Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

55 அடி பைனாப்பிள், எலிகள் ஆலயம்.. 150 அடி டைனோசர்... 9 வித்தியாசமான அதிசயங்கள்! #FunToKnow

 

உலக அதிசயங்கள் என்றாலே ஐஸ்வர்யாராய் முதல், தாஜ்மகால் வரை நமக்கு எல்லாமே ஞாபகம் வரும். ஆனால், அவை மட்டுமல்லாமல் வேறு சில இடங்களில் அசாதாரணமானவை எல்லாம் அதிசயங்களாக காட்சி தருகின்றன. பரந்து விரிந்த இவ்வுலகில், அவை என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம். ஸ்கிப் பண்ணாம தொடர்ந்து படியுங்களேன்… 

உகல அதிசங்கள் தென்னாப்பிரிக்காவின் பிக் பைனாப்பிள்

தென்னாப்பிரிக்காவின் பிக் பைனாப்பிள்
            
நம் நாட்டு அன்னாசிப்பழம் தான் அங்கு சென்று பிக் பைனாப்பிள் ஆனது. தென்னாப்பிரிக்காவில் அமைந்துள்ள இந்த பைனாப்பிள் 360 டிகிரி தொலைவில் இருந்து பார்த்தால் பிரமாண்டமாகக் கண்களைக் கவரும். 55 அடி நீளம் கொண்ட இது, ஃபைபர் கண்ணாடியினால் செய்யப்பட்டுள்ளது.  

 

உலக அதிசயங்கள்

ஆஸ்திரேலியாவின் பிக் லாப்ஸ்டர்

ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள முக்கிய நினைவுச் சின்னங்களுள் இதுவும் ஒன்று. லேரி என்பவர் இதனை 1977-ம் ஆண்டில் வைன், பன்னீர், மரக்கட்டைத் தொழிற்சாலை ஆகியவற்றை மேம்படுத்திக் காட்டும் பொருட்டு கட்டமைத்ததாக கூறப்படுகிறது. இன்று இது சுற்றுலாத் தளமாகவும், கிஃப்ட் ஷாப்-ஆகவும் திகழ்கிறது.

உலக அதிசயங்கள் நியூசிலாந்தின் ஸ்டீப்பஸ்ட் ஸ்டிரீட்

நியூசிலாந்தின் ஸ்டீப்பஸ்ட் ஸ்டிரீட்

டியூனடின் எனும் பகுதியில் பால்டுவின் எனும் பெயர் கொண்ட இந்த ஸ்டீப்பஸ்ட் ஸ்டிரீட் உலகின் அதிமுக்கிய புகைப்படத்துக்கான ஒளியியல் மாயையாக அமைந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து பார்க்கும்பொழுது, இங்குள்ள வீடுகள் நம்மைத் தலைசுற்ற வைக்கும். உலகின் சிக்கலான தெருவாக  கின்னஸ் சாதனையைப் பெற்றுள்ளது இந்தத் தெரு. 

 

உலக அதிசயங்கள் ஃபிரான்ஸ், பாரிஸ் சீவர் அருங்காட்சியகம்

ஃபிரான்ஸ், பாரிஸ் சீவர் அருங்காட்சியகம்

பாரிஸ் சீவர் அருங்காட்சியகம் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதனைக் கவனமாகக் கண்டறிய வேண்டும் என்று ஆய்வாளர்கள் சொல்வதுண்டு. இதன் சுரங்கப் பாதை வழியாக நாம் செல்லும்போது, வாட்டர் சைக்கிள் பற்றியும் ஃபிரெஞ்சு நாட்டுப் பணியாளர்கள் பற்றியும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். 

உலக அதிசயங்கள் ஆஸ்திரேலியாவின் பிக் லாப்ஸ்டர்

சீனாவின் அப்சைட் டவுன் ஹவுஸ்

இது சங்காயின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கே தான், 'எங்கேயும் காதல்' படத்தில் வரும் 'ஷங்காய்…..' என்ற பாடலைக் காட்சி படுத்தியிருப்பார்கள். அதன் அருகில் தான், இந்த டவுன் ஹவுஸ் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் வீட்டு சாமான்கள், கிச்சன் செட்டுகள், குழந்தைகளின் படுக்கையறை என வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும். நம் நாட்டில் வாஸ்து சாஸ்திரப்படி கட்டுவோம் அல்லவா; அது போலதான், 'சீனாவின் அப்சைட் டவுன் ஹவுஸ்' என்றும் சொல்லப்படுகிறது.

