புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்! #TimeToGetSmarter

 

 

இன்று மதியம் 12 மணிக்கு, டெல்லியில் தனது ரெட்மி சீரிஸில் புதிய ஸ்மார்ட்போனைக் களமிறக்குக்கிறது ஜியோமி. இது தற்போது விற்பனையில் இருக்கும் ரெட்மி 3S மொபைலின் அடுத்த தலைமுறை மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த ஹூகோ பாரா, இந்த ஆண்டு துவக்கத்தில் நோட்4 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய கையோடு பதவி விலகியதைத் தொடர்ந்து, இந்தியாவில் நடைபெறும் ஜியோமியின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுக விழா இது என்பதால், இந்த நிகழ்வு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தவிர இது தற்போது விற்பனையில் இருக்கும் ரெட்மி 3S மொபைலின் அடுத்த தலைமுறை மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோட் 4 எப்படி ஃப்ளிப்கார்ட்டில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறதோ, அதேபோல இந்தப் புதிய ஸ்மார்ட்போனும், அமேசானில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என ஜியோமி கூறியுள்ளது. இந்தியாவில் தான் கடந்துவந்த பாதையை, அழகான வீடியோவாக்கி வெளியிட்டிருக்கிறது ஜியோமி. அது தற்போது உங்கள் பார்வைக்கு! #TimeToGetSmarter

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!