Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த மாடுகளுக்கு இனி கொம்பே கிடையாது..! அதிர்ச்சி ஆராய்ச்சி

"காம்பினில் பசும்பால் கறந்தால், அதுவா சாதனை???... கொம்பிலும் நான் கொஞ்சம் கறப்பேன்... அது தான் சாதனை!!!"ன்னு தீர்க்கதரிசி கமல்ஹாசன் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது. இப்போ, இங்க கொம்புல பால் கறக்கறத பத்தியில்ல,மாடுகளோட கொம்பே காணாமப் போற கதைய பத்தி தான் பார்க்கப் போறோம். 

மாடுகள் கொம்புகள்

பிரிட்டனில் ஒரு வருடத்திற்கு குறைந்தது 5 பேர் சாவதற்கு காரணமாக "மாடுகள்" இருக்குறதா சொல்லப்படுது. ஆ... காளை மாடுகள அடக்கி, வீர விளையாட்டுகள்ல ஈடுபட்டு எல்லாம் இல்ல. சும்மா அப்படியே நடந்து போகும் போது, மாடு முட்றது, முட்ற மாதிரி வர்ற மாட்டப் பார்த்து பயந்து ஓடிப்போய் விழுந்து சாவுறதுன்னு இப்படியான காரணங்கள். அதுமட்டுமில்லாம, பிரிட்டனில் மனிதர்களின் சாவிற்கு காரணமாக இருக்கும் பெரும் விலங்கு மாடு தான் என்று சொல்கிறார்கள். இதே "மாடு" காரணங்களால அமெரிக்காவில் வருடத்திற்கு 25 பேர் இறப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆக, மாட்டின் கொம்புகள் இந்த இருநாட்டு மக்களுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலா இருக்கு. 

மனிதர்களைக் கொல்லும் கொடிய மிருகமாகப் பார்க்கப்படும் மாடுகள் விவசாயம் மற்றும் பால் பண்ணைகள்ல முக்கியமா வளர்க்கப்படுது. மாடுகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற, கன்னுக்குட்டியாக இருக்கும் போதே கொம்பை வெட்டிவிடுவது, சால்ட்ரிங் (Soldering) மெஷின் கொண்டு கொம்புகளைப் பொசுக்கிவிடுவது போன்ற வேலைகளை செய்து வந்தார்கள்." இது மனிதத்தன்மையற்ற செயல்", "காட்டுமிராண்டித்தனமான செயல்", "மனிதர்கள் உயிர் போகிறது என்பதற்காக மாட்டின் கொம்புகளை அகற்றுவதா?" என்று கோபம் கொண்டு பொங்கினார்கள் விலங்குகள் நலன் பேணும் சில ஆர்வலர்கள். அப்படியான ஆர்வலர்கள் இதற்கு மாற்று வழியைக் கண்டுபிடிக்க சில ஆராய்ச்சியாளர்களை அணுக, அசைக்க முடியா அறிவியலும் கை கொடுக்க, சில பல ஆராய்ச்சிகளைக் கடந்து, இப்போது கொம்புகளே இல்லாமல் பிறக்கும் மாட்டினைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

மாடுகள் கொம்புகள்

ஸ்பாட்டிகை மற்றும் புரி

டாக்டர் ஆலிசன் வேன் என்ற ஜெனிடிக் (Genetic) ஆராய்ச்சியாளர், CRISPR என்ற "ஜீன் எடிட்டிங்" (Gene Editing) முறையைப் பயன்படுத்தி கொம்பில்லா இரண்டு கன்றுகளை செயற்கை கருத்தரிப்பு (IVF) முறையில் உருவாக்கியுள்ளார். ஸ்பாட்டிகை (Spotigy) மற்றும் புரி (Buri) என்று அந்தக் கன்றுக்குட்டிகளுக்கு பெயரிட்டுள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்பே இது செய்யப்பட்டிருந்தாலும்,தற்போது இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றிருப்பதாக சொல்லி, இதை ஒரு திட்டமாக முன்னெடுக்க உள்ளனர். 

கொம்புகள் ஹெரிபோர்ட் (HereFord) மற்றும் ஆங்கஸ் (Angus) என்ற மாட்டினங்களுக்கு இயல்பிலேயே கொம்புகள் இல்லை. இதன் "டிஎன்ஏ"விலிருந்து கொம்பு சம்பந்தப்பட்ட ஜீன்களை வெட்டியெடுத்து, அதை கொம்புகள் கொண்ட மாடுகளின் "டிஎன்ஏ"விலிருக்கும் கொம்பு வளர்தலுக்கான ஜீனோடு மாற்றி வைக்கிறார்கள். பின்பு, இந்த "டிஎன்ஏ"வை செயற்கை கருத்தரிப்பு முறையில் உருவாக்கும் போது, மாட்டின் கொம்பு இருக்க வேண்டிய இடங்களில் வெறும் "முடி" மட்டுமே இருக்கும். இதனால் கொம்பு குத்தி யாரும் இறக்க மாட்டார்கள். உலகளவில் பால் பண்ணைகளில் அதிகளவு வளர்க்கப்படும் ஹாலிஸ்டெய்ன் (Holistein) இன மாடுகளுக்குத் தான் இந்த "ஜீன் எடிட்டிங்" அவசியம் என்று கருதப்படுகிறது. 

இந்த மாற்றத்தை மாடுகளின் கலப்புகளின் மூலம் இயற்கையாகவும் கூட கொண்டுவரலாம். 

 

கொம்பில்லா ஆங்கஸ் மாடு X கொம்பிருக்கும் ஹாலிஸ்டெய்ன் மாடு = கொம்பில்லா கன்று.

கொம்பில்லா ஆங்கஸ் இன மாடு...

ஆனால், இந்தக் கன்று பாதி கறி மாடாகவும், பாதி கறவை மாடாகவும் இருக்கும். எனவே, இதை மீண்டும் ஒரு ஹாலிஸ்டெய்ன் மாட்டோடு இணை சேர வைக்க வேண்டும். பின்பு, அதற்குப் பிறக்கும் கன்று, கொம்பில்லா கறவை மாடாக இருக்கும். ஆனால், இதெயெல்லாம் நடத்தி முடிக்க 20 வருடங்கள் ஆகிவிடும். அதே சமயம், ஒரு ஊசியின் மூலம் சில மாதங்களிலேயே கொம்பில்லா மாட்டினை உருவாக்க உதவுகிறது இந்த ஆராய்ச்சி. 

மாடுகள் கொம்புகள்

கமல்ஹாசனை வைத்து தொடங்கியது மாதிரியே, அவரை வைத்தே முடித்துவிடுகிறேன்.

" இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் சரியில்லைன்னு நான் சொல்லலை... சரியா இருந்தா நல்லா இருக்கும்ன்னு தான் சொல்றேன்." 

- இரா. கலைச் செல்வன்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close