Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காதலில் அசத்த பேச்சைக் குறைங்க... இதைப் பண்ணுங்க! #LoveEthics

‘இவ எப்பதான் வாய் திறந்து பேசுவாளோ’ என்பதற்கும், ‘இவ எப்படா பேச்சை நிறுத்துவாளோ’ என்பதற்கும் இடைப்பட்ட காலம்தான் காதல்..!

காதல்

‘கணவன் மனைவியை அடிச்சா பேப்பர்ல செய்தியா போடுறாங்க; மனைவி கணவனை அடிச்சா ஜோக்கா போடுறாங்க’ என்று காதல் பற்றியும், கல்யாணம் பற்றியும் எத்தனை வாட்ஸ்அப் காமெடிகள் வந்தாலும், லவ் என்னைக்குமே கிக்தான் பாஸ்! இதை லவ் பண்றவங்களிடம் கேட்டா தெரியும். சொல்லப் போனால், திருமணத்துக்குப் பிறகுதான் காதல் இன்னும் கிக் ஏற்றும். அதற்கு ஒரே ஒரு விஷயம்தான் நடுநாயகம்.. அது, புரிந்து கொள்ளல்.

காமெடிகள், சண்டைகள், விவாகரத்துகள் கிடக்கட்டும். இன்றும் 80 வயதுவரை உருக உருகக் காதலித்து வாழும் தம்பதியரை நீங்கள் நிச்சயம் எங்காவது பார்த்திருக்கிறீர்கள்தானே! இதற்குக் காரணம், புரிந்து கொள்ளல். இது நான்கைந்து பேர் சாட்சிக் கையெழுத்துப் போட்டு நடக்கும் காதல் கல்யாணத்துக்கும் பொருந்தும்; பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு உறவினர்கள் புடைசூழ நடக்கும் அரேஞ்ஜ்டு மேரேஜுக்கும் பொருந்தும்.

காதல் திருமணம் என்றாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆனாலும் சரி, நமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் சில புரிதல்கள் வேண்டும். பசங்களுக்கும் சரி; பொண்ணுங்களுக்கும் சரி; 'சமந்தா மாதிரி பெப்பியா இருக்கணும்; ராணா மாதிரி செக்ஸியா இருக்கணும்' என்று வெளியே சொல்ல வெட்கப்படுற அளவுக்கு மில்லியன் டாலர் ஆசைகள் மனசுக்குள்ள கொட்டிக் கிடக்கும். 

சரியான கலர்லயோ, தோற்றத்திலேயோ உங்கள் துணையைத் தேர்ந்தெடுப்பதிலொன்றும் வெற்றி அடங்கி விடாது மக்கா! நீங்கள் தேர்ந்தெடுத்த துணையை உங்களுக்குச் சரியானவராக மாற்றுவதில்தான் உங்கள் குடும்ப இன்பம் அடங்கியிருக்கிறது. அதற்குப் 'புரிந்து கொள்ளல்தான்' சரியான வழி. அந்தப் புரிந்துகொள்ளலுக்கு ஒரு ஈஸி வழி இருக்கிறது. அது எழுத்து! சுருக்கமா சொன்னா, பேச்சைக் குறைச்சுட்டு, எழுத ஆரம்பிக்கிறது உங்க லவ்வை ஸ்ட்ராங் ஆக்கும்.

போன் மூலமோ, சினிமா தியேட்டர் ஓரத்தில் உட்கார்ந்தோ பேசிக் கழிப்பதைவிட, உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக்கிப் பாருங்கள். ‘மனிதர் உணர்ந்து கொள்ள...’ என்று உங்களுக்கு நீங்களே 'கமல்' போல் கத்திப் பாட வேண்டும்போல் தோன்றும். ஆம், அன்பு வழியும் உங்களின் ஒவ்வொரு எழுத்துகளும்; படிப்பவருக்கும் செம கிக்! உங்களுக்கும் அடிக்கப் போகுது லக்! உங்களுக்காக கொஞ்சம்போல லவ் டிப்ஸ்..

காதல்

* உங்களுக்குத் துணையாக வரப்போகும் நபரை முதல் முறையாகச் சந்தித்தப் பிறகு, உங்களைப் பற்றி நேரில் பேசுவதை விட, சுருக்கமாக ஒரு இரண்டு பக்கங்களுக்கு எழுதிக் கொடுப்பது சிறப்பு. 'என்னது லெட்டரா? அச்சச்சோ'னு ஜெர்க் ஆகாதீங்க. (ஜென் Z லவ்வர்ஸுக்கு இ-மெயில், வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ஆண்ட்ராய்டு போன் என்று எக்கச்சக்க ஆப்ஷன்கள் இருக்கின்றன.)

