வெளியிடப்பட்ட நேரம்: 15:12 (24/03/2017)

கடைசி தொடர்பு:15:42 (24/03/2017)

ஸ்டாலின், சீமான், வைகோ... இவங்களுக்கெல்லாம் சின்னம் மாத்துனா எப்படி இருக்கும்? #VikatanFun

இரண்டாம் வகுப்பு பசங்க மிட்டாய்க்கு சண்டை போட்டுக்கிற மாதிரி 'அம்மாவுக்குப் பிறகு அ.இ.அ.தி.மு.க-வின் இரட்டை இலை எனக்குதான் வேணும்'னு அம்மா அ.தி.மு.க-வும், புரட்சித்தலைவி அம்மா அ.தி.மு.க-வும் சண்டை போட்டாங்க. இவங்களுக்கு நடந்த மாதிரியே மத்த கட்சிகளுக்கும் சின்னம் மாத்துறோம்னு தேர்தல் ஆணையம் திடீர்னு அறிவிச்சா என்ன பண்ணுவாங்க? படித்துப் பயன்பெறுக மக்களே!

சின்னம்


 * புதுசா சின்னம் மாத்தியிருந்தாலும் பரவாயில்ல, உங்க பங்குக்கு நீங்களும் மாத்துங்க உங்க சின்னத்தைனு நம்ம பன்னீர்செல்வம் ஐயாகிட்ட சொன்னா உடனே அவர் நினைவுக்கு வருவது அவரைப் போலவே குனிந்து, வளைந்து நிற்கும் ஈமு கோழி. ஹெலிகாப்டர் தொடங்கி கார் வரை சத்தம் கேட்டாலே பாரபட்சம் பார்க்காம குனிஞ்சு வணக்கம் வெச்ச ஓ.பி.எஸ் அணிக்கு இதைவிட சிறந்த சின்னம் இருக்க முடியுமா என்ன? 
       
* ஒரு அ.தி.மு.க-வை சொல்லிட்டு இன்னொன்னை விட முடியுமா? அவங்களுக்குக்காக இருக்கவே இருக்கு 'பாத்திரக்கடை' சின்னம். ஒவ்வொரு பாத்திரத்திலேயும் சின்னம்மா ஸ்டிக்கர் ஒட்டியிருந்தா இன்னும் சிறப்பா இருக்கும். பார்த்துப் பண்ணுங்க ஆபீஸர்ஸ்!
      
* அடுத்ததா வர்றது நம்ம எதிர்க்கட்சி. சமீபத்துல பயங்கரமா ட்ரெண்டானது எதிர்கட்சித் தலைவரோட காஸ்ட்யூம்தான். அதனால இவங்களுக்கான சின்னம் திருப்பூர் பனியன்கள். எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது. வீட்டுக்கே வந்து சிறப்பான முறையில் டோர் டெலிவரி செய்யப்படும். ச்சை! இதென்ன கட்சிச் சின்னம் கமர்ஷியல் விளம்பரம் மாதிரி ஆகிப்போச்சு.
      
* எதிர்க்கட்சிக்கு பனியன்னா அவங்களோட கூட்டணி கட்சிக்கும் ஏதாவது டிரெஸ் சின்னம்தானே தரணும்? அதானே நியாயம்! கொஞ்ச நாளா அமைதியா இருந்த காங்கிரஸ் கோஷ்டிகள் இப்போ முழு வேகத்துல சண்டை போட ஆரம்பிச்சிருக்காங்க. எக்கச்சக்க வேஷ்டிகள் கிழிபட இருக்கிறதால அந்தக் கட்சிக்கு வேஷ்டி சின்னத்தைப் பரிந்துரை செய்கிறோம்.
       
* எவ்வளவு முயற்சி செய்தாலும் அடங்காம ஊர் சுற்றும் கால்களைக் கொண்ட மோடிஜி தான் பா.ஜ.க-வுக்கு ஹீரோ என்பதால் அவங்களுக்கு கண்டிப்பா ஃபிளைட் சின்னம்தான். அதுவும் பதஞ்சலி நிறுவனத்தால் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஃப்ளைட். இந்தச் சின்னத்துக்கு பா.ஜ.க தலைவர்கள் ஓட்டு கேட்கப் போற அழகை யோசிச்சாலே கண்ணைக் கட்டுதே!
       
* ஃபார்ம் அவுட்ல இருக்கிற கேப்டனுக்கும் ஏதாவது சின்னம் ஒதுக்கலாம்னு நாக்கு நமநமங்குது. ஆனா டென்ஷனாகி தூக்கியடிச்சா என்ன பண்றதுன்னு சைலன்ட்டா ஒதுங்கிக்கிறோம்.

* 'தமிழ், தமிழ், தமிழ். கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தமொழி தமிழ்டா.... தமிழண்டா. கெத்துடா.... மத்ததெல்லாம் வெத்துடா'னு சும்மாவே இவர் பேசுறது கடல் தாண்டி இலங்கை வரை கேட்கும். இதுல மைக் பிடிச்சுப் பேசுனா கேட்கவா வேணும்? அதனால அண்ணன் சீமான் அண்ட் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம். 

* அடுத்ததா லைன்ல நிற்கிறது தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவர் வைகோ. கட்சிகளை வான்ட்டடா வண்டியில் ஏற்றி அப்புறம் கழட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிற அண்ணன் இந்தத் தேர்தல் நேரம் சீமைக்கருவேலத்தை ஒழிக்கிறதுல பிஸியா இருக்கிறதால அவருக்கு அந்த மரத்தையே சின்னமா அறிவிச்சுடலாம்.

* கடைசியா மக்கள் கண்டுக்கவே இல்லைனாலும் நாங்களும் ஆட்டத்துல இருக்கோம்னு ஒவ்வொரு தேர்தல்லேயும் களமிறங்கிற சுப்ரீம் ஸ்டாரோட சமத்துவ மக்கள் கட்சிக்கு பஸ் சின்னத்தைப் பரிந்துரைக்கிறோம். ஒரே பாட்டுல பணக்காரர் ஆகிறப்போ, ஒரே எலெக்‌ஷன்ல சி.எம் ஆக முடியாதா? ஓ... முடியாதுல்ல.. அட இருக்கட்டும் பரவாயில்லை!

இப்படியெல்லாம் கட்சி இருக்கானு யோசிக்கிற மாதிரி இன்னும் நிறைய குறுநில, சிறுநில கட்சிகள் எல்லாம் இருக்காங்க. இப்போ சொன்ன சின்னங்களுக்கே உங்களுக்கு லேசா மயக்கம் வருமே! அதனால பாவம் பார்த்து உங்களை விட்டுடுறோம். பொழச்சுப் போங்க மக்களே!

செ.சங்கீதா,

மாணவப் பத்திரிகையாளர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்