2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ: தேதிகள் அறிவிப்பு!

 

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ நடப்பது வழக்கம். வெற்றிகரமான 2016-ம் ஆண்டைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டுக்கான ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் தேதிகள் மற்றும் இடம் ஆகியவை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 9 - 14, 2018 ல், நொய்டாவில் இருக்கும் இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் மோட்டார் ஷோவும்; பிப்ரவரி 8 - 11, 2018ல், டெல்லி பிரகதி மைதானத்தில், ஆட்டோ உதிரிப்பாகங்களுக்கான ஷோவும் நடைபெற உள்ளன.

 

  

 

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ, 2016ல் வழக்கம்போல ஒரு வார காலம் நடைபெற்றது. 6.01 லட்சம் பேர் ஆட்டோ எக்ஸ்போவை நேரில் வந்து பார்த்துள்ளனர். அதாவது, ஒரு நாளைக்கு சுமாராக 85 ஆயிரம் பேர்! மேலும் 65 நிறுவனங்கள், 108 புதிய தயாரிப்புகளை இங்கே காட்சிப்படுத்தினார்கள் என்பது கவனிக்கத்தக்கது. இதில், காட்சிக்கு வைக்கப்பட்ட வாகனங்களில் சில, ஏற்கெனவே விற்பனைக்குக் களமிறங்கிவிட்டன. கடந்த ஆட்டோ எக்ஸ்போவைவிட, இந்தமுறை புதிய நிறுவனம் - தயாரிப்புகளின் எண்ணிக்கை போன்றவை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!