்க. அனைத்தையும் கடந்துவிட்ட, ஜென் நிலையை நீங்க அடைந்து விட்டால், உன்னாலே உன்னாலே, சுதேசி ரொமான்ஸ், ராஜா ராணி மாதிரியான படங்களுக்கு வந்துடுங்க... லைஃப்ல இரண்டாவது வாய்ப்புன்னு ஒண்ணு கண்டிப்பா உங்களைத் தேடிவரும். என்னது..  இதுவும் #Verified-ஆனு கேட்கறீங்களா? அதுசரி!   

பிரேக்கப்

Blue காதலிக்கும்போது, உங்களால் செய்ய முடியாமல் போன சில விஷயங்கள் ஏதும் இருந்தால், அதை இப்பொழுது செய்துபாருங்கள். புதுசா ஏதாவது கற்றுக்கொள்ளுங்கள், புதுசா ஒன்றை தெரிந்துகொள்ளும்போது, பழைய விஷயங்களின் மீதான கவனம் குறையும். புதுசா கற்றுக்கொள்ளவிருக்கும் விஷயங்கள் உங்களை மகிழ்ச்சிப்படுத்துமேயானால், நீங்க பாதி கிணறு தாண்டிட்டீங்கன்னு அர்த்தம். 

Blue  ‘பசிக்குது. ஆனா சாப்பிடப்பிடிக்கல’ - இந்த டயலாக்லாம் வேணாம் பாஸ். அது 80ஸ்லயே வழக்கொழிஞ்சு போய்டுச்சு. பிரேக் அப் ஆகிவிட்டால், சாப்பிடாமல் இருக்கக்கூடாது. பசி வந்தாலும் கூட செம கடுப்பா தான் இருக்கும். அதுனாலகூட பக்கத்துல இருக்கிறவங்ககிட்ட எரிந்து விழுவோம். ஆனா சுத்தி இருக்கிறவங்க, நாம எதோ பிரேக் அப் மூடில் இருப்பதாக நினைச்சிப்பாங்க. ஆனா உண்மையிலேயே நீங்க கொலைப்பசியில தான் இப்படி இருப்பீங்கனு புரிஞ்சிக்கோங்க. அதுனால புதுசுபுதுசா ஹோட்டல்களைத் தேடிப்பிடித்து சாப்பிடுங்க. வயிறு நிறைஞ்சா மனசும் நிறைஞ்சிடும். 

Blueசும்மா இருக்குற பேப்பரை கிழிக்கிறது, வேணும்னே பாட்டிலை போட்டு உடைக்கிறதெல்லாம் பண்ணாதீங்க. ஜாலியா ஃப்ரெண்ட்ஸோட ஷாப்பிங் போகலாம். உங்களுக்கு பிடிச்ச உடைகள், மேக்கப் கிட்ன்னு எதையாவது சும்மாக்காச்சும் வாங்கிட்டு வாங்க. புதுசா எது கிடைச்சாலும் லைட்டா ஒரு சந்தோஷம் நம்மை அப்பிப் பிடிக்கும் என்பதுதானே உலக வழக்கம். யு ஃபீல் பெட்டர். 

Blue இறுதியா, உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துபாருங்கள், அப்பொழுது தான் முழுமையாக பிரேக் அப் மோடிலிருந்து வெளியே வரமுடியும். உங்க காதலியோ / காதலனோ யாரையும் குறைசொல்லாதீங்க. ஏமாற்றிவிட்டதாக புலம்புவதையும், வாழ்க்கையே போச்சுன்னு உளறுவதையும் விடுங்க. தப்பு எந்த இடத்தில் என்பதைச் சிந்தித்து உங்களை நீங்களே திருத்திக்கோங்க. கடைசியாக உங்களுடைய காதலனோ / காதலியோ இல்லாமல் தான் இனி உங்கள் வாழ்க்கை என்பதை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.

இவ்வளவு தான் பாஸ், நீங்க சரியாகிட்டீங்க.. தைரியமா அடுத்த காதலுக்கு ரெடியாகலாம். அப்பறம் முக்கியமான ஒண்ணு.. இந்த பேஜை புக் மார்க் பண்ணிக்கோங்க.. ஏன்னா.. அந்தக் காதல் தோல்வியில் முடிந்தாலும், இதே ஏழு டிப்ஸ் தான்...!

ஆல் தி பெஸ்ட்! 

- முத்து பகவத்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்