வெளியிடப்பட்ட நேரம்: 12:19 (23/03/2017)

கடைசி தொடர்பு:12:23 (23/03/2017)

ஆதார் கார்டு இல்லாமலும் இந்த எக்ஸாமை எழுதலாம்..! #VikatanFun

நாட்டு நடப்புகளைலாம் கண்ணு, காது கொடுத்துக் கவனிக்கிறவங்களா இருந்தா இந்த எக்ஸாமை ஈஸியா எழுதலாம் மக்களே.. (பின்குறிப்பு: இதுக்கு ஆதார் கார்டு தேவையில்லை. ஆங்க்..)

                                                                                   மொத்த மதிப்பெண்கள்: 100

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:                                                                                                                   5 * 2 = 10

1. ஜெயலலிதாவின் வாரிசுக்கட்சிகளாக மொத்தம் எத்தனைக் கட்சிகள் செயல்படுகின்றன?

அ. 4 ஆ. 5. இ.3 ஈ.கணக்கு இல்லை.

 

2. சமீபத்தில் லாரன்ஸுக்கு வழங்கப்பட்ட பட்டம் என்ன?

அ. மக்கள் லாரன்ஸ் ஆ. மக்கள் ரஜினிகாந்த் இ. மக்கள் சூப்பர்ஸ்டார் ஈ. லாரன்ஸ் ரஜினிகாந்த்.

 

3. சமீபத்தில் எந்த மிக முக்கிய பிரச்னைக்காக ட்விட்டரில் வெங்கய்யா நாயுடு குரல் கொடுத்தார்?

அ. விவசாயிகள் பிரச்னை ஆ. இளையராஜா- எஸ்.பி.பி பிரச்னை இ. மீனவர் பிரச்னை ஈ. நதிநீர் இணைப்பு.

 

4. சிலம்பரசனை எப்படி அழைக்க வேண்டுமாம்?

அ. யங் சூப்பர் ஸ்டார் ஆ. எஸ்.டி.ஆர்  இ.லிட்டில் சூப்பர் ஸ்டார். ஈ. சிம்பு.

 

5. உ.பி என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?

அ. பா.ஜ.க., ஆ. உத்தரப்பிரதேசம், இ. உடன்பிறப்பு, ஈ.உளுத்தம்பருப்பு.

 

 

ஆதார்

II) பொருந்தாதவற்றை மட்டும் எடுத்து எழுதுக:                                                                                                                   5 * 2= 10

நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு, நத்தம் விஸ்வநாதன்,வைகுண்டராஜன் .

ம.தி.மு.க, தே.மு.திக, த.மா.கா , பா.ம.க.

தினகரன், தினத்தந்தி, தி இந்து, தின செய்தி.

காபி வித் அனு, காபி வித் அர்ச்சனா, காபி வித் டிடி, காபி வித் எம்.எல்.ஏ.

காற்று வெளியிடை, பவர்பாண்டி, எனை நோக்கி பாயும் தோட்டா, நெஞ்சம் மறப்பதில்லை.

 

III) கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:                                                                                                                                      10 * 2 =20

வோடஃபோன்    - சென்னை

கோலி              - தாத்தா

அமேசன் ப்ரைம் -     பவர் பாண்டி

200                      -திராவிடம்

50                         -  விஷால்

அஸ்வின்                -மோடி 

நம்ம அணி               - நாய்க்குட்டி

150                        -    வோடஃபோன்

புஜாரா                      -  ஐடியா

 ஜியோ                       - சிம்பு

 

 

ஆதார்

 

IV) பின்வரும் வினாக்களுக்கு விடையளி:                                                                                                                            5 * 8=40

1.பேரவைக்கும், கட்சிக்கும்  உள்ள வித்தியாசங்களை வித்தியாசமாக எழுதுக.

2. 'பவர்பாண்டி' படத்தலைப்பு 'ப.பாண்டி' ஆனது குறித்து ஆக்கக் கட்டுரை வரைக.

3. மெரினாவில் எடுத்த ஓ.பி.எஸ் சபதம், சசிகலா சபதம், தீபா சபதங்களை காலக்கோட்டுப் படம் வரைந்து வேறுபடுத்தி எழுதுக.

4. 13-ம் ஜோக்கராக இருந்தால் எப்படி அடிப்பது என்பது குறித்து ஆய்வுக் கட்டுரை வரைக.

5. 'காற்று வெளியிடை' டீஸரில் ஆர்.ஜே.பாலாஜியைக் கண்டபோது ஏற்பட்ட 'கிர்ர்ர்...'  அனுபவங்களைத் தொகுத்து எழுதுக.

 

V) விரிவான விடையளி                                                                                                                                                           2 * 10=20

1. ஆர். கே நகரின் படம் வரைந்து அந்தப் பகுதிகள் படும் பாடுகளைப் பாட்டாக எழுதுக.

2. 'காப்பிரைட்' பிரச்னையிலிருந்து 'கசாயம்' ஆகிய நாம் தமிழர் கட்சி வரைக்குமான பரிணாமங்களை வரைக.

கற்பனை - ஜெ.வி.பிரவீன்குமார்


டிரெண்டிங் @ விகடன்