அறிமுகமானது 2017 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V! | tvs launches the 2017 edition of apache rtr 200 4v

வெளியிடப்பட்ட நேரம்: 06:34 (20/03/2017)

கடைசி தொடர்பு:07:24 (20/03/2017)

அறிமுகமானது 2017 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V!

 

 

வருகின்ற ஏப்ரல் 1, 2017 முதலாக, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் AHO வசதி மற்றும் BS-IV இன்ஜின் ஆகியவை கட்டாயமாக்கப்படுகின்றன. எனவே பல்ஸர் 200NS பைக்கிற்குப் போட்டியாக, கடந்தாண்டு துவக்கத்தில் டிவிஎஸ் அறிமுகப்படுத்திய அப்பாச்சி RTR 200 4V பைக்கின் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - ஏபிஎஸ் அமைப்பு இருக்கக்கூடிய மாடல்கள் இன்னும் வராதது நெருடல். ஆனால் BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப ரீ- டியூன் செய்யப்பட்ட இன்ஜின் மற்றும் Automatic Headlight On வசதிகளுடன் கூடிய 2017-ம் ஆண்டுக்கான அப்பாச்சி RTR 200 4V பைக்கைத் தற்போது களமிறக்கியுள்ளது டிவிஎஸ். எனவே பழைய பைக்குடன் ஒப்பிடும்போது, ஹெட்லைட்டுக்கான ஸ்விட்ச் தற்போது இல்லை என்பதுடன், இன்ஜின் கவுலில் BS-IV ஸ்டிக்கர் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

 

 

இதைத் தவிர பைக்கின் தோற்றம் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை; ஆனால் மேலே சொன்ன விஷயங்களால், முன்பைவிட விலையில் ஏற்றம் கண்டிருக்கிறது (சுமார் 3,000 ரூபாய்) இந்த புதிய பைக்! மும்பை எக்ஸ் ஷோரும் விலையான 97,880 ரூபாய்க்குக் கிடைக்கக்கூடிய  2017-ம் ஆண்டுக்கான கார்புரேட்டர் பொருத்தப்பட்ட அப்பாச்சி RTR 200 4V பைக்கில், பைரலி டயர்கள் பொருத்தப்பட்ட மாடல் ஆப்ஷனும் இருக்கிறது. அதன் மும்பை எக்ஸ் ஷோரும் விலை 1.06 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க