 

உலக அதிசயங்கள்

 

இன்வரேராய் ஜெயில், ஸ்காட்லாந்து
 
ஜெயில் எப்படி சுற்றுலாத் தளமாக இருக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா. இனிமே அப்படித்தான். இதுவும் ஒரு சுற்றுலாத் தளம் தான். ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள இந்த ஜெயில் 1820 முதல், உலகின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

உலக அதிசயங்கள் வேங் சைன் சுக் ஹெல் கார்டன்

வேங் சைன் சுக் ஹெல் கார்டன்

பெயரே வாயில் நுழையவில்லை, அப்படித்தான் இந்த இடமும். உள்ளே சென்றுவிட்டோம் என்றால், நம் வாயில் இருந்து வார்த்தைகளே வராது. அப்படிப்பட்ட வித்தியாசமான சிற்ப வேலைபாடுகள் கொண்ட இடம் இது. நமது ஊர் எல்லையில் 'சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்று இருக்கும் அல்லவா, அது போல இங்கு 'நரக உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்று எழுதப்பட்டிருக்குமாம். பசியால் உள்ள குட்டிப் பேய்களைப் பெரிய பேய்கள் கொடுமை செய்வது போன்று எல்லாம் உருவங்கள் அமைந்திருப்பது நமக்கு நிச்சயமாய் பீதியைக் கிளப்பும். 

உலக அதிசயங்கள் தேஸ்நாக் எலிகளின் ஆலயம்

தேஸ்நாக் எலிகளின் ஆலயம்

இதுவும் கொஞ்சம் கொடூரமானது தான். இது வேறெங்கும் இல்லை, நம்ம இந்தியாவில் தான் இருக்கிறது. 'கர்னி மாதா கோயில்' என்பது தான், 'எலிகளின் ஆலயம்' என்று பெயர் பெற்றுள்ளதாம். அதாவது, 'கர்னி' எனும் 'பெண்தெய்வம்' தனது உறவினர்கள் யாரும் இறந்து போகவில்லை என்றும்; அவர்கள் எல்லோரும் எலிகளாக உருப்பெற்றிருக்கிறார்கள் என்றும் நம்பிக்கைக் கொண்டதாம். அதன் பொருட்டு இங்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலிகள் குடிகொண்டுள்ளன. அந்த ஊர் மக்களும், இந்தக் கதையை நம்புகிறார்கள். இந்த எலிகள் இதுவரை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியதில்லையாம். நல்ல நட்பு கொண்டிருக்குமாம். 

உலக அதிசயங்கள் கலிஃபோர்னியாவின் லைஃப் சைஸ் டைனோசர்கள்

கலிஃபோர்னியாவின் லைஃப் சைஸ் டைனோசர்கள்

இங்கு டைனோசர்களின் இரண்டு வசிப்பிடங்கள் உள்ளது. உங்களுக்கு T-Rex-ன் வியூ பிடிக்கவில்லை எனில், Mr.Rex-ற்குத் தாவி வாடலாம். அதென்ன Rex- என்று யோசிக்கிறீர்களா? அது தான் டைனோசர்களின் பெயர்கள். இவர்களுடைய எதிரி பெயர் Ms.Denny. 150 அடி,150-டன் கொண்ட இவற்றை கிலாடு கே பெல் என்பவர், கடந்த 1988-ல் உருவாக்கியதாக கூறப்படுகிறது. நாம் மட்டும் டைனோசர்களைப் பற்றித் தெரிந்து கொண்டால் போதுமா, நம்முடைய வருங்கால சந்ததிகளும் தெரிந்துகொள்ளட்டும். 

அடுத்த மாதமே, சம்மர் ஹாலிடேஸ் ஸ்டார்ட் ஆகுது. பரந்து விரிந்த இவ்வுலகை, இனி நேரில் சென்று பார்த்துவிடலாமே. மேலே குறிப்பிட்ட  இடங்களில், நீங்கள் எங்க போக விருப்பப்படுகிறீர்கள் என்பதைக் கமென்ட்ஸ்-ல சொல்லுங்கள். நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

 

- பா.பிரியதர்ஷினி (மாணவப் பத்திரிகையாளர்)           
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close