* 'மெசேஜ் அனுப்பி 50 நிமிஷம் ஆச்சு; இன்னும் ரிப்ளை வரலையே'னு அதற்கான பதிலை உடனே எதிர்பார்த்துக் காத்துக்கிட்டே இருந்தால், உங்களை மாதிரி அப்பாவிங்க யாருமே இல்லை. கடமையைச் செய்யுங்க; பலன் பின்னால வரும்.

* அடுத்த சந்திப்பில், என் வாழ்க்கைத் துணையிடம் நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்று தெரிவிக்கலாம். இந்தக் கடிதம் முதல், உங்கள் கேள்விகளுக்கான பதிலை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

* அடுத்த நிகழ்வில், துணையின் பதிலில் உள்ள சந்தேகங்கள்... மறு கேள்விகள், எதிர்க்கேள்விகளை ஆரம்பியுங்கள். 

* அடுத்து கொஞ்சம் இம்ப்ரூவ்மென்ட் வேண்டும். 3-ம், 4-ம் நபர்கள் பற்றி... பக்கத்து வீட்டு நாய்க்குட்டி பற்றி, உங்கள்/அவரின் பெரிய அப்பத்தா பற்றி, எடப்பாடி பற்றி என எப்படி வேண்டுமானாலும் புகுந்து விளையாடுங்கள். 

காதல் திருமணமோ, நிச்சயத் திருமணமோ.. வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் முன், முதல் ஒரு வாரம் முதல், ஒரு மாதம் வரை இது போன்ற உரையாடல் நிகழ வேண்டும். நீங்கள் தொடங்கி வைத்தால் போதும், அது தானாய் நிகழும். இது ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுக்கும். கடிதம் என்றால், நாள் ஒன்றுக்கு அதிக பட்சம் 2-க்கு மேல் பரிமாறிக்கொள்ள வாய்ப்பு இல்லை. சோஷியல் மீடியா என்றால் ஒரு வாரத்துக்குக் குறைந்தபட்சம் 50 முதல் 100 தகவல்கள். இப்படியான உரையாடலில், யாரும் யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ இருக்க வாய்ப்பு மிக குறைவு. இருவரும் ஓரளவுக்காவது வெளிப்படையாகத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள நேரும். இதில் முழுக்க முழுக்க வாழ்க்கைத் துணையின் முன்னுரிமைகள், எதிர்காலம், எதிர்பார்ப்புகள் தொடர்பான விவாதம் மட்டுமே மேலோங்கும். 

உங்களின் காமெடி சென்ஸ், சீரியஸ் தன்மை, பெண்கள் வேலைக்குச் செல்லும் நிகழ்வு, குழந்தை பெற்றுக்கொள்ளும் காலம், பெற்றோர்கள், உடன்பிறப்புகள், உறவினர்கள் என, சகலவித கேள்விகளுக்கும் பதில் காணும் களமாக இந்த உரையாடல்கள் திகழும். இந்த உரையாடல்களில் யாரையும் யாரும் திருப்திப்படுத்த வேண்டும், நோகடிக்க வேண்டும் என்று எண்ணம் இல்லாமல், நேரடியாகப் பொறுமையாக பதில் கிடைக்கும் வாய்ப்பு ஒன்று உருவாகும். உணர்வுகள், உத்தியோகம், கடவுள் பக்தி, வசதி வாய்ப்பு, உடல் நலம், பழக்க வழக்கம், விருப்பு-வெறுப்பு என சகல விஷயங்கள் பற்றியும் பேசிப் பாருங்களேன்!?

நேரடி உரையாடலைவிட இதுபோன்ற எழுத்துப் பரிமாற்றம், செமயாக ஒர்க்-அவுட் ஆகும்!

உங்கள் காதல் வாழ்வு என்றென்றும் ஜொலிக்க... இப்போதே பேனாவையோ, போனையோ எடுத்து, ‘ஹாய் செல்லம்’ என்று ஆரம்பியுங்களேன்..! 

ஆல் த பெஸ்ட் பாஸ்!!

கோழி கூவுதோ இல்லையோ குட்மார்னிங் வரணும்!

 

- ரா.அருள் வளன் அரசு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close