Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்க காலேஜ்லேயும் இப்படி ஒரு க்ரூப் இருக்குமே..? #CulturalAtrocities

காலேஜ்னு இருந்தா அங்க கல்ச்சுரல்ஸ்னு ஒண்ணு நடக்கும்! கல்ச்சுரல்ஸ்னு நடந்தா அங்க கண்டிப்பா டான்ஸ், பாட்டுன்னு நம்மளைக் கொலையா கொல்ல ஒரு கூட்டம் கண்டிப்பா இருக்கும். ஆனா அந்தக் கூட்டத்துலயும் நமக்காக தன் மானம் மரியாதையை அடகுவைக்கும் சில பேர் இருக்காங்க ஜி!

காலேஜ் கல்ச்சுரல்ஸ் - பிரேமம்

காலேஜ் ஆரம்பிச்ச முதல்நாளே ஒரு கூட்டம், நாங்கதான் கல்ச்சுரல் ஆர்கனைசர்ஸ்னு கிளம்புவாய்ங்க. அந்த வருஷம் பூரா ஒரு க்ளாஸுக்கும் போகாம காலேஜூக்கு உள்ளேயே சுத்திச் சுத்தி வருவாய்ங்க. வருஷம் முடியும்போது தம்பி உங்களுக்கு அட்டென்டென்ஸ் 0.1 சதவிகிதம்தான்பா இருக்குனு புரொபசர் கேட்கிறவரைக்கும் க்ளாஸ் பக்கமே தலை வைக்க மாட்டாங்க. தப்பித்தவறி அப்படிக் கேட்டுட்டா அவ்வளவுதான், இதுக்குனே ரெடியா வாங்கி வெச்சிருந்த ஆன் ட்யூட்டி பர்மிசனை நாலா மடிச்சிக் கையில் கொடுத்துட்டுக் கடைசியா ஒரு முறை கிளாஸை சுற்றிப் பார்த்துட்டு கனத்த இதயத்தோட வெளிய போய்டுவாங்க. அதுக்கப்புறமும் க்ளாஸுக்கு வருவாங்கன்னு நெனைச்சீங்கன்னா....நீங்க கண்டிப்பா டாப்பர்தான் ஜி!

இப்படி ஒரு கூட்டம் உயிரைக் கொடுத்து நம்ம சந்தோசத்துக்காக உழைச்சிக்கிட்டு(?) இருக்கும்போது இன்னொரு கூட்டம் இவங்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துக் கிளம்புவாய்ங்க. (ப்ரேமமே தான்!) இவங்களோட கொள்கை எப்படியாவது நடக்கப்போற கல்ச்சுரல்ஸைக் கலைச்சிவிடணும்கிறதுதான். ஏன்டா இப்படி எல்லாம் பண்றீங்கன்னு கேட்டா 'இந்தக் கேவலமான கல்ச்சுரல்ஸ்ல இருந்து உங்களைக் காப்பாத்த நினைக்கிறது குத்தமா மச்சி'னு ஃபீல் ஆவாய்ங்க. #குத்தம்தான்டா குத்தம்தான்.

சரி... கல்ச்சுரல்ஸை நடத்துறதுலதானே இவ்ளோ போட்டி. நடக்கிறதெல்லாம் நல்லாதானே இருக்கும்னு ஒரு ஆசை உங்க அடி மனசுல இருந்தா, அதை இப்பவே அழி ரப்பர் வெச்சி அழிச்சிடுங்க. ஸ்டேஜ்லாம் போட்டு சூப்பரா ரெடி பண்ணி ஒரு வழியா கச்சேரி ஆரம்பிக்கும். திடீர்னு ஒரு பையனும் ஒரு பொண்ணும் ஆளுக்கொரு மைக்கை கையில எடுத்துக்கிட்டு ஹாஆல்ல்ல்லோஓஒ  (காலேஜ் பேரு)... சொல்லிக் கத்துவாங்க. இருக்கிற உற்சாகத்துல ஆடியன்ஸ் நாமளும் ஆஆ...ஓஓ...லுலூலூ..னு எல்லா வெரைட்டியிலையும் சவுண்டு போடுவோம் . அதுதான் நம்ம பண்ற முதல் தப்பு. ஆஹா நமக்கும் இவ்ளோ சவுண்டு வருதேன்னு நம்பி அந்த ரெண்டு ஜீவன்களும் மறுபடியும் ஒரு லெங்த்தான ஹாஆல்.....னு இழுக்குங்க. ஆனா இங்கதான் நம்ம பசங்க தங்கள் சுயரூபத்தைக் காட்டுவாங்க. அஞ்சாப்பு கிளாஸ்ல லீடர் போர்டுகிட்ட நின்னுகிட்டு பேசுறவன் பேரெல்லாம் எழுதும்போது எவ்ளோ நிசப்தமா இருக்குமோ அதைவிட டபுள், ட்ரிபுள் சைலன்ஸ் அங்கே இருக்கும். அவ்ளோதான் இனிமேலும் அந்த ரெண்டும் மறுபடியும் ஆரம்பிப்பாங்களா என்ன? ஆனா, அதையும் கண்டுக்காம அடுத்த பாயின்ட்டுக்குப் போவாங்க. #கல்ச்சுரல்ஸ்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

காலேஜ் கல்ச்சுரல்ஸ்

காம்ப்பியரிங்கிற பேர்ல ரெண்டு பேரும் திடீர் திடீர்னு ஆளுக்கு ஒரு லைன் பேசி வெச்சிக்கிட்டு ஒவ்வொரு டான்ஸ் டிராமா டீமுக்கும் இன்ட்ரோ கொடுப்பாங்க பாருங்க. (எல்லா நேரமும் லைன்கள் மாறிப்போவது என்ன மாயமோ மந்திரமோ). ஒருத்தன் கேவலமா ஒரு டப்ஸ்மாஷ் பண்ணி மாட்டினாலே பத்துநாள் வெச்சி செய்வோம். அப்போ இவங்களுக்கு எவ்ளோ நாள்னு நீங்களே கால்குலேட் பண்ணிக்கோங்க பிரென்ட்ச். #டங்க் ரோல் ஆனா நாங்க என்னய்யா பண்ண முடியும். அவ்வவ்!

இவங்கல்லாம்கூட ஓகே. நம்ம காலேஜில் படிக்கிறதால இதெல்லாம் பண்றாங்கன்னு விட்டுடலாம். ஆனா சீஃப் கெஸ்டுன்னு ஒருத்தர் வந்து தேமேனு ஓரமா உட்கார்ந்து இருப்பார். நம்ம பசங்க கண்டுக்காம அவங்க வேலையைப் பார்த்துட்டு இருப்பாங்க. திடீர்னு அவரை ஸ்டேஜ்ல ஏத்தும்போதுதான் தெரியும் அவர்தான் சிறப்பு விருந்தினர்னே! #சிறப்பு...மிகச்சிறப்பு!

நம் கல்லூரி கல்ச்சுரல்ஸை சுவாரஸ்யமாக்கி, நிகழ்ச்சிகள் முடிந்தபிறகு இருக்கும் இடமே தெரியாமல் இருந்துவிட்டுப் போகும் இந்த நல் உள்ளங்களை இனிமேலாவது மறக்காதீங்க ப்ரோ!

- ரா.கலைச்செல்வன்
மாணவப் பத்திரிகையாளர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement