வெளியிடப்பட்ட நேரம்: 20:48 (23/03/2017)

கடைசி தொடர்பு:21:31 (23/03/2017)

சபத சின்னம் முதல் ரிசார்ட் சின்னம் வரை - இது நடந்தால் அது நடந்திருக்கும்!

தினகரன் தொப்பிச் சின்னத்தை தேர்ந்தெடுத்து தொப்பியைப் போட்டுதான் தாக்கல் செய்யப் போனார். அதே மாதிரி சம் மெடிக்கல் மிராக்கிள் ஆகி தொப்பிக்கு பதில் வேற  சின்னம் கொடுத்திருந்தால் எப்படி இருக்கும்?

டி.டி.வி.தினகரன்

சபத சின்னம் :

சின்னம்

இரட்டை இலையை முடக்கியதால் வேற சின்னத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம். இவங்க செய்த செய்கையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது அவங்களுக்கு 'சபதச் சின்னத்தை' கொடுத்திருந்தால் சின்னம்மாதான் முதல்ல ஹேப்பி பாஸ். சின்னத்தோட டெம்ப்லேட்டுக்கு வேறு எங்கேயும் போய் கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவங்க சபதம் பண்ணினதையே டெம்ப்லேட்டா வெச்சுக்கலாம். சபதச் சின்னம் கெடச்ச அப்பறம் ஒருவேளை வேட்புமனு தாக்கல் பண்ண வந்திருந்தா எப்படி வந்துருப்பாங்க? வீட்ல ஆரம்பிச்சு வேட்புமனு தாக்கல் பண்ற இடம் வரைக்கும் சபதம் பண்ணிட்டே வந்துருப்பாங்க. 'நான் ஜெயிப்பேன்... நான் ஜெயிப்பேன்... நான் ஜெயிப்பேன்...'னு  மூணு தடவை பண்ணியிருப்பாங்க. மூணுதான் அவங்களுக்கு லக்கி நம்பர். 

குபேர சின்னம் :

சின்னம்

அவங்க கட்சியில் இருக்கும் எல்லாருமே சும்மா அம்பானிக்கே சவால் விடும் அளவுக்குப் பணக்காரங்க. என்ன? சின்னம்மா கொஞ்சம் ஓவரா சவால் விட்ருப்பாங்க போல. அதான் சொத்துக் குவிப்பு வழக்குல அரெஸ்ட் பண்ணிட்டாங்க பாவம். ஒருவேளை தொப்பிக்கு பதில் குபேரச் சிலையை சின்னமாகக் கொடுத்திருந்தால் எப்படி வந்திருப்பாங்க? அதே மாதிரி வீட்ல ஆரம்பிச்சு தாக்கல் பண்ற இடம் வரைக்கும் எத்தனை வீடுகள் இருக்கோ? (ஆர்.கே.நகரில் மட்டும்) அத்தனை வீடுகளுக்கும் ஒவ்வொரு குபேரச் சிலை பார்சல் பண்ணிருப்பாங்க. அடச்சே இதை சின்னமா அறிவிச்சுருந்தா ஒரு குபேரச் சிலை ஃப்ரீயா கிடைச்சுருக்குமே... நாமும் பணக்காரன் ஆகிருக்கலாமே

ஆட்டோ சின்னம் :

சின்னம்

மக்களின் நண்பன் ஆட்டோக்காரன்தான்னு 'பாட்ஷா' படத்துல நம்ம தலைவரே சொல்லியிருக்கார். அதனால ஆட்டோவைக் கட்சி சின்னமாக அறிவிச்சுருந்தா வீட்ல இருந்து தாக்கல் பண்ற இடம் வரைக்கும் ஆட்டோவிலே வந்துருப்பாங்க. எவ்வளவு எளிமையா இருக்காங்க ஆட்டோவிலேயே வர்றாங்கனு மக்கள்கிட்ட இருந்து அனுதாப ஓட்டும் கிடைச்சுருக்கும். ஜஸ்ட் மிஸ் ப்ரோ. கவலைப்படாதீங்க. எப்படியும் சில வருஷத்துல சின்னத்தை முடக்கிருவாங்க. அதுக்கு அப்புறம் ஆட்டோ சின்னத்தை குத்தகைக்கு எடுத்துடலாம். ஆல் தி பெஸ்ட். 

போயஸ் கார்டன் சின்னம் :

வம்சாவளியாக போயஸ் கார்டனிலேயே இருப்பதால் எலெக்‌ஷன் கமிஷன் பரிதாபப்பட்டு போயஸ் கார்டைனேயே கொடுத்து விடலாம் என்று முடிவு செய்திருந்தால்... அதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று போகும் வழியில் இருக்கும் எல்லா கார்டனிலும் 30 நிமிடங்கள் தியானம் செய்துவிட்ட பிறகு வேட்புமனுவைத் தாக்கல் செய்வது, அப்படி இல்லையென்றால் வேட்புமனுவை போயஸ் கார்டனிலேயே செய்ய ஏதாவது வழி இருந்தால் அதைச் செய்து பார்ப்பது. இந்த ஆப்ஷன் ரொம்பக் கஷ்டம் பாஸ். நீங்க முதல்ல சொன்னதையே பண்ணிப் பாருங்க.

ரிசார்ட் சின்னம் :

இருக்கிறதிலேயே இந்தச் சின்னத்தைக் கொடுத்திருந்தாலும் சின்னம்மா முதல் அவர்களது ஆதரவாளர்கள் வரை எல்லாரும் குஷியாகவும் ஜாலியாகவும் இருந்திருப்பார்கள். ஏனென்றால் ஒட்டுமொத்த செண்டிமென்டுமே அவர்களுக்கு இங்குதான் இருக்கிறது. ஒட்டுமொத்த எலெக்‌ஷன் கமிஷனையும் கூவாத்தூரில் இருக்கும் ரிசார்டிற்கு மாற்றியிருப்பார்கள். சின்னத்தில் கூவாத்தூர் என்ற வார்த்தை மிகமிக முக்கியம். அப்போதான் அந்தச் சின்னம் முழுமையடையும். வேட்புமனு தாக்கல் செய்யப் போகும்போது ஒரு விசிட் ரிசார்ட் பக்கம் வண்டியை விட்டு அங்கு போய்விட்டுதான் அடுத்த வேலையே... அது வேட்பு மனுத்தாக்கலா இருந்தாலும் சரி! 

சின்னம்மாவுக்கு வேற என்ன சின்னமெல்லாம் அலாட் பண்ணலாம்? கமெண்ட் பண்ணுங்க.

 

- தார்மிக் லீ


டிரெண்டிங் @ விகடன்